"தேடுவாரற்று, நாடுவாரற்று, போற்றுவாரற்று ஒரு சிலரின் பழைய பெட்டகங்களிலும், வீட்டுப் பரண்களிலும் முடங்கிக் கிடந்த இஸ்லாமியத் தமிழ் நூல்களையும், ஏட்டுச் சுவடிகளையும் தேடிக் கண்டுபிடித்து, அவற்றைத் தமிழுலகுக்கு மீள அறிமுகம் செய்து, அவற்றுக்குப் புதுப்பொலிவும் புது வாழ்வும் வழங்கியவர்."

mm uvaish"தமது ஆய்வுகள் மூலம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ் நூல்களை உலகத்தார் பார்வைக்கு முன்வைத்து, இஸ்லாமியச் சமூகத்தைப் பீடித்திருந்த ஈன நிலையை முற்றாக அகற்றி, அவர்களுக்கு கண்ணியத்தையும், கௌரவத்தையும் கொடுத்தவர். அவர் ஆரம்பித்த காலத்தில் ஆரம்பிக்காதிருந்தால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பெருந்தொகையான நூல்களை நிரந்தரமாக இழந்திருக்கும். உயர்வான ஒர் இலக்கியப் பாரம்பரியத்தை அழிவில் இருந்து பாதுகாத்து, அதனை இஸ்லாமியச் சமூகத்துக்கு வழங்கியவர்."

"புதைப் பொருளாக, குடத்து விளக்காகக் குன்றிப் பயனற்றுக் கிடந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களை அகழ்ந்தெடுத்து ஆராய்ச்சி செய்து உலகுக்கு அளித்தவர்."

"இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் செம்மையையும் செழுமையையும், வளத்தையும், வனப்பையும் உலகறியச் செய்தவர்."

மேற்கண்ட பணிகளை மேற்கொண்ட பெருமை பெற்றவர் இஸ்லாமியத் தமிழ்ப் பேரறிஞர் .மு. உவைஸ் ஆவார்.

.மு. உவைஸ் இலங்கையின் தலைநகரான கொழும்புக்கு அருகில் உள்ள பாணந்துறையில் உள்ள கொரக்கான என்னும் சிறிய கிராமத்தில் முகமது லெப்பை- சைனம்பு நாச்சியார் வாழ்வினையருக்கு மகனாக 15.01.1922 ஆம் நாள் பிறந்தார்.

தமது தந்தையாரிடம் அரபு மொழிக் கல்வியையும், மார்க்கக் கல்வியையும் கற்றார். பின்னர், இன்று ஜீலான்; முஸ்லிம் மகா வித்தியாலயம் என்று அழைக்கப்படும், அன்றைய ஹேனமுல்ல அரசினர் தமிழ்ப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றார். சரிக்காமுல்லையில் தக்ஸலா வித்தியாலயம் என்னும் ஆங்கிலப் பாட சாலையில் கல்வி பயின்றார். அங்கு பயிலும் போது சிங்கள மொழியையும் பாளி மொழியையும் கற்றார்.

பாணந்துறையில் புனித யோவான் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். பின்னர், அதே கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுகப் படிப்பில் சேர்ந்து தமிழ், சிங்களம், வரலாறு, ஆட்சியியல் முதலிய பாடங்களைப் படித்து தேர்ச்சியடைந்தார்.

இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1946 ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிய பேராசிரியர், ‘முத்தமிழ் வித்தகர்தவத்திரு விபுலாநந்த அடிகளாரின் வழிகாட்டலும், ஊக்கமும் உவைசுக்கு பேருதவியாக அமைந்தது. அடிகளாரின் வேண்டுகோளின்படி தமிழ் மொழியில் சிறப்புப் பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.

உவைசுக்கு பல்கலைக் கழக நிதி உதவியும், முஸ்லிம் கல்விச் சகாயநிதி உதவியும் கிடைத்தது. அதைக் கொண்டு தமது கல்வியைத் தொடர்ந்தார்.

"தமிழைப் பல்கலைக் கழகத்தில் ஒரு பாடமாகப் பயிலுவோர், பிறரால் இழிசனர் என்று இகழப்பட்டு வந்த காலத்திலே, தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்றார் உவைஸ்."

தமிழில் கலைமாணிப் பட்டத்தை (இளங்கலை) 1949 ஆம் ஆண்டு பெற்றார். பின்னர் தமிழ் முதுமாணிப் பட்ட (முதுகலை) பாடத்தைப் படிக்க பதிவு செய்தார். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ‘இஸ்லாமியரின் தமிழ்த் தொண்டுஎன்னும் ஆய்வேட்டையும் சமர்ப்பித்தார்.

தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்புஎன்னும் தலைப்பில் முதுமாணிப் பட்டத்திற்குரிய (முது கலைப்பட்டம்) ஆய்வைச் சமர்ப்பித்து 1951 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.

தமது முதுகலைப் பட்ட ஆய்வில், இஸ்லாமிய இலக்கியங்களின் எண்ணிக்கை, அவற்றின் இலக்கியத் தரம், தமிழிலக்கியப் பரப்பிலும் வரலாற்றிலும் அவற்றிற்குரிய இடம், இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பிரிவுகள், வடிவங்கள் அவற்றின் உள்ளடக்க விடயங்கள் என்று பல்வேறு அம்சங்களை அடக்கியிருந்தார். மேலும், அவரது ஆய்வுக் கட்டுரையில், இலக்கிய வடிவங்கள், உரைநடையாக்கங்கள் மற்றும் சூஃபி ஞானியாரும் அவர்களின் பாடல்களும், இஸ்லாமிய இறையியல் நூல்களும், ஒழுக்கவியல் நூல்களும் என்ற பிரிவுகள் குறித்து விரிவாக விளக்குயுள்ளார்.

இஸ்லாமியர்கள் தமிழிலக்கிய மரபிற்குப் புதிதாகத் தந்த படைப்போர், மஸ்அலா, முனாஜாத், நாமா, கிஸ்ஸா முதலிய புதிய இலக்கிய வடிவங்களை ஆராய்ந்துள்ளார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை மதிப்பீடு செய்திட, தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உவைஸ் தமிழகத்திற்கு வருகை தந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரபு, பாரசீக, இஸ்லாமிய இயல் பேராசிரியர் டாக்டர் நயினார் முகமது அவர்களைச் சந்தித்து இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வு குறித்து கலந்துரையாடினார். மேலும், கீழக்கரைக்குச் சென்று அஹமது ஆலிம் புலவரைச் சந்தித்து இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றார்.

இலங்கை திரும்பிய பின்னர், கொழும்பிலும், அதன் சுற்றியுள்ள ஊர்களிலும் இருந்த இஸ்லாமிய புத்தகக் கடைகளுக்குச் சென்று தேடி, தமக்குத் தேவையான நூற்களின் பட்டியலை தயார் செய்து, இலங்கைப் பல்கலைக் கழகத்தில் அளித்து, அங்குள்ள நூலகத்திற்கு வாங்கச் செய்தார். அந்நூல்களை தமது ஆய்வுக்கும் பயன்படுத்திக் கொண்டார் உவைஸ்.

இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1962 ஆம் ஆண்டு தமது முனைவர்பட்ட ஆய்வுக்காக, ‘தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியக் காப்பியங்கள்என்னும் தலைப்பை பதிவு செய்தார். இவரது ஆய்வுக்கு நெறியாளராக விளங்கிய பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் தீடீர் மறைவினால் ஆய்வு தற்காலிகமாக நின்றுவிட்டது. இலங்கைப் பல்கலைக் கழகத்தமிழ்த் துறைத் தலைவராக பேராசிரியர் சு. வித்தியானந்தன் நியமனம் செய்யப்பட்ட பின்பு 1971 ஆம் ஆண்டு தமது ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு 1975 ஆம் ஆண்டு ஆய்வை சமர்ப்பித்து முனைவர் பட்டம் (கலாநிதி) பெற்றார். தமிழ்த்துறையில் முனைவர் (கலாநிதி) பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் என்ற பெருமையைப் பெற்றார்.

