செக்ஸ் உறவு கொள்ள எது சிறந்த இடம்..? இப்படி ஒரு சர்வே எடுக்கப்பட்டுள்ளது ‘காமசூத்ரா காண்டம் நிறுவனம் சார்பில். முதலிடத்தை பெற்றது கார், அடுத்து பாத்ரூம், பப்ளிக் பார்க்.
காண்டம்ன்னா காமசூத்ராதான் என்று பலரும் தெரிந்திருக்கும். அது அவ்வப்போது காண்டம் விழிப்புணர்வுகாக பிரசாரம் செய்வதும், இது போன்று சர்வே எடுப்பதும் உண்டு. அப்படி சமீபத்தில் ஒரு வித்தியாசமான சர்வே எடுத்தது. பல மாநிலங்களிலும் நடந்த இந்த சர்வேயில் பங்கேற்றது 17 ஆயிரத்து 45 பேர். இதில் பாதிப்பேர், சென்னை, மும்பை, டில்லி, கொல்கட்டாவை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுபோல, காண்டம் பயன்படுத்துவோரில் சர்வேயில் பங்கேற்றவர்கள் என்று பார்க்கும் போது, சாப்ட்வேர் துறையில் உள்ளவர்கள் தான் அதிகபட்சமாக 17 சதவீதம்பேர் தைரியமாக தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். அடுத்து, மார்கெட்டிங், வர்த்தகத் துறைகளில் உள்ள நிர்வாகிகள், உயர் நிர்வாக பதவியில் உள்ளவர்கள் 13 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.
செக்ஸ் உறவு கொள்ள ஏற்ற இடம் என்றால், அது அவரவர் படுக்கை அறைதான். ஆனால் சிலருக்கு அதிலும் குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பிடித்த இடம் என்பது முதலில் கார் தானாம். அடுத்து பாத்ரூம் என்று கூறியுள்ளனர். இன்னும் சில பேர், பூங்கா, தோட்டம் என்று கூறியுள்ளனர்.
சர்க்சைக்கிடமான விஷயம் பற்றியும் இந்த சர்வேயில் மீண்டும் கேட்கப்பட்டது. திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு கொண்டது உண்டா என்று கேட்கப்பட்டதற்கு, 49 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். இதில் வேதனை தரத்தக்கது என்னவென்றால், இப்படி கூறியவர்கள் பெரும்பாலோர் 18 முதல் 24 வயது உள்ளவர்கள் தான். இதை விடக்கொடுமை என்னவென்றால், இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், ஒருவருக்கு மேல் செக்ஸ் உறவு கொண்டுள்ளனர் என்பதும் இந்த சர்வேயில் தெரிந்தது. சினிமாக்களாலும், டி.வி தொடர்களாலும் தான், திருமணத்துக்கு முந்தை செக்ஸ் உறவு பற்றி தெரியவந்தது. அது தான் மக்களை கெடுக்கிறது என்று சொல்வதும் எந்தளவு உண்மை என்பதும் இந்த சர்வேயில் தெரிந்தது. பெரும்பாலோர், நண்பர்கள், புத்தகம் படிப்பதன் மூலம், அடுத்து நீலப்படம் பார்ப்பது மூலம் தான் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் வைத்துக்கொள்ள தூண்டுவதாக கூறியுள்ளனர். இது 73 சதவீதம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்து ஓரினச்சேர்கையும் சமுதாயத்தில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது என்பதும் சர்வேயில் தெரியவந்தது.
இந்த சர்வேயில், வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் எச்.ஐ.வி எய்ட்ஸ் பற்றிய பயமும் இளைஞர்களிடம் குறைந்து வருகிறது என்பதுதான். கருத்தடை சாதனம் பயன்படுத்த வேண்டும் என்பது சிலருக்குதான் தெரிகிறது. பல டீன் ஏஜ் வயதினர் வாய் வழிப்புணர்ச்சி கொள்வதில் மகிழ்ச்சி காண்கின்றனர் என்று சொல்கின்றனர். ஆனால் அது நல்லது தானா என்று கேட்டால், அது தானே பாதுகாப்பானது என்கின்றனர். இதுவும் வேதனையான விஷயம். இந்த விஷயத்தில் விழிப்புணர்வு, இளைஞர்களிடம் குறைவுதான் என்று தெரியவந்துள்ளது. வெறும் ஆறு சதவீதப் பேருக்குதான் வாய் வழிப்புணர்ச்சி மூலம் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு என்று தெரிகிறது.
ஆண்களுக்கு பெண்களிடம் பிடித்த கவர்ச்சி உடல் பகுதி எது என்றால், மார்பகங்கள், ஒட்டுமொத்த தோற்றம், பெண்களின் பின்பகுதியில் உள்ள பிட்டம், அது போல பெண்களுக்கு ஆண்களின் உடல்பகுதியில் கவரத்தக்கது என்றால் ஒட்டுமொத்த தோற்றம், கண்கள், புடைதெழும் உடல் அழகு ஆகியவை தானாம். இதுவும் சர்வேயில் கிடைத்த ருசிகரமான தகவல்கள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- வகுப்புரிமையா? வகுப்புத் துவேசமா?
- முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை!
- தமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா?
- நான் யார்
- தேடல்கள்
- கர்ப்பத்தடை
- பாசிச பாசக எதிர்ப்பு
- தனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்
- தமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பாலியல்
உறவு கொள்ள சிறந்த இடம்?
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.