ஞாபக சக்திக் குறைவு என்ற இடர்பாடு, மூளையின் இயக்கக் குறைவு, நினைவு தடுமாற்றம் மற்றும் மறதி இவைகளின் மூலம் அறியப்படுகிறது. புரிதல்திறனில் பின்னடைவு மற்றும் இயற்கையின் நன்கொடையான இயல்பான அறிவு இவைகளி லிருந்து ஞாபக மறதி என்பது வேறுபடுகிறது.
பெரும்பாலான சமயங்களில் (cases) இருதயம் மற்றும் மண்ணீரலில் இயக்கக்குறைபாடு காரணமாகவும், சிறுநீரக சாரம் (kidney essence) குறைபாடு காரணமாகவும் இந்த நிலை அமைகிறது. வாங் யாங் என்ற சீன அறிஞரின் கூற்றுப்படி “சாரம் மற்றும் எண்ணங்கள் இரண்டும் சிறுநீரகத்தில் சேமிக்கப்படுகின்றன. சிறுநீரகத்தில் சாரம் குறைபாடு ஏற்பட்டால் எண்ணம் பலவீனம் அடையும். இதயத்துடன் எண்ணம் ஒத்துழைக்க மறுக்கும்போது ஞாபக சக்திக் குறைபாடு ஏற்படுகிறது. ‘Prescription based on three pathogenic factors’ என்ற நூல், “நினைவுக்குக் கொண்டு வருதல் மற்றும் சிந்தித்தல் என்ற பணிகளில் மண்ணீரல் ஆதிக்கம் செலுத்துகிறது. நினைவுக்குக் கொண்டுவருதல் என்பது மனதிலுள்ள பழைய சம்பவங்களை திரும்ப அழைக்கும் ஆற்றல். மேலும் சிந்தித்தல் என்பதும் இதயத்தின் (மனதின்) செயல்பாட்டைப் பொருத்து இருக்கிறது. ஆதலால் மண்ணீரல் பாதிப்புக்கு உள்ளாகும் போது, மனதால் தொகுக்கப்படுவது அல்லது ஞாபகத்தில் வைப்பது தடைபடுகிறது, மேலும் மனது அமைதியற்று இருக்கிறது. அதனால் ஞாபக சக்தி குறைவுபடுகிறது” என்று கூறுகிறது
இருதயமும் மண்ணீரலும் இரத்தத்தை ஆக்கிரமிக்கிறது. அதீத சிந்தனை இருதயத்தையும், மண்ணீரலையும் சேதப்படுத்துகிறது. இரத்தத்தை விழுங்குகிறது. இது ஞாபக சக்தி குறைபாட்டிற்கு வழிகாட்டுகிறது. சிறுநீரகம், சாரம் மற்றும் மஜ்ஜை மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இது அதீத இச்சைப்படியான பாலுணர்வு செயல்பாடுகளால் செலவழிக்கப்படும் பொழுது அல்லது வெளியேற்றப்படும்பொழுது மூளை பராமரிக்கப்படுவது குறைவுபடுகிறது. இச்செயல் ஞாபக சக்திக் குறைபாட்டிற்குக் காரணமாகிறது.
முதுமையில் சிறுநீரகம் நலிவடைவதால் பலகீனமும் ஞாபகசக்திக் குறைபாட்டிற்குக் காரணமாகிறது.
ஞாபக சக்திக் குறைபாட்டிற்கு அக்குபஞ்சர் சிகிச்சை
இருதயத்தில் இரத்தக் குறைபாட்டை ஈடு செய்வதும் மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தை பழைய நிலைக்குக் கொண்டு வருவதும் சிகிச்சையாக அமைகிறது. இருதயத்தையும், மண்ணீரலையும் பலப்படுத்துவதற்கு Ex - 6, UB - 15 மற்றும் UB-20 ஆகிய புள்ளிகளைப் பயன்படுத்த வேண்டும்.
சிறுநீரக சாரத்தை மேம்படுத்துவதற்கும் மஜ்ஜையை உருவாக்கவும் மூளையின் குறைபாட்டை ஈடு செய்யவும் K - 6 மற்றும் UB - 23 என்ற புள்ளிகளைத் தூண்ட வேண்டும்.
உணவு சாரத்தை இரத்தமாக மாற்றுவதற்கும் இரத்தத்தை எடுத்துச் செல்வதற்கும் சக்தி (qi) மற்றும் இரத்தக் குறைபாட்டை ஈடு செய்வதற்கும் மண்ணீரல் மற்றும் இரைப்பை மீண்டும் பழைய நிலையை அடைவதற்கும் ST - 36 என்ற புள்ளியை தூண்ட வேண்டும்.
(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)