தேவையானவை:

potato_curry_380உருளைக் கிழங்கு...........................1/4 கிலோ
பச்சைப் பட்டாணி...........................150 கிராம்
காலி பிளவர்.................................... .150 கிராம்
பெல்லாரி.............................................3
பச்சை மிளகாய்................................5
சீரகம்..................................................1 தேக்கரண்டி
தேங்காய்............................................1 மூடி/ஒன்று
பட்டை.................................................சிறு துண்டு
கிராம்பு.................................................2
எலுமிச்சை........................................1 மூடி
எண்ணெய்.........................................3 தேக்கரண்டி
உப்பு .....................................................தேவையான அளவு
கறிவேப்பிலை...................................ஒரு கொத்து
மல்லி தழை........................................கொஞ்சம்
புதினா..தேவையானால்...................கொஞ்சம்

செய்முறை:

உருளைக் கிழங்கை வேகவைத்து வேண்டிய அளவில் நறுக்கவும். பச்சைப் பட்டாணியை உரித்து வைக்கவும். காலிபிளவரை கொஞ்சம் பெரிதாகவே நறுக்கி வைத்துக் கொள்ளவும். பெல்லாரியை நீளவாக்கில் நறுக்கவும். தேங்காயை மிக்சியில் போட்டு, அரைத்தபின் கொஞ்சம் வெந்நீர் ஊற்றி பால் எடுத்தால், தேங்காயில் பால் தங்காமல் வரும். இப்படி மூன்று முறை பால் எடுக்கவும். பச்சை மிளகாய், சிரகத்தை நைசாக அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு போட்டு சிவந்ததும் நறுக்கிய வெங்காயம் +பச்சைப் பட்டாணி+உப்பு போட்டு வதக்கவும். பின் அதிலேயே காலிபிளவர் போட்டு லேசாக வதக்கியபின் உருளையைப் போட்டு, மூன்றாவது பால் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இரண்டாம் பாலையும் ஊற்றி கொதிக்க விடவும். பின் கூட்டு கெட்டியானதும், முதல் பாலை ஊற்றி கொதிவந்ததும், கறிவேப்பிலை, மல்லி தழை , புதினாவை நறுக்கிப் போட்டு இறக்கி விடவும்.

தேங்காய்ப்பால் அதிகம் வேண்டாம் என நினைப்பவர்கள், சோளமாவைக்( corn flour) கரைத்து ஊற்றலாம். சுவை குன்றாது. இறக்கிய பின் எலுமிச்சையை பிழிந்து விடவும்.

இந்த உருளை பட்டாணி தேங்காய்ப் பால் கூட்டு, சப்பாத்தி, பூரி, தோசை, ஆப்பத்துக்கு தூள் டக்கராய் இருக்கும்...! சாம்பார் சாதம், புளி சாதம், தக்காளி சாதம், புலவு எதற்கு வேண்டுமானாலும் அருமையான துணை..!

Pin It