தமது முனைவர் பட்ட ஆய்வில் தண்டியலங்காரம் கூறும் காவிய இலக்கணங்களுக்கு ஏற்ப இயற்றப்பட்டுள்ள பன்னிரெண்டு இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

 உவைஸ் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் கொழும்பு சாஹிராக் கல்லூரியிலும், வித்தியோதயாப் பல்கலைக் கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். நவீன கீழைத்தேய மொழித்துறையின் தலைவராகப் பணி புரிந்தார். இலங்கை சாகித்திய மண்டல உறுப்பினராகவும் செயற்பட்டார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.

உவைஸ், இலங்கை மருதமுனையில் 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு, ‘முஸ்லிம் தமிழ் இலக்கிய மரபுஎனும் தலைப்பில் மிக ஆழமான ஆய்வுக் கட்டுரையினை வாசித்தளித்தார்.

சென்னையில் 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு, அம்மாநாட்டில் நடைபெற்ற உலகத் தமிழ்க் கருத்தரங்கில்தமிழிலுள்ள முஸ்லிம் பிரபந்தங்கள்எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசித்தார்.

திருச்சியில் 1973 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு, ‘இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள்என்ற தலைப்பிலும், ‘திருக்குர்ஆனும் முஸ்லிம்களின் தமிழ்ப் பேச்சு வழக்கும் இலக்கிய வழக்கும்என்ற தலைப்பிலும் சிறந்த இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை அளித்தார்.

சென்னையில் 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு, ‘ஈழத்து முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பயன்படத்தப்படும் செந்தமிழ்ச சொற்கள்என்ற ஆய்வுக் கட்டுரையை அளித்தார்.

சென்னையில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற சீறாப்புராண கருத்தரங்கில் கலந்து கொண்டு, ‘சீறாவில் வரலாற்றுக் குறிப்புகள்’, சீறாவில் அரபு, பாரசீகச் சொற்கள்என்ற தலைப்பில் ஆழமான ஆய்வுக் கட்டுரை அளித்து உரையாற்றினார்.

காயற்பட்டிணத்தில் 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டுமுஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள் - புலவரும் புரவலரும்’ ‘காயற்பட்டிணம் வளர்த்த தீன் தமிழும் தீந்தமிழும்என இரண்டு தரமிக்க ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தளித்தார்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் 1979 ஆம் ஆண்டு ஜீன் மாதம் நடைபெற்ற நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தினார் உவைஸ்.

கீழக்கரையில் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் காப்பியக் கருத்தரங்கிற்கு தலைமையேற்று, ‘பதினைந்து ஆண்டுகளில் ஒன்பது காப்பியங்கள்என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.

நீடுரில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டிலும் உவைஸ் கலந்து கொண்டு ஆய்வுரையாற்றினார்.

ஒரு மொழியின் இலக்கிய வளர்ச்சிக்கும், அவ்விலக்கியம் தொடர்பான மாநாடுகள் ஆற்றும் உதவிகளின் தன்மையை, ‘மருதை முதல் வருதை வரைஎனும் தனது நூலில் பின்வருமாறு விளக்கியுள்ளார் உவைஸ்.

"ஓர் இலக்கியம் வளர அது பரப்பப்பட வேண்டும். அது பற்றி ஆய்வுகள் நடத்தப்படல் வேண்டும். அடிக்கடி இலக்கிய உரையாடலுக்கு இலக்காக்கப்படல் இன்றியமையாதது, பழைய கருத்துக்கள் கவனமாக அலசி ஆராய்தல் நிகழ்த்தப்படின், அது புது மெருகூட்டப்படும். புதுக்கருத்துக்கள் புகுத்தப்படின் புதுப் பொலிவு பெறும். அதனைப் பயிலும் மக்களின் உள்ளங்களில் அது பதிந்துவிடும். அது அழிந்திடாது வாழும். வளம் பெற்று வளர்ச்சி அடையும்."

காயற்பட்டிணத்தில் 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில், ‘காயற்பட்டிணம் வளர்த்த தீன் தமிழும் தீந்தமிழும்என்ற ஆய்வுக் கட்டுரையில் பேராசிரியர் உவைஸ்.

"தமிழிலக்கியப் பரப்பிலே ஒன்றுக்கு மேற்பட்ட காப்பியங்களை இயற்றிய புலவர்களைக் காண்பது அரிதிலும் அரிது. ஆனால், தீன் தமிழ் இலக்கியத்திலே ஒன்றுக்கு மேற்பட்ட காப்பியங்களை இயற்றிய புலவர்கள் உள்ளனர். காப்பியங்கள் இரண்டை இயற்றித் தீன் தமிழுக்கு அழகு செய்தவர் நாகூர் குலாம் காதிறு நாவலர். மூன்று காப்பியங்களை யாத்துத் தீன் தமிழுக்கு மெருகு அளிப்பவர் மதுரை மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர். ஆனால், நான்கு காப்பியங்களை இயற்றித் தீன் தமிழுக்கும் தமிழ் பேசும் நல்லுலகுக்கும் காயற்பட்டிணத்துக்கும் பெருமையைத் தேடித் தந்தவர் புலவர் நாயகம் என்றும் சேகுனாப் புலவர் என்றும் புகழ்ப் பெயரைப் பெற்றுள்ள அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர். ஒரே மொழியில் ஒரு புலவர் நான்கு காப்பியங்களைப் பாடியுள்ளமையை வேறு எந்த மொழியிலும் காண முடியாது" என முழங்கினார்.

"தமிழ் எங்கள் மொழியாக இருப்பின் அவ்விரண்டிலும் ஏற்பட்ட இலக்கியம் விழியாக அமைதல் வேண்டும்" என்ற தாரக மாந்திரத்தை இவ்வாறு மாற்றியமைக்கலாம். "இஸ்லாம் எங்கள் வழி, தமிழ் எங்கள் மொழி, இலக்கியம் எங்கள் விழி" இங்ஙனம் பார்க்கும் போது எங்கள் வழி செம்மையானது எங்கள் மொழி பண்பட்டது. எங்கள் இலக்கியம் கூர்மையானது. எங்களுக்கு வழியாகவும் மொழியாகவும் விழியாகவும் அமைந்துள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் செம்மையும் பண்பாடும் கூர்மையும் பேணிப்பாதுகாக்கப்படல் வேண்டும். போற்றப்படுதல் இன்றியமையாதது. கண்காணித்தல் அவசியம். வழி போற்றப்பட்டு மொழி பேணப்பட்டு விழி பாதுகாக்கப்பட்டு இருப்பது போன்று இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் சிதைவுறாது உரிய முறையில் கட்டிக்காக்கப்படுதல் வேண்டும்." எனமருதை முதல் வருதை வரைஎன்னும் நூலில் பேராசிரியர் உவைஸ் பதிவு செய்துள்ளார்.

சென்னையில் 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாவில் கலந்து கொண்டார். இச்சுற்றுலாவைப் பற்றி உவைஸ் எழுதிய,  ‘நெஞ்சில் நிலைத்த சுற்றுலாஎனும் நூல் பயண இலக்கியமாகப் போற்றப்படுகிறது.

அந்நூலில் தமிழ்நாட்டுத் திருத்தலங்களையும், கோயில்களைப் பற்றியும், இந்து மதத் தொடர்பான புராணச்செய்திகளைப்பற்றியும், தமிழக மக்களின் கலாச்சார, பண்பாடுகளை பற்றியும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

சிதம்பரம், திருவாரூர், காஞ்சி, தஞ்சாவூர், கோவை, மதுரை, திருநெல்வேலி, குமரி, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி முதலிய நகரங்களைப் பற்றியும், அந்நகரங்களுக்கு வளமும் வனப்பம் வழங்கும் கோவில்களைப் பற்றியும், அப்பிரதேசங்களில் வாழும் மக்களின் சமய, பொருளாதார, பண்பாட்டுப் பின்னணிகளைப் பற்றியும் பயனளிக்கும் கட்டுரைகளை வரைந்துள்ளார். மேலும், தமிழக கிராமியக் கலை, இலக்கியம் ஆகிய இரண்டுடனும் பிரிக்க முடியாதபடி ஒன்றிய கிராமிய நடனங்களான கரகாட்டம், புரவி நடனம், காவடி, ஓயிலாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம் போன்றவைகளைப் பற்றியும், தமிழக வீர விளையாட்டான மஞ்சு விரட்டைப் பற்றியும், தமிழக சிற்பக் கலைஞர்களின் பேராற்றல்களை வெளிப்படுத்தும் இசைத் தூண்களைப் பற்றியும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் பேரறிஞர் உவைஸ் இஸ்;லாமியத் தமிழிலக்கியத்திற்கு ஆற்றியுள்ள மிகப்பெரிய தொண்டாகக் கருதக் கூடியது, தமிழக அறிஞர் டாக்டர் அஜ்மல் கானுடன் இணைந்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் சார்பாக எழுதியஇஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறுஆகும். இந்த வரலாறு ஆறு தொகுதிகளைக் கொண்டது.

