சிக்ரிட் அன்செட் டென்மார்க்கில் உள்ள ஹாலுண்ட்பர்க் என்னுமிடத்தில், 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 – ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் எங்வால்டு மார்டின் அன்சென்ட் என்பதாகும். அவர் ஒரு தொல் பொருள் ஆராய்ச்சியாளர். சிக்ரிட் அன்செட்டின் தந்தையார், வடக்கு அய்ரோப்பியாவில் இரும்பு காலம் தோன்றியதைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற ஒரு பேராசிரியர். இவர் டென்மார்க்கில் உள்ள கிறிஸ்டியானியா பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் பணி புரிந்தார்.

standard undsetசிக்ரிட் அன்செட்டின் குடும்பம் ஆராய்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியது. மரவு வழி வந்த வரலாறு, பண்டை கால வரலாறு, நார்வே நாட்டு தொல்பொருள் மற்றும் வரலாறு சம்பந்தமான தகவல்கள் ஆகியவற்றை இவரின் தந்தை வீட்டில் சேகரித்து வைத்து இருந்தார்.

சிக்ரிட் ஒரு தரமான தனியார் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். புதிய பாடத்திட்டங்களுடன், புதிய சிந்தனைகளும் அங்கே போதிக்கப்பட்டது. கல்வி மீது தீராத ஆர்வம் கொண்டு, கல்வியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தார். இவரின் தந்தை திடீரென்று 1893 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரின் தாயார் கிறிஸ்டியானியா பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.

மின்சார கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் தமது பதினேழாவது வயதில் வேலைக்குச் சேர்ந்து பத்து ஆண்டுகள் பணி புரிந்தார். இவர் பணிபுரிந்து கொண்டே Fru marte oulie’, ‘The Happy Age’ முதலிய இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டார்.

இவரின் கதைகள் பழங்கால வரலாற்றுப் பிண்ணனியை அடிப்படையாகக் கொண்டு விளங்கின. பெண்களின் மனதில் உள்ள சமச்சீரற்ற சிந்தனைகள் குறித்தும், சமகாலத்தில் வாழ்ந்த அடித்தட்டு மக்களிடையே உள்ள பழக்க வழக்கங்களையும் தனது எழுத்துக்களில் பதிவு செய்தார். இது போன்ற கருத்துக்களைக் கொண்ட ‘The Jerney’, ‘Images in Mirror’’ முதலிய கதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்டார்.

இவர் பழங்கால நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு நீண்ட கதையை எழுதி, ‘The Garland’, ‘The mistress of Husaby’, ‘The cross’ முதலிய மூன்று தொகுதிகளாக எழுதி வெளியிட்டார்.

இவரது நாவல்கள் சுதந்திரத்திற்கான எழுச்சி, மக்கள் ஒற்றுமை, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு முதலிய கருத்துக்களை வெளிப்படுத்தின.

‘The Master of Hestviken’ என்ற நாவல் நான்கு தொகுதிகளை கொண்டதாகும்.

சிக்ரிட் அன்செட் இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1928 ஆம் ஆண்டு பெற்றார். இவர் நேபால் பரிசைப் பெற்றப் பின்னர் மிகுந்த உற்சாகத்துடன் தொடர்ந்து, “The Wild Orchid’ ‘The Burning Bush’, ‘Ida Elisabeth’, ‘The Faithful  Wife’, ‘Madame Dorathea’ முதலிய நாவல்களையும், தமது வாழ்க்கை வரலாற்றையும் எழுதி வெளியிட்டார்.

இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மன் நாட்டு ஹிட்லரின் நாஜிப் படைகள் நார்வே நாட்டை ஆக்கிரப்பு செய்ததையொட்டி, அமெரிக்க நாட்டிற்குச் சென்று குடியேறினார். இரண்டாம் உலகப் போர் முடியும்வரை அமெரிக்காவில் தங்கியிருந்தார். அங்கிருந்து கொண்டே பல நாவல்களை எழுதினார்.

ஹிட்லரின் நாஜிப்படை நார்வே நாட்டை விட்டு தாமே வெளியேறவேண்டும், இல்லையெனில் மக்கள் அணிதிரன்டு விரட்டியடிக்க வேண்டும் எனக் குரல் எழுப்பினார். பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் ஹிட்லரின் போர் வெறிக்கெதிராக, ஆவேசமாக உரை நிகழ்த்தினார்.

நார்வே நாட்டு இலக்கிய வளர்ச்சியில் பாடுபட்ட சிக்ரிட் அன்செட் 1949 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 10 ஆம் நாள், தமது 65 வது வயதில் இயற்கை எய்தினார். டென்மார்க் நாட்டில் இவரது இலக்கியங்கள் மக்கள் மத்தியில் இன்றும் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன.

- பி.தயாளன்

Pin It