ஆசியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் சுமத்ரா, ஜாவா, பாலி, லம்போக், சும்பவா, புளோரஸ், திமோர் என வரிசையாகப் பல தீவுகள் அமைந்திருக்கின்றன. இதில் புளோரஸ் என்ற தீவில் உள்ள ஒரு குகையில் இருந்து பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, மூன்று அடி உயரமேயுள்ள கற்காலக் குள்ள மனிதர்களின் எலும்புகளையும் அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளையும் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சியில் எடுத்திருக்கின்றனர்.
ஏற்கனவே திமோர் தீவில் இருந்தும் தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாவில் இருந்தும் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்களின் எலும்புகளையும் கற்கருவிகளையும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்திருக்கின்றனர். ஆனால் புளோரஸ் திமோர் ஆகிய தீவுகளை அடைவது அவ்வளவு சுலபம் அல்ல.
குறிப்பாக லம்போக் சும்பவா புளோரஸ் திமோர் ஆகிய தீவுகள் நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கின்றன. முக்கியமாக பாலி தீவில் இருந்து லம்போக் தீவு, முப்பது கீலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே “சேப்” என்று அழைக்கப்படும் ஆபத்தான கடல் நீரோட்டமும் ஓடுகிறது. எனவே பாய்மரக் கப்பல் அல்லது இயந்திரப் படகு மூலமாகவே இக்கடல் பகுதியைக் கடக்க முடியும். எனவே கற்கால மனிதர்கள் எப்படி இந்த ஆபத்தான கடல் பகுதியைக் கடந்து புளோரஸ், திமோர் ஆகிய தீவுகளுக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் சென்றார்கள் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே கருத்து மோதல்கள் எழுந்திருக்கின்றன.
அறுநூறு அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிலும் இலங்கையிலும் கூட கற்கால மனிதர்களின் எலும்புகளும், கற்கருவிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள், இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்றிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதன் பிறகு கடல் மட்டம் அறுநூறு அடி உயர்ந்ததற்கு நிலத்தின் மேல் இருந்த பனி உருகிக் கடலில் கலந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் ஆனால் நாலாயிரம் அடி வரை ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் புளோரஸ் திமோர் ஆகிய தீவுகளுக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் கற்கால மனிதர்கள் எப்படி சென்றார்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
டிம் வைட் என்ற ஆராய்ச்சியாளர், புளோரஸ் தீவிற்கு கற்காலக் குள்ள மனிதர்கள் பாலி தீவில் இருந்து சுனாமி அலைகளால் அடித்துக் கொண்டு வரப்பட்ட மரக் கிளைகள் மூலம் வந்திருக்கலாம் என்று கூறுகிறார்.
ஆனால் ராபர்ட் பெட்நரிக் என்ற ஆராய்ச்சியாளரோ இந்தோனேசியத் தீவுகளுக்கு இடையே ஓடும் கடல் நீரோட்டங்களை, கட்டுமரம் போன்ற மரக் கலங்கள் மூலமாக, துடுப்பு போட்டு வலிந்து கடந்தால்தான் கடக்க முடியும் என்று கூறுகிறார். கூறியதோடு நிற்காமல் அவர் சோதனை முயற்சியாக கட்டுமரம் மூலம் பாலி தீவில் இருந்து லம்போக் தீவிற்கு சில மாதிரிப் பயணங்களையும் மேற்கொண்டார். அவரது கட்டுமரக் கடல் பயணத்தை பி.பி.சி. செய்தி நிறுவனமும். நேஷனல் ஜியாகிரபிக் சேனலும் செய்திப் படமாகத் தயாரித்தன.
முக்கியமாக கட்டுமரம் முழுக்க முழுக்க கற்கருவிகளைக் கொண்டுதான் தயாரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் கல்லைக் கொண்டு மூங்கில்களை வெட்டும் பொழுது மூங்கில்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இது போன்ற மூங்கில்களைக் கொண்டு கட்டுமரம் செய்தால் அந்தக் கட்டுமரம் கடலில் மிதக்காமல் மூழ்கி விடும். எனவே முக்கிய நிபந்தனை விலக்கிக் கொள்ளப்பட்டு, இரும்புக் கருவிகள் மூலம் கட்டுமரம் செய்யப்பட்டது. அதே போல் கல்லைக் கொண்டு ஒரு துடுப்பைக் கூட செய்ய முடியவில்லை.