முதல் தொகுதியில் கி.பி. 1700 ஆம் ஆண்டு வரையிலான தொடக்கக் கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் ஆராயப்பட்டுள்ளன. இத்தொகுதியில் இஸ்லாமிய நூல்களான பல்சந்தமாலை, யாகோபு சித்தர் பாடல்கள், ஆயிரம் மசாலா, மிகுராசு மாலை, திருநெறிநீதம், கனகாபிஷேக மாலை, சக்கூன் படைப்போர், முதுமொழி மாலை, சீறாப்புராணம், திருமக்காப் பள்ளு போன்றவற்றைப் பற்றி ஆராயப்பட்டுள்ளது.

இரண்டாவது தொகுதியில் இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த காப்பியங்களைக் கருப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ள சீறாப்புராணம், திருமணக் காட்சி, பனி அகமது, சின்ன சீறா, திருக்காரணப் புராணம், குத்பு நாயகம், திருமணிமாலை, புதுகுஷ்ஷாம், இராஜநாயகம், தீன் விளக்கம், இறவுசுல்கூல் படைப்போர், நவமணிமாலை, முகியத்தீன் புராணம், நாகூர்ப்புராணம், ஆரிபு நாயகம் முதலியவைகள் அலசி ஆராயப்பட்டுள்ளன.

மூன்றாவது தொகுதியில் வேதபுராணம், பொன்னரிய மாலை, மூஸாநபி புராணம், யூசுபு நபி காவியம், புத்தாகுல்துநூப், முகாஷா மாலை, சாதுலி நாயகம் முதலிய இஸ்லாமியக் குறுகாப்பியங்கள் ஆராய்ந்து விளக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமிய அடிப்படையில் தமிழில் தோன்றியுள்ள படைப்போர், முனாஜாத்து, கிஸ்ஸா, மசாலா, நாமா, கலம்பகம், அந்தாதி, ஆற்றுப்படை, கோவை, மாலை, சதகம், திருப்புகழ், கீர்த்தனை, கும்மி, சிந்து, தாலாட்டு, ஏசல், குறவஞ்சி, பிள்ளைத் தமிழ் போன்ற பிரபந்த இலக்கியங்களை மிக விரிவாக அறிமுகப்படுத்துகிறது.

நான்காவது தொகுதியில் சூபித்துவ அடிப்படையில் தோன்றிய இஸ்லாமிய ஞானப்பாடல்களையும், அவற்றைப்பாடி அருளிய ஞானிகளைப் பற்றியும் வெகு விரிவாக ஆராய்கிறது.

"தமிழ் நாட்டுக்கோ அல்லது வேறு எந்தப் பிரதேசத்துக்கோ சூபித்துவம் எடுத்துக் செல்லப்படும் பொழுது, எடுத்துச் செல்லப்பட்ட அந்த நாட்டின் மண்வாசனை சூபித்துவத்தில் ஒரளவு கலப்பதை இயல்பானது என்றே கொள்ள வேண்டும். அந்த மண்வாசனை அந்த சூபிபாக்களின் இலக்கியங்களில் கமழ்வதைக் காணலாம் சில சமயங்களில் அது வெளிப்படையான மண் வாசனையாக இருப்பதே அன்றி உள்@ மண்வாசனையாக அமைந்து விடுவதில்லை. ஆழமான ஆராய்ச்சியினாலேயே அத்தகைய வேறுபாட்டை அறியக் கூடியதாக இருக்கும்" என சூபித்துவத்தின் மண்வாசனை குறித்து விளக்கியுள்ளார் பேராசிரியர் உவைஸ்.

இஸ்லாமியத் தமிழிலக்கியத் திறனாய்வுப் பணிக்கு சிகரமாக அமைந்துள்ள பணி பேராசிரியர் உவைஸின்இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றின்உருவாக்கமே ஆகும்.

"முஸ்லீம் புலவர் பெருமக்களின் தமிழ்ப் பற்றினையும், தமிழ்த் தொண்டினையும் அறிந்து கொள்வதோடு மட்டுமின்றி, இஸ்லாமியத் தமிழிலக்கியத்தின் பரப்பையும், வீச்சையும் அறிந்து கொள்ள பெரிதும் துணை செய்வது இந்நூல்" என மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் குத்தாலிங்கம் தமது அணிந்துரையில் புகழ்ந்துரைத்துள்ளார்.

பேராசிரியர் உவைஸின் இலக்கியப் பணிகளில் மிகவும் போற்றத்தக்கப் பணி, பிற சமயசமுதாய நண்பர்களும் இஸ்லாமிய இலக்கியங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் அறபுச் சொற்களுக்கு விளக்கந்தரும் அகராதி ஒன்றினைத் தொகுத்து வெளியிட்டிருப்பதாகும்.

"இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் தமிழ்ச் சொற்களோடு அறபுச் சொற்களும் ஆங்காங்கே கலந்தே படைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர்க்க முடியாத ஒன்று. தமிழுக்குப் புதிய படைப்புமாகும். இவ்வாறு படைக்கப்பட்ட இலக்கியங்களை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள முடியும். மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாது. எனவே இந்நிலை அகல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் ஒரு வழிகாட்டி நூல் போல எந்தெந்த கவிதை வரிகளுக்கிடையே என்னென்ன அறபுச் சொற்கள் கலந்து இருக்கின்றன, அவற்றுக்கான பொருள் என்ன என்ற விவர அட்டவணையாக அறபுச் சொற்பொருள் விளக்க அகராதியை வரிசைப்படுத்தி அனைவரும் புரிந்து, தெரிந்து இஸ்லாமிய இலக்கிய நயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பினைத் தந்தவர் பேராசிரியர் .மு. உவைஸ்" எனத் தமிழக இலக்கிய ஆர்வலர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா புகழந்துரைத்துள்ளார்.

மேலும், இத்தகைய அகராதியை இயற்றுவதற்கு இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல்களில் பெரும் பாண்டித்யம் இருக்க வேண்டும், அறபு மொழி, அறபு வரலாறு, அறாபிய வரலாறு போன்றவற்றில் நிறைந்த அறிவு பெற்றிருக்க வேண்டும். அசாத்திய பொறுமை இருக்க வேண்டும், அளவற்ற ஈடுபாடு இருக்க வேண்டும். இத்தகுதிகள் உடையவராக விளங்கியவர் பேராசிரியர் .மு. உவைஸ்.

பேராசிரியர் .மு. உவைஸ் எழுதி வெளியிட்ட நூல்கள் :

தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்கு (ஆங்கிலம்), இஸ்லாமியத் தென்றல், நம்பிக்கை, ஞானச் செல்வர் குணங்குடியார், நீதியும் நியாயமும்,

இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம், இஸ்லாமும் இன்பத் தமிழும், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மரபு, தமிழிலுள்ள முஸ்லிம் பிரபந்தங்கள், தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் காப்பியங்கள், மக்காப் பயணம், நெஞ்சில் நிலைத்த சுற்றுலா, புலவரும் புரவலரும், நம்பிக்கையும் நடைமுறையும், தமிழ் இலக்கிய அறபுச் சொல்லகராதி, காயல்பட்டிணம் வளர்த்த தீன்தமிழும் தீந்தமிழும், இஸ்லாம் வளர்ந்த தமிழ், மருதை முதல் வருதை வரை, வழியம் மொழியும், முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, உமறுப்புலவர் ஒர் ஆலிமா?, இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு (ஆறு தொகுதிகள்),  இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல் விவரக் கோவை உட்பட 50 நூல்களை எழுதியுள்ளார்.

