தேவையானவை:

புளிக்காத தயிர்/மோர்.........2 டம்ளர் 
மல்லித் தழை ............கொஞ்சம்
கறிவேப்பிலை........... கொஞ்சம்
புதினா.......................... கொஞ்சம்
சீரகம்............................ கொஞ்சம்
இஞ்சி............................ கொஞ்சம்
காயம்.............................. கொஞ்சம்
ப.மிளகாய்......................1 /2
உப்பு..................................தேவையான அளவு
ஐஸ் ................................. .தேவையான அளவு 

செய்முறை:

சீரகம் + இஞ்சியை நன்றாகத் தட்டிக் கொள்ளவும். மிக்சியில் மோர் தவிர அனைத்துப் பொருள்களையும் போட்டு இரண்டு சுற்று சுற்றவும். அதில் மோர்/தயிர் கலந்து வேண்டிய அளவு நீர் விட்டு தேவையானால் ஐஸ் போட்டு பரிமாறவும்.
 
மேலே குறிப்பிட்ட அத்தனை பொருட்களும் வேண்டும் என்பதில்லை. இருக்கிறதை வைத்துக்கொண்டு நீர் மோர் தயாரிக்கலாம்.

Pin It