வானத்தில் வெப்பநிலை மிகக் குறைவாக இருக்கும் போது மழை பனியாகிறது. அந்தப் பனி பூமியை அடையும் வரை வெப்பநிலை குறைவாகவே இருந்தால் ‘பனி மழையாகப்’ பொழிகிறது. பனியாக ஆரம்பிக்கும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில் காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம் உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது நீராகி நிலத்தை நெருங்கும் முன் மீண்டும் குறைந்த வெப்பம் இருக்குமானால் சிறு ‘ஐஸ் கட்டிகளாக’ விழும். பனியாக வரும் மழைக் காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில் காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம் உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது ‘நீராகி’ விடுகிறது. பூமியில் இருந்து மிகக் கொஞ்சம் உயரத்திற்கே குறைந்த வெப்பம் இருந்து நீர் பனியாக விழாமல் பூமியில் விழுந்த பின் நிலத்தில் குறைந்த வெப்பம் காரணமாகப் பனியானால் அது ‘உறையும் (கண்ணாடி போல்) மழை’.

rain 350ஒரு நாளில் பெய்யும் மழை அளவு 2.5 மி.மீ வரை பெய்தால் அன்றைய நாளில் மழை பெய்தது என்றும், 2.5 - 7.5 மி.மீ வரை பெய்தால் லேசான மழை, 7.6 - 35.5 மி.மீ வரை மிதமான மழை, 35.6 - 64.4 மி.மீ வரை பலத்த மழை, 64.5 - 124.4 மி.மீ வரை மிக பலத்த மழை, 124.5 மி.மீ மேல் பொழிந்தால் அது அசாதாரண பலத்த மழையாகவும் கணக்கிடப்படுகிறது. அசாதாரண மழை பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, இமய மலைப்பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் காணப்படுகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மேகாலயாவிலுள்ள சிரபுஞ்சியில் 11,000 மி.மீட்டர் மழை பொழிகிறது. மழை மேகங்களில் நுண்ணிய உப்புத் துகள்கள், பனிக்கட்டி, சில்வர் அயோடைட் படிமங்கள், திண்ம நிலை கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிட்டவை தூவுவது போன்றவை செயற்கை மழையைப் பொழிவிக்கும் முறைகளாகப் பின்பற்றப்படுகின்றன.

இந்தியா 804’ வட அட்சம் முதல் 3706’ வட அட்சம் வரையிலும் 6807’ கிழக்கு தீர்க்கம் முதல் 97025’ கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவி 32,87,263 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. 23 ½0 வடக்கு அட்சமாக கடகரேகை இந்தியாவின் குறுக்காக சென்று நாட்டை வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலம் என இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. வெப்ப மண்டல நாடுகள் என்று அழைக்கப்படும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகளும் ஒரு குழுவாக 2004 முதல் வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு அந்தந்த நாட்டு மொழியில் 8 பெயர்கள் என மொத்தம் 64 பெயர்களைப் பட்டியலிட்டு சுழற்சி முறையில் பெயரிட்டு வருகின்றன. கொரியாலிஸ் விளைவு (Coriolis Effect) என்பது நிலநடுக்கோட்டுக்கு வடக்கே உருவாகின்ற புயல்கள் அனைத்தும் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகச் (Anti Clockwise) சுழல்வதாகவும், நிலநடுக்கோட்டுக்குத் தெற்கே உருவாகின்ற புயல்கள் இடமிருந்து வலமாகச் (Clockwise) சுழல்வதாகவும் இருக்கும்.

இந்தியா வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை 3214 கி.மீ நீளத்தையும், மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரை 2933 கி.மீ அகலத்தையும் கொண்டுள்ளது.

மழை மேகங்கள் கரையை விட்டுவிட்டு மத்தியிலேயே சென்று பொழிவதில்லை; அதன் காரணமாகத்தான் வானிலை அறிக்கைகள் பெறப்படும் போது ‘கடற்கரையோர மாவட்டங்கள்’ என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இந்தியக் கடற்கரையின் மொத்த நீளம் 6000 கி.மீ. அந்தமான் நிக்கோபார் மற்றும் இலட்சத்தீவு கடற்கரைகளையும் சேர்த்து அதன் நீளம் 7516 கி.மீ.

- மு.நாகேந்திர பிரபு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It