பேராசிரியர் .மு. உவைஸ் பதிப்பித்த நூல்கள் :

                பிறைக் கொழுந்து, பிறைப்பூக்கள், பிறைத்தேன், புதுக்குஷ்ஷாம் (நான்கு பாகங்கள்), ஆசாரக்கோவை (மூலம்), அலங்காரக்; கீர்த்தனம், புகழ்ப்பாவணி (மூலம்), திருமக்காக் கோவை (மூலம்), ராஜநாயகம் (மூலம்), மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை (மூலம்), குத்பு நாயகம் (மூலம்) உட்பட 17 நூல்களை பதிப்பித்துள்ளார்.

பேராசிரியர் .மு. உவைஸ் மொழிபெயர்ப்பு செய்த நூல்கள் :             

நபிநாயக சரிதய (மூலம்), இலங்கைப் பொருளாதார முறை (மூலம்), பொருளியற் பாகுபாடு, பிரித்தானிய யாப்பு முறை, கிராமப் பிறழ்வு

உட்பட 12 நூல்களை தமிழிலிருந்து சிங்களத்திற்கும், சிங்களத்திலிருந்து தமிழுக்கும், ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கும் மொழிபெயர்த்து அளித்துள்ளார். ‘அருள்மொழி வெண்பா’, ‘அருள் மொழி அகவல்’ ‘நம்பிக்கையும் நடைமுறையும்ஆகியவை இவரது கவிதை நூல்களாகும்.

உவைசின் மனைவி சித்தி பாத்தும்மா ஆவார். அவர் இவரது இலக்கியப் பணிகளுக்கும், ஆய்வுப் பணிகளுக்கு மிகுந்த ஆதரவு நல்கி, உறுதுணையாக விளங்கினார்.

சென்னை அடையாறில் இயங்கிய ஆயுள் ஜஸ்வரிய ஆரோக்கிய ஆச்சிரமம் என்னும் நிறுவனத்தின் சார்பில் அன்றைய தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர்      எஸ். செல்லப்பாண்டியன் தலைமையில் விழா நடத்திபண்டிதரத்னமஎன்ற பட்டம் பேராசிரியர் உவைசுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

  1976 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி கொழும்பு நகரில் ஸாகிராக் கல்லூரியில் பேராசிரியர் உவைசுக்கு பாராட்டு விழா நடத்திஇஸ்லாமிய இலக்கிய மணிஎனும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விழாவில் உவைசுக்குதீன் தமிழ்க் காவலர்எனும் பட்டம் வழங்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் கலைமாமணி கா.மு. ஷெரிப் தலைமையில் இயங்கிய முஸ்லிம் தமிழ்க் கவிஞர் மன்றம் டாக்டர் உவைசுக்குஇலக்கியச் சித்தர்என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

   இலங்கை அரசின் இந்து கலாச்சார அமைச்சினால்கலைமாமணிஎனும் பட்டம் உவைசுக்கு  வழங்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு இலங்கைச் கண்டியில் நடைபெற்ற தமிழ் சாகித்திய விழாவில் டாக்டர் உவைசுக்குஇலக்கியச் செம்மல்பட்டம் வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு இலங்கை அரசு உவைசுக்குகலாசூரிஎனும் உயர் தேசிய விருது வழங்கி கண்ணியப்படுத்தியது. உவைஸ் எழுதியஇஸ்லாமும் இன்பத் தமிழும்எனும் நூலுக்கு 1976 ஆம் ஆண்டுக்கான மொழி இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்களுக்கான முதலாவது பரிசை தமிழக அரசு வழங்கிச் சிறப்பித்தது.

   தமிழ், தமிழ்ப பண்பாடு பற்றி பிற மொழிகளில் 1976 ஆம் ஆண்டில் வெளியான நூல்களுக்கான இரண்டாவது பரிசை தமிழக அரசு பேராசிரியர் உவைஸ் முனைவர் பட்ட ஆய்விற்காக  ஆங்கிலத்தில் எழுதியஇஸ்லாமிய காப்பியங்கள’; குறித்த நூலுக்கு வழங்கியது. "டாக்டர் உவைஸ் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளைத் தவிர அறபு, பாளி எனும் மொழிகளையும் தெரிந்தவராதலின் அவருடைய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டைத் தீட்டப் பெற்ற வைரங்களைப் போல ஜொலிப்பதைக் காண முடிகிறது."  என சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் தலைமை நீதியரசர் மு.மு. இஸ்மாயீல் பாராட்டி உள்ளார்.

     பேராசிரியர் உவைஸின் பிரதான சாதனை இஸ்லாமியத் தமிழிலக்கிய மீட்புப் பணியாகும். "தமிழுக்குள் இஸ்லாமியத்தின் இடம் பற்றிய வற்புறுத்துகை" தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியச் சமூகத்துக்கு முக்கியமான சென்றாகும்" முதலாவது, "இலை மறையாக இருந்த இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் பால் தமிழிலக்கியகாரர்களினதும் தமிழ் ஆய்வாளர்களினதும் கவனத்தை ஈர்த்து, அந்த இலக்கியப் பரப்பு பற்றிய பிரக்நையை முனைப்புப் படுத்தியமையாகும்."      இரண்டாவது, "தமிழ் எனும் மொழிப் பண்பாட்டுப் பரப்பினுள் இஸ்லாமியப் பண்பாட்டின் இடம் வற்புறுத்தப்பட்டமையாகும்" இந்த வகையில் பேராசிரியர் .மு. உவைஸ் தமிழிலக்கிய வரலாற்றின் மைல் கல்லாகிறார்." என பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பதிவு செய்துள்ளார்.

                "இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினை முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துவதையே தன் வாழ்வுப் பணியாக கொண்டு உழைத்தவர் பேராசிரியர் உவைஸ்" எனப் புகழாரம் சூட்டியுள்ளார் இலங்கை எழுத்தாளர் ..எம் புவாஜி.

                "உவைசார் அவரோர் உலவும் நூல்; நிலையம்

சுவைசார் செந்தமிழ் நீர்ப்பரப்பில்

இஸ்லாம் மலர்த்திய இலக்கியப் பூக்களின்

கொங்கு தேர் வாழ்க்கை கொண்ட வண்டு

தமிழகத்தோடு தனிப் புகழ் ஈழத்

தீவை இணைக்கும் தீந்தமிழ்ப் பாலம்".

என கவிக்கோ அப்துல் ரகுமான் பாராட்டுக் கவிதை அளித்துள்ளார்.

"சாகவிருந்த தமிழ் இலக்கியங்கள்

சிலவற்றிற்கு

உயிர் அளித்தவர்

.வே.சா !

ஒருவருக்கும் தெரியாதிருந்த

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை

ஊரறியச் செய்தவர்

உவைஸா!!"

என தமிழறிஞர் எம்.ஆர். எம். முஸ்தபா புகழ்ந்து பாடியுள்ளார்.

 

                தமிழ் இலக்கியத்தின் பால் உலகின் கவனத்தைத் திருப்பிய பேரறிஞர் மன்ற மேடைகளிளே, மாநாட்டரங்கங்களிலே சொற்பொழிவுகளாற்றி, ஆய்வுக் கட்டுரைகள் படித்து, முஸ்லிம் மக்களைப் பிரேமை கொள்ள வைத்தவர். ஆக்கமும், ஊக்கமும் அளித்து ஏராளமான எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்துலக வேந்தர். தன் அறிவினால், தன் அடக்கத்தினால் தன் அன்பினால் அறிஞர் உலகை ஆட்கொண்ட பேரறிஞர் உவைஸ்! பேராசிரியர் உவைஸ் 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் மறைந்தார்.

