தேவையானவை:
 
கத்தரிக்காய்...................1 /4 கிலோ
வெங்காயம்...................10
மிளகாய் பொடி..............1 /2 தேக்கரண்டி
சீரகப் பொடி.....................1 /2 தேக்கரண்டி
எண்ணெய்.......................2 தேக்கரண்டி
கடுகு, உ.பருப்பு................1 /2 தேக்கரண்டி
கறிவேப்பிலை.................1 கொத்து
உப்பு ...................................தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காயை கொஞ்சம் சிறியதாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு போட்டு பொரிந்ததும், வெங்காயம் + கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கத்தரிக்காய், மிளகாய், சீரகப் பொடி + உப்பு போட்டு நன்றாக வதக்கவும். தீயை குறைத்து வைக்கவும். கத்தரிக்காய் வெந்ததும் இறக்கி விடவும்.

Pin It