கட்டு மரம் தயாரானதும் பாலி தீவில் இருந்து அதிகாலை ஆறு முப்பது மணிக்கு உதவிக் கப்பல்கள் புடை சூழ, கட்டுமரம் கடலில் இறங்கியது. மொத்தம் பனிரெண்டு பேர், முதலில் மூவர் மட்டுமே துடுப்பு போட்டனர். மூன்று மணி நேரத்தில் அவர்கள் களைத்ததும் அடுத்த மூன்று பேர் துடுப்பு போட்டனர். உச்சி வெய்யிலில் அவர்களும் சோர்ந்து விட, உடன் அடுத்த செட் பணியைத் தொடங்கியது. அதே நேரத்தில் கட்டுமரம் ஆழமான கடல் பகுதியை அடைந்தது. இது வரை முன்னேறிக் கொண்டு இருந்த கட்டுமரத்தை கடல் நீரோட்டம் பக்க வாட்டில் இழுத்தது.
இருப்பினும் விடாப்பிடியாகத் துடுப்பு போட்டதில் ஒருவர் மயங்கி விழ, அவருக்குப் பதிலாக உதவிக் கப்பலில் இருந்து வந்த ஒருவர் மூலம் மறுபடியும் கட்டுமரம் செலுத்தப்பட்டது. அதற்குள் கடல் நீரோட்டம் கட்டுமரத்தை வெகு தூரம் இழுத்துச் சென்றதில், இது வரை எதிரில் தெரிந்த தீவே கண்ணில் இருந்து மறைந்துவிட்டது. எனவே கட்டுமரம் பழைய இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு, மறுபடியும் துடுப்பு மூலம் செலுத்தப் பட்டது.
ஆனாலும் கட்டுமரம் அங்குலம் அங்குலமாகவே முன்னேறியது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக காற்று திசை மாறி வீசிய பொழுது, கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முன்னேறியதில் மாலை ஆறு முப்பது மணிக்கு லம்போக் தீவிற்கு, முன்பே இருக்கும் ஜிலி என்ற தீவில் கட்டுமரம் கரை ஒதுங்கியது. “ஓரிரு நிமிடங்கள் நாங்கள் ஓய்வு எடுத்து இருந்தாலும் எங்களால் கரையை அடைந்திருக்க இயலாது” என்று கட்டுமரத்தை செலுத்தியவர்கள் மூச்சிரைக்கக் கூறினார்கள். ஆக மொத்தம் பனிரெண்டு மணிநேரம் தொடர்ந்து துடுப்பு போட்டும் லம்போக் தீவை அடையும் முயற்சி தோல்வியடைந்தது.
தற்கால மனிதர்களாலேயே கடக்க இயலாத கடல் பகுதியை கற்கால மனிதர்கள் எப்படி கடந்திருப்பார்கள்?
இது குறித்து லாயின் டேவிட்சன் என்ற ஆராய்ச்சியாளர், கடந்த இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளில் பெரிய அளவில் மாற்றம் ஏதுமின்றி ஒரே மாதிரி காணப்படுகின்றன. எனவே கற்கால மனிதர்களின் அறிவு நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. எனவே கற்கால மனிதர்கள் நீண்ட காலத் திட்டம் போட்டு தொலை தூரக் கடல் பயணங்களை மேற்கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்று டேவிட்சன் கூறுகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக திமோர் தீவில் இருந்து ஆஸ்திரேலியக் கண்டம் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பதால், திமோர் தீவில் இருந்து பார்த்தால் ஆஸ்திரேலியக் கண்டம் இருப்பது கண்ணுக்கே தெரியவில்லை. எனவே கண்ணுக்கே தெரியாத ஒரு இலக்கை நோக்கி கற்கால மனிதர்கள் கடல் பயணம் மேற்கொண்டிருப்பார்களா? அது மட்டுமல்லாது திமோர் தீவிற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் இருக்கும் ஆழ் கடல் பகுதியைக் கடக்கவே பெட் நரிக் குழுவினருக்கு ஆறு நாட்கள் ஆனது. இது போன்ற பகல் இரவுப் பயணங்களை அதுவும் “கடலில்” கற்கால மனிதர்கள் மேற்கொண்டிருப்பார்களா? ஆறு நாட்களுக்கு கற்கால மனிதர்கள் உணவுக்கும் முக்கியமாக குடி நீருக்கும் என்ன செய்திருப்பார்கள்?