- பி.தயாளன்

"தேடுவாரற்று, நாடுவாரற்று, போற்றுவாரற்று ஒரு சிலரின் பழைய பெட்டகங்களிலும், வீட்டுப் பரண்களிலும் முடங்கிக் கிடந்த இஸ்லாமியத் தமிழ் நூல்களையும், ஏட்டுச் சுவடிகளையும் தேடிக் கண்டுபிடித்து, அவற்றைத் தமிழுலகுக்கு மீள அறிமுகம் செய்து, அவற்றுக்குப் புதுப்பொலிவும் புது வாழ்வும் வழங்கியவர்." "தமது ஆய்வுகள் மூலம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ் நூல்களை உலகத்தார் பார்வைக்கு முன்வைத்து, இஸ்லாமியச் சமூகத்தைப் பீடித்திருந்த ஈன நிலையை முற்றாக அகற்றி, அவர்களுக்கு கண்ணியத்தையும், கௌரவத்தையும் கொடுத்தவர். அவர் ஆரம்பித்த காலத்தில் ஆரம்பிக்காதிருந்தால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பெருந்தொகையான நூல்களை நிரந்தரமாக இழந்திருக்கும். உயர்வான ஒர் இலக்கியப் பாரம்பரியத்தை அழிவில் இருந்து பாதுகாத்து, அதனை இஸ்லாமியச் சமூகத்துக்கு வழங்கியவர்." "புதைப் பொருளாக, குடத்து விளக்காகக் குன்றிப் பயனற்றுக் கிடந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களை அகழ்ந்தெடுத்து ஆராய்ச்சி செய்து உலகுக்கு அளித்தவர்." "இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் செம்மையையும் செழுமையையும், வளத்தையும், வனப்பையும் உலகறியச் செய்தவர்." மேற்கண்ட பணிகளை மேற்கொண்ட பெருமை பெற்றவர் இஸ்லாமியத் தமிழ்ப் பேரறிஞர் ம.மு. உவைஸ் ஆவார். ம.மு. உவைஸ் இலங்கையின் தலைநகரான கொழும்புக்கு அருகில் உள்ள பாணந்துறையில் உள்ள கொரக்கான என்னும் சிறிய கிராமத்தில் முகமது லெப்பை- சைனம்பு நாச்சியார் வாழ்வினையருக்கு மகனாக 15.01.1922 ஆம் நாள் பிறந்தார்.  தமது தந்தையாரிடம் அரபு மொழிக் கல்வியையும், மார்க்கக் கல்வியையும் கற்றார். பின்னர், இன்று ஜீலான்; முஸ்லிம் மகா வித்தியாலயம் என்று அழைக்கப்படும், அன்றைய ஹேனமுல்ல அரசினர் தமிழ்ப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றார். சரிக்காமுல்லையில் தக்ஸலா வித்தியாலயம் என்னும் ஆங்கிலப் பாட சாலையில் கல்வி பயின்றார். அங்கு பயிலும் போது சிங்கள மொழியையும் பாளி மொழியையும் கற்றார்.  பாணந்துறையில் புனித யோவான் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். பின்னர், அதே கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுகப் படிப்பில் சேர்ந்து தமிழ், சிங்களம், வரலாறு, ஆட்சியியல் முதலிய பாடங்களைப் படித்து தேர்ச்சியடைந்தார்.  இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1946 ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிய பேராசிரியர், ‘முத்தமிழ் வித்தகர்’ தவத்திரு விபுலாநந்த அடிகளாரின் வழிகாட்டலும், ஊக்கமும் உவைசுக்கு பேருதவியாக அமைந்தது. அடிகளாரின் வேண்டுகோளின்படி தமிழ் மொழியில் சிறப்புப் பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.  உவைசுக்கு பல்கலைக் கழக நிதி உதவியும், முஸ்லிம் கல்விச் சகாயநிதி உதவியும் கிடைத்தது. அதைக் கொண்டு தமது கல்வியைத் தொடர்ந்தார். "தமிழைப் பல்கலைக் கழகத்தில் ஒரு பாடமாகப் பயிலுவோர், பிறரால் இழிசனர் என்று இகழப்பட்டு வந்த காலத்திலே, தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்றார் உவைஸ்." தமிழில் கலைமாணிப் பட்டத்தை (இளங்கலை) 1949 ஆம் ஆண்டு பெற்றார். பின்னர் தமிழ் முதுமாணிப் பட்ட (முதுகலை) பாடத்தைப் படிக்க பதிவு செய்தார். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ‘இஸ்லாமியரின் தமிழ்த் தொண்டு’ என்னும் ஆய்வேட்டையும் சமர்ப்பித்தார்.  ‘தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்னும் தலைப்பில் முதுமாணிப் பட்டத்திற்குரிய (முது கலைப்பட்டம்) ஆய்வைச் சமர்ப்பித்து 1951 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.  தமது முதுகலைப் பட்ட ஆய்வில், இஸ்லாமிய இலக்கியங்களின் எண்ணிக்கை, அவற்றின் இலக்கியத் தரம், தமிழிலக்கியப் பரப்பிலும் வரலாற்றிலும் அவற்றிற்குரிய இடம், இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பிரிவுகள், வடிவங்கள் அவற்றின் உள்ளடக்க விடயங்கள் என்று பல்வேறு அம்சங்களை அடக்கியிருந்தார். மேலும், அவரது ஆய்வுக் கட்டுரையில், இலக்கிய வடிவங்கள், உரைநடையாக்கங்கள் மற்றும் சூஃபி ஞானியாரும் அவர்களின் பாடல்களும், இஸ்லாமிய இறையியல் நூல்களும், ஒழுக்கவியல் நூல்களும் என்ற பிரிவுகள் குறித்து விரிவாக விளக்குயுள்ளார். இஸ்லாமியர்கள் தமிழிலக்கிய மரபிற்குப் புதிதாகத் தந்த படைப்போர், மஸ்அலா, முனாஜாத், நாமா, கிஸ்ஸா முதலிய புதிய இலக்கிய வடிவங்களை ஆராய்ந்துள்ளார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை மதிப்பீடு செய்திட, தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  உவைஸ் தமிழகத்திற்கு வருகை தந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரபு, பாரசீக, இஸ்லாமிய இயல் பேராசிரியர் டாக்டர் நயினார் முகமது அவர்களைச் சந்தித்து இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வு குறித்து கலந்துரையாடினார். மேலும், கீழக்கரைக்குச் சென்று அஹமது ஆலிம் புலவரைச் சந்தித்து இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றார்.  இலங்கை திரும்பிய பின்னர், கொழும்பிலும், அதன் சுற்றியுள்ள ஊர்களிலும் இருந்த இஸ்லாமிய புத்தகக் கடைகளுக்குச் சென்று தேடி, தமக்குத் தேவையான நூற்களின் பட்டியலை தயார் செய்து, இலங்கைப் பல்கலைக் கழகத்தில் அளித்து, அங்குள்ள நூலகத்திற்கு வாங்கச் செய்தார். அந்நூல்களை தமது ஆய்வுக்கும் பயன்படுத்திக் கொண்டார் உவைஸ்.  இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1962 ஆம் ஆண்டு தமது முனைவர்பட்ட ஆய்வுக்காக, ‘தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியக் காப்பியங்கள்’ என்னும் தலைப்பை பதிவு செய்தார். இவரது ஆய்வுக்கு நெறியாளராக விளங்கிய பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் தீடீர் மறைவினால் ஆய்வு தற்காலிகமாக நின்றுவிட்டது. இலங்கைப் பல்கலைக் கழகத்தமிழ்த் துறைத் தலைவராக பேராசிரியர் சு. வித்தியானந்தன் நியமனம் செய்யப்பட்ட பின்பு 1971 ஆம் ஆண்டு தமது ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு 1975 ஆம் ஆண்டு ஆய்வை சமர்ப்பித்து முனைவர் பட்டம் (கலாநிதி) பெற்றார். தமிழ்த்துறையில் முனைவர் (கலாநிதி) பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் என்ற பெருமையைப் பெற்றார்.  