தேவையான பொருட்கள்:

இறால் - ஒரு கப்
பொட்டுக்கடலை - கால் கப்
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - அரை கப்
சின்ன வெங்காயம் - அரை கப்
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  இறாலையும் நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் விழுதுடன் அரைத்த இறால், மிளகாய்த் தூள், சோம்பு தூள், மஞ்சள் தூள், உப்பு, நறுக்கின வெங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி கையில் வைத்து தட்டி எண்ணெயில் போட வேண்டும். இரு பக்கமும் வெந்ததும் எண்ணெயை வடித்து விட்டு எடுக்க வேண்டும்.  இப்போது வடை தயார்.

Pin It