தேவையானவை:

Macaroni_vegetable_raitha_370மாக்கரோனி.............................1 பாக்கெட்/200 கிராம்
பெல்லாரி...................................2
இஞ்சி..........................................1/2 இன்ச் நீளம்
பச்சை மிளகாய்........................4
காய்ந்த மிளகாய்.....................3
காரட்..........................................2
பீன்ஸ்.........................................10
முட்டைகோஸ்.நறுக்கியது...ஒரு கைப்பிடி
காலிபிளவர்..நறுக்கியது...........ஒரு கைப்பிடி
பச்சை பட்டாணி/ உலர்ந்த பட்டாணி, ஊறவைத்து, வேகவைத்தது.. ஒரு கைப்பிடி
வெள்ளை பூசணி......நறுக்கி......ஒரு கைப்பிடி
சுரைக்காய்..நறுக்கியது...............ஒரு கைப்பிடி
தேங்காய்ப்பூ தேவையானால்....2 தேக்கரண்டி
கறிவேப்பிலை............................... 2 கொத்து
மல்லி தழை......................................கொஞ்சம்
புளிக்காத தயிர்.................................4 கப்
சீனி......................................................2 தேக்கரண்டி
கடுகு...................................................1/2 தேக்கரண்டி
சீரகம்..................................................1/2 தேக்கரண்டி
உ.பருப்பு..............................................1/2 தேக்கரண்டி
எண்ணெய் ...........................................2 தேக்கரண்டி

செய்முறை:

இஞ்சி, வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயையும் லேசாக கீறி வைக்கவும். கறிவேப்பிலை, மல்லியை பொடியாக நறுக்கவும். அனைத்து காய்களையும் சிறிதாக நீளவாக்கில், வெட்டவும். எந்த காயையும் சேர்த்துக்கொள்ளலாம்.தக்காளி வேண்டாம்.சிவப்பு&மஞ்சள் குடமிளகாய் கிடைத்தால் சேர்க்கவும். காய்களை ஒரு குக்கரில் போட்டு, அதில் 2 தேக்கரண்டி மட்டும் நீர் +காய்க்கான உப்பு போட்டு மூடி, ஒரு விசில் வந்ததும், உடனே இறக்கி ஆவியை வெளியேற்றவும்.
 
அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தில் நீர் ஊற்றி, அதில் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு, அதிலேயே மாக்கரோனியையும் போட்டு 10 நிமிடம் கொதிக்கவிடவும். பின்னர் மாக்கரோனியை மட்டும் நீரின்றி வடித்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிவப்பு மிளகாய், கடுகு, உ.பருப்பு, சீரகம் போட்டு சிவந்ததும் அதில் நறுக்கியஇஞ்சி, வெங்காயம் +பச்சை மிளகாய் போட்டு லேசாக வதக்கவும், பின்னர் தேவைப்பட்டால் தேங்காய்ப் பூ சேர்க்கவும். அதிலேயே, நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி போட்டு அதில் தயிரை ஊற்றவும். தீயை நிறுத்திவிடவும். இதில் 2 தேக்கரண்டி சீனி போட்டு, பின் வெந்த மாக்கரோனி +காய்கறிகள் போட்டு கிளறவும்..!
 
மாக்கரோனி, காய்கறி ரைத்தா ரொம்ப சுவையும், சத்தும் மிகுந்தது. தேவைப்பட்டால் மாக்கரோனி, காய்கறி ரைத்தாவை குளிர்பதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்தும் சாப்பிடலாம். செய்த உடனேயும் சாப்பிடலாம். இதன் மேல் காராபூந்தி தூவியும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இந்த உணவு கோடைகாலத்தில் மிகவும் நல்லது..! காலை உணவாக உண்ணலாம். ..! சத்தான, எண்ணெய் மிகக் குறைவாக உள்ள டக்கரான உணவு..! சுவை அற்புதமாய் இருக்கும்.

Pin It