தமது முனைவர் பட்ட ஆய்வில் தண்டியலங்காரம் கூறும் காவிய இலக்கணங்களுக்கு ஏற்ப இயற்றப்பட்டுள்ள பன்னிரெண்டு இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.   உவைஸ் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் கொழும்பு சாஹிராக் கல்லூரியிலும், வித்தியோதயாப் பல்கலைக் கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். நவீன கீழைத்தேய மொழித்துறையின் தலைவராகப் பணி புரிந்தார். இலங்கை சாகித்திய மண்டல உறுப்பினராகவும் செயற்பட்டார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். உவைஸ், இலங்கை மருதமுனையில் 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு, ‘முஸ்லிம் தமிழ் இலக்கிய மரபு’ எனும் தலைப்பில் மிக ஆழமான ஆய்வுக் கட்டுரையினை வாசித்தளித்தார். சென்னையில் 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு, அம்மாநாட்டில் நடைபெற்ற உலகத் தமிழ்க் கருத்தரங்கில் ‘தமிழிலுள்ள முஸ்லிம் பிரபந்தங்கள்’ எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசித்தார். திருச்சியில் 1973 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு, ‘இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள்’ என்ற தலைப்பிலும், ‘திருக்குர்ஆனும் முஸ்லிம்களின் தமிழ்ப் பேச்சு வழக்கும் இலக்கிய வழக்கும்’ என்ற தலைப்பிலும் சிறந்த இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை அளித்தார்.  சென்னையில் 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு, ‘ஈழத்து முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பயன்படத்தப்படும் செந்தமிழ்ச சொற்கள்’ என்ற ஆய்வுக் கட்டுரையை அளித்தார்.  சென்னையில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற சீறாப்புராண கருத்தரங்கில் கலந்து கொண்டு, ‘சீறாவில் வரலாற்றுக் குறிப்புகள்’, சீறாவில் அரபு, பாரசீகச் சொற்கள்’ என்ற தலைப்பில் ஆழமான ஆய்வுக் கட்டுரை அளித்து உரையாற்றினார்.  காயற்பட்டிணத்தில் 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு ‘ முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள் - புலவரும் புரவலரும்’ ‘காயற்பட்டிணம் வளர்த்த தீன் தமிழும் தீந்தமிழும்’ என இரண்டு தரமிக்க ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தளித்தார்.  இலங்கைத் தலைநகர் கொழும்பில் 1979 ஆம் ஆண்டு ஜீன் மாதம் நடைபெற்ற நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தினார் உவைஸ். கீழக்கரையில் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் காப்பியக் கருத்தரங்கிற்கு தலைமையேற்று, ‘பதினைந்து ஆண்டுகளில் ஒன்பது காப்பியங்கள்’ என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். நீடுரில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டிலும் உவைஸ் கலந்து கொண்டு ஆய்வுரையாற்றினார்.  ஒரு மொழியின் இலக்கிய வளர்ச்சிக்கும், அவ்விலக்கியம் தொடர்பான மாநாடுகள் ஆற்றும் உதவிகளின் தன்மையை, ‘மருதை முதல் வருதை வரை’ எனும் தனது நூலில் பின்வருமாறு விளக்கியுள்ளார் உவைஸ். "ஓர் இலக்கியம் வளர அது பரப்பப்பட வேண்டும். அது பற்றி ஆய்வுகள் நடத்தப்படல் வேண்டும். அடிக்கடி இலக்கிய உரையாடலுக்கு இலக்காக்கப்படல் இன்றியமையாதது, பழைய கருத்துக்கள் கவனமாக அலசி ஆராய்தல் நிகழ்த்தப்படின், அது புது மெருகூட்டப்படும். புதுக்கருத்துக்கள் புகுத்தப்படின் புதுப் பொலிவு பெறும். அதனைப் பயிலும் மக்களின் உள்ளங்களில் அது பதிந்துவிடும். அது அழிந்திடாது வாழும். வளம் பெற்று வளர்ச்சி அடையும்." காயற்பட்டிணத்தில் 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில், ‘காயற்பட்டிணம் வளர்த்த தீன் தமிழும் தீந்தமிழும்’ என்ற ஆய்வுக் கட்டுரையில் பேராசிரியர் உவைஸ். "தமிழிலக்கியப் பரப்பிலே ஒன்றுக்கு மேற்பட்ட காப்பியங்களை இயற்றிய புலவர்களைக் காண்பது அரிதிலும் அரிது. ஆனால், தீன் தமிழ் இலக்கியத்திலே ஒன்றுக்கு மேற்பட்ட காப்பியங்களை இயற்றிய புலவர்கள் உள்ளனர். காப்பியங்கள் இரண்டை இயற்றித் தீன் தமிழுக்கு அழகு செய்தவர் நாகூர் குலாம் காதிறு நாவலர். மூன்று காப்பியங்களை யாத்துத் தீன் தமிழுக்கு மெருகு அளிப்பவர் மதுரை மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர். ஆனால், நான்கு காப்பியங்களை இயற்றித் தீன் தமிழுக்கும் தமிழ் பேசும் நல்லுலகுக்கும் காயற்பட்டிணத்துக்கும் பெருமையைத் தேடித் தந்தவர் புலவர் நாயகம் என்றும் சேகுனாப் புலவர் என்றும் புகழ்ப் பெயரைப் பெற்றுள்ள அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர். ஒரே மொழியில் ஒரு புலவர் நான்கு காப்பியங்களைப் பாடியுள்ளமையை வேறு எந்த மொழியிலும் காண முடியாது" என முழங்கினார். "தமிழ் எங்கள் மொழியாக இருப்பின் அவ்விரண்டிலும் ஏற்பட்ட இலக்கியம் விழியாக அமைதல் வேண்டும்" என்ற தாரக மாந்திரத்தை இவ்வாறு மாற்றியமைக்கலாம். "இஸ்லாம் எங்கள் வழி, தமிழ் எங்கள் மொழி, இலக்கியம் எங்கள் விழி" இங்ஙனம் பார்க்கும் போது எங்கள் வழி செம்மையானது எங்கள் மொழி பண்பட்டது. எங்கள் இலக்கியம் கூர்மையானது. எங்களுக்கு வழியாகவும் மொழியாகவும் விழியாகவும் அமைந்துள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் செம்மையும் பண்பாடும் கூர்மையும் பேணிப்பாதுகாக்கப்படல் வேண்டும். போற்றப்படுதல் இன்றியமையாதது. கண்காணித்தல் அவசியம். வழி போற்றப்பட்டு மொழி பேணப்பட்டு விழி பாதுகாக்கப்பட்டு இருப்பது போன்று இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் சிதைவுறாது உரிய முறையில் கட்டிக்காக்கப்படுதல் வேண்டும்." என ‘மருதை முதல் வருதை வரை’ என்னும் நூலில் பேராசிரியர் உவைஸ் பதிவு செய்துள்ளார்.  சென்னையில் 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாவில் கலந்து கொண்டார். இச்சுற்றுலாவைப் பற்றி உவைஸ் எழுதிய,  ‘நெஞ்சில் நிலைத்த சுற்றுலா’ எனும் நூல் பயண இலக்கியமாகப் போற்றப்படுகிறது. அந்நூலில் தமிழ்நாட்டுத் திருத்தலங்களையும், கோயில்களைப் பற்றியும், இந்து மதத் தொடர்பான புராணச்செய்திகளைப்பற்றியும், தமிழக மக்களின் கலாச்சார, பண்பாடுகளை பற்றியும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். சிதம்பரம், திருவாரூர், காஞ்சி, தஞ்சாவூர், கோவை, மதுரை, திருநெல்வேலி, குமரி, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி முதலிய நகரங்களைப் பற்றியும், அந்நகரங்களுக்கு வளமும் வனப்பம் வழங்கும் கோவில்களைப் பற்றியும், அப்பிரதேசங்களில் வாழும் மக்களின் சமய, பொருளாதார, பண்பாட்டுப் பின்னணிகளைப் பற்றியும் பயனளிக்கும் கட்டுரைகளை வரைந்துள்ளார். மேலும், தமிழக கிராமியக் கலை, இலக்கியம் ஆகிய இரண்டுடனும் பிரிக்க முடியாதபடி ஒன்றிய கிராமிய நடனங்களான கரகாட்டம், புரவி நடனம், காவடி, ஓயிலாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம் போன்றவைகளைப் பற்றியும், தமிழக வீர விளையாட்டான மஞ்சு விரட்டைப் பற்றியும், தமிழக சிற்பக் கலைஞர்களின் பேராற்றல்களை வெளிப்படுத்தும் இசைத் தூண்களைப் பற்றியும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.  