தடுப்பு முறை

இந்நோய் வரக்கூடிய நிலையில் உள்ள குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டும். இந்தத் தடுப்பு ஊசியில் இந்த நோய்க்கு உரிய வீரியத்தைக் குறைத்து, அதே நேரத்தில் அதை நோய்வரும் முன்பு குழந்தைகளுக்குக் கொடுத்தால் உயிர் உள்ள தட்டம்மை வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போரிடுகின்ற சக்தியுள்ள எதிர்ப்பான்களை உண்டு பண்ணுவதைக் காணலாம். இந்தத் தடுப்பு ஊசி கொடுக்கப்பட்ட 5 முதல் 10 நாட்கள் வரை குழந்தையின் உடம்பில் சில நோய் உணர்வுகளை உண்டாக்குவது வழக்கம். பொதுவாக இந்தத் தடுப்பு ஊசியைப் போடவேண்டும். இத்துடன் சேர்த்து டி.பி. சம்மந்தப்பட்ட எம்.எம்.ஆர். தடுப்புமுறையோடு இந்தத் தடுப்பு போடுவது நல்லது. பெரும்பாலும் இந்தத் தடுப்பு ஊசியின் சக்தியினால் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் இந் நோய் வராமல் தடுக்கமுடிகிறது.

சிறு எச்சரிக்கை:

இந்தத் தட்டம்மை தடுப்பு ஊசியை சில நேரங்களில் கொடுக்கக்கூடாது. வெண் ரத்தக் கிருமிகளில் ஏற்படுகின்ற புற்று நோய் உள்ள குழந்தைகளுக்கும், அதே வெண் கிருமிகளில் ஒரு பகுதியான நிணநீர் சம்மந்தப்பட்ட வெள்ளை ரத்த அணுக்கள் குறைவான நேரங்களில் ஸ்டீராய்டு மற்றும் உணவு செரிப்புத்தன்மை சம்மந்தப்பட்ட மருந்துகளை உட்கொள்கின்ற நேரங்களிலும் மற்றும் டி.பி. வியாதியால் குழந்தை பீடிக்கப்பட்ட நேரங்களிலும் இந்தத் தடுப்பு ஊசியைப் போடாமல் தடுத்துவைப்பது நல்லது. ஆனால் சில குழந்தைகளின் உடம்பில் எய்ட்ஸ் சம்மந்தப்பட்ட எச்.ஐ.வி. தாக்கம் இருந்தாலும் இந்தத் தடுப்பு ஊசியைப் போடலாம்.

இணைந்து எதிர்க்கும் தடுப்பான்கள்:

எதிர்ப்பு ஆற்றல் குழந்தையின் உடம்பிலேயே உண்டாகாமல் அதற்குரிய எதிர்ப்பு சக்தியை உருவாக்கி எடுக்கப்பட்ட தடுப்பு ஊசிகளைக் கொடுத்து நோயை எதிர்த்து அமைதியாகப் போரிடும் முறையைப் பயன்படுத்தி இந்த நோய்வருகின்ற சூழ்நிலையில் இருக்கின்ற குழந்தைகளுக்கும், ஒரே வீட்டில் இருக்கின்ற குழந்தைகளுக்கும் கொடுப்பது முறையாகும். இவற்றோடு இணைத்து ‘காமா குளோபின்’ என்னும் ஊசியையும் 1/4 மில்லி லிட்டரிலிருந்து 1/2 மில்லி.லிட்டர் வரை குழந்தையின் ஒவ்வொரு கிலோ எடைக்கும் கணித்து கொடுக்கப்படுவது ஒரு முறையாகும். நிறைவான குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுவது உண்டு. இந்த ‘காமா குளோபின்’ ஊசியை அதிக பட்சம் 15 மி.லி. அளவிற்குக் கொடுக்கலாம். 

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

Pin It