“காட்டு மிராண்டிகள் கடல் பயணம் செய்ய வில்லை. கடல் மட்டம் தான் நாலாயிரம் அடி தாழ்வாக இருந்திருக்கிறது.”
எனவே ஆசியக் கண்டத்திலிருந்து நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்தில், நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்களின் எலும்புகளும் கற்கருவிகளும் காணப்படுவதற்கு, நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியப் பகுதியில் கடல்மட்டம் நாலாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததே காரணம்.
எனவே நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருக்கிறது. அதன் வழியாகவே கற்கால மனிதர்கள் ஆசியக் கண்டத்திலிருந்து ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு நடந்தே தான் சென்றிருக்கிறார்கள். அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது அதே நேரத்தில் நிலப் பகுதியும் ஆங்காங்கே உயர்ந்ததால் தொடர்ச்சியாக இருந்த நிலப் பகுதி பல துண்டுகளாக உடைந்ததுடன், கடல் மட்டமும் உயர்ந்ததால் பல தீவுகளாக உருவானது. அதனால் கற்கால மனிதர்களால் தீவை விட்டு வெளியேற இயலாமல் தீவுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
நிலம் ஏன் உயர்ந்தது? கடல் மட்டம் ஏன் உயர்ந்தது?
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் உருவானது. இந்நிகழ்வில் பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் எண்ணெயும் பிரிந்ததால் பாறைத் தட்டு அடர்த்தி குறைந்ததாக உருவானது. இதனால் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததால் நிலப் பகுதிகள் உயர்ந்தது. அதே நேரத்தில் பாறைக் குழம்பு குளிர்ந்த பொழுது அதிலிருந்து பிரிந்த நீர், ஆழ் கடல் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக கடலில் சேர்ந்ததால் கடல் மட்டம் நாலாயிரம் அடி உயர்ந்தது.
இவ்வாறு நிலப் பகுதிகள் உயரும்பொழுது தான் நில அதிர்ச்சி நிலச் சரிவு சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுகின்றன.
கண்டங்கள் நகர்கின்றன என்று கூறுவது சரியல்ல.
கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்தது. அதன் வழியாக விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு இடம் பெயர்ந்தன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கண்டங்கள் கடல் பகுதியால் பிரிக்கப்பட்டன.
எனவே ஒரே வகை விலங்கினங்கள் கடல் பகுதியால் பிரிக்கப்பட்ட பல்வேறு கண்டங்களில் காணப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததே காரணம். ஆனால் ஒரே வகை விலங்கினங்கள் பல கண்டங்களிலும், தீவுகளிலும் காணப்படுவதற்கு, ஒரு காலத்தில் இந்த நிலப்பகுதிகள் யாவும் ஒன்றாக இணைந்து ஒரு பெரியகண்டம் இருந்ததாகவும் அதன் பிறகு அந்தப் பெருங்கண்டம் பல துண்டுகளாக உடைந்து பல்வேறு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று கற்பனையாக ஒரு விளக்கம் கூறப்படுகிறது.
குறிப்பாக அட்லாண்டிக் கடலால் பிரிக்கப்பட்ட தென் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் மெசோசாரஸ் என்ற நிலத்தில் வாழ்ந்த விலங்கின் எலும்புகள் காணப்படுவதற்கு, முன்பு ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்தன என்றும் பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் முற்றிலும் தவறான ஒரு விளக்கம் கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் நிலம் உயர்ந்து கொண்டிருக்கிறது அதன் காரணமாகவே நில அதிர்ச்சி ஏற்படுகின்றது.
- விஞ்ஞானி க.பொன்முடி. (