தமிழ்ப் பேரறிஞர் உவைஸ் இஸ்;லாமியத் தமிழிலக்கியத்திற்கு ஆற்றியுள்ள மிகப்பெரிய தொண்டாகக் கருதக் கூடியது, தமிழக அறிஞர் டாக்டர் அஜ்மல் கானுடன் இணைந்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் சார்பாக எழுதிய ‘இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு’ ஆகும். இந்த வரலாறு ஆறு தொகுதிகளைக் கொண்டது.  முதல் தொகுதியில் கி.பி. 1700 ஆம் ஆண்டு வரையிலான தொடக்கக் கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் ஆராயப்பட்டுள்ளன. இத்தொகுதியில் இஸ்லாமிய நூல்களான பல்சந்தமாலை, யாகோபு சித்தர் பாடல்கள், ஆயிரம் மசாலா, மிகுராசு மாலை, திருநெறிநீதம், கனகாபிஷேக மாலை, சக்கூன் படைப்போர், முதுமொழி மாலை, சீறாப்புராணம், திருமக்காப் பள்ளு போன்றவற்றைப் பற்றி ஆராயப்பட்டுள்ளது.  இரண்டாவது தொகுதியில் இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த காப்பியங்களைக் கருப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ள சீறாப்புராணம், திருமணக் காட்சி, பனி அகமது, சின்ன சீறா, திருக்காரணப் புராணம், குத்பு நாயகம், திருமணிமாலை, புதுகுஷ்ஷாம், இராஜநாயகம், தீன் விளக்கம், இறவுசுல்கூல் படைப்போர், நவமணிமாலை, முகியத்தீன் புராணம், நாகூர்ப்புராணம், ஆரிபு நாயகம் முதலியவைகள் அலசி ஆராயப்பட்டுள்ளன.  மூன்றாவது தொகுதியில் வேதபுராணம், பொன்னரிய மாலை, மூஸாநபி புராணம், யூசுபு நபி காவியம், புத்தாகுல்துநூப், முகாஷா மாலை, சாதுலி நாயகம் முதலிய இஸ்லாமியக் குறுகாப்பியங்கள் ஆராய்ந்து விளக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமிய அடிப்படையில் தமிழில் தோன்றியுள்ள படைப்போர், முனாஜாத்து, கிஸ்ஸா, மசாலா, நாமா, கலம்பகம், அந்தாதி, ஆற்றுப்படை, கோவை, மாலை, சதகம், திருப்புகழ், கீர்த்தனை, கும்மி, சிந்து, தாலாட்டு, ஏசல், குறவஞ்சி, பிள்ளைத் தமிழ் போன்ற பிரபந்த இலக்கியங்களை மிக விரிவாக அறிமுகப்படுத்துகிறது. நான்காவது தொகுதியில் சூபித்துவ அடிப்படையில் தோன்றிய இஸ்லாமிய ஞானப்பாடல்களையும், அவற்றைப்பாடி அருளிய ஞானிகளைப் பற்றியும் வெகு விரிவாக ஆராய்கிறது.  "தமிழ் நாட்டுக்கோ அல்லது வேறு எந்தப் பிரதேசத்துக்கோ சூபித்துவம் எடுத்துக் செல்லப்படும் பொழுது, எடுத்துச் செல்லப்பட்ட அந்த நாட்டின் மண்வாசனை சூபித்துவத்தில் ஒரளவு கலப்பதை இயல்பானது என்றே கொள்ள வேண்டும். அந்த மண்வாசனை அந்த சூபிபாக்களின் இலக்கியங்களில் கமழ்வதைக் காணலாம் சில சமயங்களில் அது வெளிப்படையான மண் வாசனையாக இருப்பதே அன்றி உள்@ற மண்வாசனையாக அமைந்து விடுவதில்லை. ஆழமான ஆராய்ச்சியினாலேயே அத்தகைய வேறுபாட்டை அறியக் கூடியதாக இருக்கும்" என சூபித்துவத்தின் மண்வாசனை குறித்து விளக்கியுள்ளார் பேராசிரியர் உவைஸ். இஸ்லாமியத் தமிழிலக்கியத் திறனாய்வுப் பணிக்கு சிகரமாக அமைந்துள்ள பணி பேராசிரியர் உவைஸின் ‘இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றின்’ உருவாக்கமே ஆகும். "முஸ்லீம் புலவர் பெருமக்களின் தமிழ்ப் பற்றினையும், தமிழ்த் தொண்டினையும் அறிந்து கொள்வதோடு மட்டுமின்றி, இஸ்லாமியத் தமிழிலக்கியத்தின் பரப்பையும், வீச்சையும் அறிந்து கொள்ள பெரிதும் துணை செய்வது இந்நூல்" என மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் குத்தாலிங்கம் தமது அணிந்துரையில் புகழ்ந்துரைத்துள்ளார்.  பேராசிரியர் உவைஸின் இலக்கியப் பணிகளில் மிகவும் போற்றத்தக்கப் பணி, பிற சமய – சமுதாய நண்பர்களும் இஸ்லாமிய இலக்கியங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் அறபுச் சொற்களுக்கு விளக்கந்தரும் அகராதி ஒன்றினைத் தொகுத்து வெளியிட்டிருப்பதாகும்.  "இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் தமிழ்ச் சொற்களோடு அறபுச் சொற்களும் ஆங்காங்கே கலந்தே படைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர்க்க முடியாத ஒன்று. தமிழுக்குப் புதிய படைப்புமாகும். இவ்வாறு படைக்கப்பட்ட இலக்கியங்களை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள முடியும். மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாது. எனவே இந்நிலை அகல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் ஒரு வழிகாட்டி நூல் போல எந்தெந்த கவிதை வரிகளுக்கிடையே என்னென்ன அறபுச் சொற்கள் கலந்து இருக்கின்றன, அவற்றுக்கான பொருள் என்ன என்ற விவர அட்டவணையாக அறபுச் சொற்பொருள் விளக்க அகராதியை வரிசைப்படுத்தி அனைவரும் புரிந்து, தெரிந்து இஸ்லாமிய இலக்கிய நயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பினைத் தந்தவர் பேராசிரியர் ம.மு. உவைஸ்" எனத் தமிழக இலக்கிய ஆர்வலர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா புகழந்துரைத்துள்ளார். மேலும், இத்தகைய அகராதியை இயற்றுவதற்கு இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல்களில் பெரும் பாண்டித்யம் இருக்க வேண்டும், அறபு மொழி, அறபு வரலாறு, அறாபிய வரலாறு போன்றவற்றில் நிறைந்த அறிவு பெற்றிருக்க வேண்டும். அசாத்திய பொறுமை இருக்க வேண்டும், அளவற்ற ஈடுபாடு இருக்க வேண்டும். இத்தகுதிகள் உடையவராக விளங்கியவர் பேராசிரியர் ம.மு. உவைஸ். பேராசிரியர் ம.மு. உவைஸ் எழுதி வெளியிட்ட நூல்கள் : தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்கு (ஆங்கிலம்), இஸ்லாமியத் தென்றல், நம்பிக்கை, ஞானச் செல்வர் குணங்குடியார், நீதியும் நியாயமும்,  இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம், இஸ்லாமும் இன்பத் தமிழும், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மரபு, தமிழிலுள்ள முஸ்லிம் பிரபந்தங்கள், தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் காப்பியங்கள், மக்காப் பயணம், நெஞ்சில் நிலைத்த சுற்றுலா, புலவரும் புரவலரும், நம்பிக்கையும் நடைமுறையும், தமிழ் இலக்கிய அறபுச் சொல்லகராதி, காயல்பட்டிணம் வளர்த்த தீன்தமிழும் தீந்தமிழும், இஸ்லாம் வளர்ந்த தமிழ், மருதை முதல் வருதை வரை, வழியம் மொழியும், முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, உமறுப்புலவர் ஒர் ஆலிமா?, இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு (ஆறு தொகுதிகள்),  இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல் விவரக் கோவை உட்பட 50 நூல்களை எழுதியுள்ளார். பேராசிரியர் ம.