பெண்களில் சிலருக்கு ஆண்களைப் போல் முகத்தில் ரோமம் வளர்கிறதே, அது ஏன்? அதைத் தடுக்க என்ன வழி?

சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் என்ற ஆண்களின் முக்கிய இயக்குநீர் பெண்களுக்கு அளவுக்கு அதிகமாகச் சுரந்துவிடும். அப்போது பெண்களுக்கும் ஆண்களைப்போல் முகத்தில் ரோமம் வளர்கிறது. இந்த நிலை பொதுவாக பரம்பரை அம்சத்தால்தான் ஏற்படுகிறது. அபூர்வமாக சில பெண்களுக்கு அட்ரீனல் சுரப்பிகளின் மிகையான பணி காரணமாகவும், அட்ரீனல் சுரபிகளில் கட்டிகள் தோன்றுவதாலும் முகத்தில் ரோமம் வளரலாம். இதனைத் தடுக்க வழியில்லை. விரும்பினால் சிகிச்சை நிபுணரின் உதவியுடன் அழகூட்டும் அறுவை சிகிச்சை (cosmetic surgery) செய்து கொள்ளலாம்.

Pin It