மு. உவைஸ் பதிப்பித்த நூல்கள் :  பிறைக் கொழுந்து, பிறைப்பூக்கள், பிறைத்தேன், புதுக்குஷ்ஷாம் (நான்கு பாகங்கள்), ஆசாரக்கோவை (மூலம்), அலங்காரக்; கீர்த்தனம், புகழ்ப்பாவணி (மூலம்), திருமக்காக் கோவை (மூலம்), ராஜநாயகம் (மூலம்), மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை (மூலம்), குத்பு நாயகம் (மூலம்) உட்பட 17 நூல்களை பதிப்பித்துள்ளார்.  பேராசிரியர் ம.மு. உவைஸ் மொழிபெயர்ப்பு செய்த நூல்கள் : நபிநாயக சரிதய (மூலம்), இலங்கைப் பொருளாதார முறை (மூலம்), பொருளியற் பாகுபாடு, பிரித்தானிய யாப்பு முறை, கிராமப் பிறழ்வு உட்பட 12 நூல்களை தமிழிலிருந்து சிங்களத்திற்கும், சிங்களத்திலிருந்து தமிழுக்கும், ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கும் மொழிபெயர்த்து அளித்துள்ளார். ‘அருள்மொழி வெண்பா’, ‘அருள் மொழி அகவல்’ ‘நம்பிக்கையும் நடைமுறையும்’ ஆகியவை இவரது கவிதை நூல்களாகும். உவைசின் மனைவி சித்தி பாத்தும்மா ஆவார். அவர் இவரது இலக்கியப் பணிகளுக்கும், ஆய்வுப் பணிகளுக்கு மிகுந்த ஆதரவு நல்கி, உறுதுணையாக விளங்கினார்.  சென்னை அடையாறில் இயங்கிய ஆயுள் ஜஸ்வரிய ஆரோக்கிய ஆச்சிரமம் என்னும் நிறுவனத்தின் சார்பில் அன்றைய தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர்      எஸ். செல்லப்பாண்டியன் தலைமையில் விழா நடத்தி ‘பண்டிதரத்னம’ என்ற பட்டம் பேராசிரியர் உவைசுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.   1976 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி கொழும்பு நகரில் ஸாகிராக் கல்லூரியில் பேராசிரியர் உவைசுக்கு பாராட்டு விழா நடத்தி ‘இஸ்லாமிய இலக்கிய மணி’ எனும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விழாவில் உவைசுக்கு ‘தீன் தமிழ்க் காவலர்’ எனும் பட்டம் வழங்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் கலைமாமணி கா.மு. ஷெரிப் தலைமையில் இயங்கிய முஸ்லிம் தமிழ்க் கவிஞர் மன்றம் டாக்டர் உவைசுக்கு ‘இலக்கியச் சித்தர்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.    இலங்கை அரசின் இந்து கலாச்சார அமைச்சினால் ‘கலைமாமணி’ எனும் பட்டம் உவைசுக்கு  வழங்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு இலங்கைச் கண்டியில் நடைபெற்ற தமிழ் சாகித்திய விழாவில் டாக்டர் உவைசுக்கு ‘இலக்கியச் செம்மல்’ பட்டம் வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு இலங்கை அரசு உவைசுக்கு ‘கலாசூரி’ எனும் உயர் தேசிய விருது வழங்கி கண்ணியப்படுத்தியது. உவைஸ் எழுதிய ‘இஸ்லாமும் இன்பத் தமிழும்’ எனும் நூலுக்கு 1976 ஆம் ஆண்டுக்கான மொழி இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்களுக்கான முதலாவது பரிசை தமிழக அரசு வழங்கிச் சிறப்பித்தது.     தமிழ், தமிழ்ப பண்பாடு பற்றி பிற மொழிகளில் 1976 ஆம் ஆண்டில் வெளியான நூல்களுக்கான இரண்டாவது பரிசை தமிழக அரசு பேராசிரியர் உவைஸ் முனைவர் பட்ட ஆய்விற்காக  ஆங்கிலத்தில் எழுதிய ‘இஸ்லாமிய காப்பியங்கள’; குறித்த நூலுக்கு வழங்கியது. "டாக்டர் உவைஸ் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளைத் தவிர அறபு, பாளி எனும் மொழிகளையும் தெரிந்தவராதலின் அவருடைய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டைத் தீட்டப் பெற்ற வைரங்களைப் போல ஜொலிப்பதைக் காண முடிகிறது."  என சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் தலைமை நீதியரசர் மு.மு. இஸ்மாயீல் பாராட்டி உள்ளார்.      பேராசிரியர் உவைஸின் பிரதான சாதனை இஸ்லாமியத் தமிழிலக்கிய மீட்புப் பணியாகும். "தமிழுக்குள் இஸ்லாமியத்தின் இடம் பற்றிய வற்புறுத்துகை" தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியச் சமூகத்துக்கு முக்கியமான சென்றாகும்" முதலாவது, "இலை மறையாக இருந்த இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் பால் தமிழிலக்கியகாரர்களினதும் தமிழ் ஆய்வாளர்களினதும் கவனத்தை ஈர்த்து, அந்த இலக்கியப் பரப்பு பற்றிய பிரக்நையை முனைப்புப் படுத்தியமையாகும்." இரண்டாவது, "தமிழ் எனும் மொழிப் பண்பாட்டுப் பரப்பினுள் இஸ்லாமியப் பண்பாட்டின் இடம் வற்புறுத்தப்பட்டமையாகும்" இந்த வகையில் பேராசிரியர் ம.மு. உவைஸ் தமிழிலக்கிய வரலாற்றின் மைல் கல்லாகிறார்." என பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பதிவு செய்துள்ளார்.  "இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினை முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துவதையே தன் வாழ்வுப் பணியாக கொண்டு உழைத்தவர் பேராசிரியர் உவைஸ்" எனப் புகழாரம் சூட்டியுள்ளார் இலங்கை எழுத்தாளர் ஏ.ஏ.எம் புவாஜி. "உவைசார் அவரோர் உலவும் நூல்; நிலையம்  சுவைசார் செந்தமிழ் நீர்ப்பரப்பில்  இஸ்லாம் மலர்த்திய இலக்கியப் பூக்களின்  கொங்கு தேர் வாழ்க்கை கொண்ட வண்டு  தமிழகத்தோடு தனிப் புகழ் ஈழத்  தீவை இணைக்கும் தீந்தமிழ்ப் பாலம்".  என கவிக்கோ அப்துல் ரகுமான் பாராட்டுக் கவிதை அளித்துள்ளார். "சாகவிருந்த தமிழ் இலக்கியங்கள்  சிலவற்றிற்கு  உயிர் அளித்தவர்  உ.வே.சா ! ஒருவருக்கும் தெரியாதிருந்த  இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை  ஊரறியச் செய்தவர்  உவைஸா!!"  என தமிழறிஞர் எம்.ஆர். எம். முஸ்தபா புகழ்ந்து பாடியுள்ளார்.  தமிழ் இலக்கியத்தின் பால் உலகின் கவனத்தைத் திருப்பிய பேரறிஞர் மன்ற மேடைகளிளே, மாநாட்டரங்கங்களிலே சொற்பொழிவுகளாற்றி, ஆய்வுக் கட்டுரைகள் படித்து, முஸ்லிம் மக்களைப் பிரேமை கொள்ள வைத்தவர். ஆக்கமும், ஊக்கமும் அளித்து ஏராளமான எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்துலக வேந்தர். தன் அறிவினால், தன் அடக்கத்தினால் தன் அன்பினால் அறிஞர் உலகை ஆட்கொண்ட பேரறிஞர் உவைஸ்! பேராசிரியர் உவைஸ் 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் மறைந்தார். 

 

Pin It