உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

நாட்கள் 

காலை 6 மணி 

மதியம் 12 மணி 

மாலை 6 மணி 

மொத்தம் பழங்கள்

1வது நாள் 

1

1

1

3

2வது நாள் 

2

2

2

6

3வது நாள் 

3

3

3

9

4வது நாள் 

4

4

4

12

5வது நாள் 

4

4

4

12

6வது நாள் 

4

4

4

12

7வது நாள் 

3

3

3

9

8வது நாள் 

2

2

2

6

9வது நாள் 

1

1

1

3

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளாபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளாபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து அருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் இழந்த சக்தியையும், உற்சாகத்தையும் நாம் பெறலாம்.

செய்து பார்க்கலாமே!

Comments

47 comments

47
பகவன்
நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.// நன்றி! பயனுள்ள கருத்து!
Arutchelvi
மிகவும் பயனுள்ள தகவல். இரும்பு சத்து அதிகம் அடங்கியுள்ள உணவுப் பொருட்களின் பட்டியலை கொடுத்தால் நன்றாய் இருக்கும். மிக்க நன்றி!
Balamurugan.R
MARUTHUVARIDAM SELLA THEVAIELLAI. KURAINTHA SELAVIL ADHIGA ஹீமோகுளோபினை PERA ARUMAIYANA VAZHI. NANRI.
KUTTY
THANKS 4 U R GUD TIPS.
vadivel
thanks for your message .i will try.
shahul hameed
nalla thahaval koduthatharku nandri..............
maha
arumaiyana thagaval koduthirgal. migavum payanullathagum. nandrigal.
R.Surendran
very very useful massage for health. Thanks
shobana
thanks for your message .i will try.
maddy
migavum santhosam...mikka nandri!... vanakam
thameem
nalla arumaiyana message
vsathasivam
one&only thebest advice
Guest
migavum payanulladha irukkiradhu. thodarndhu ezhudhungal
K.DAMODARASWAMY
அருமை! அருமை!! எழிய முறை! மிகவும் குறைந்த செல்வில்!!! ஆகா அற்புதம்!! தொடரட்டும் உமது பணி இந்த சமுதாயத்திற்கு ந்ன்றி
Vijayakumar.S
thanks for the information.
sumathi
thank you for your useful message. i will try it
nasreen
thanks for msg migavum payanullathai irukirathu
SUGANTHI
MIGAVUM NANTRI
S Shangar
அருமை! மிக்க நன்றி.
dr prabu
நல்ல் அருமையான செயதி , thanks
சுரேஷ்
நான் வாரமிருமுறை டயாலசிஸ் செய்துவருகிறேன்.

நான் உலர்ந்த திராட்சை எடுத்துக்கொள்ளலாமா?

எனக்கு ஹீமொகுளோபின் அள்வு மிகமிக குறைவாக 4கிராம் மட்டுமே உள்ளது.

தகவல் தந்து உதவுங்கள்.

சுரெஷ் - 7708805831
Mahaboob ali
நான் தேடிய விடை கிடைத்தது. மிகவும் நன்றி!
suresh
மிகவும் பயனுள்ள தகவல். இரும்பு சத்து அதிகம் உள்ள பழங்களின் பெயர்களை தந்தாள் மிகவும் நல்லது....
priya
superb tips
i will try
kondappan
ok i will try
kannan
யாரவது ஒரு உதவி கூர முடியும...உடல் எடை அதிகரிக என்ன செய்யா வைன்டும் ..
Marimuthu.D
This is very useful for health with low cost.
Marimuthu.D
it is very useful
Marimuthu.D
good
kiruba
super tips
starmed
nice tips
mohammed ilyas
thnk by this for usfull message so kind of u very thn u
Manimaran P
பக்க விலைவு இல்லாத வைதியம். நல்ல தகவல்
ramki
நல்ல தகவல் சொன்னதர்க்கு என் நன்ரி ஐயா...............
arivarasan
நல்ல டிப்ஸ் கடவுள் மாதிரி சொன்னீங்க. ரெம்ப நன்றி
Manoharan
மிக அருமயான தகவல்
deepan
thank u so much...........................................
seema
Thanks for ur tips....
s.latha
மிகவும் அருமையான தகவல் நன்ட்ரி, நன்ரி.
sureshkumar
i l try
roobi
ரொம்ப நல்ல செய்தி ஹெமொக்லொபின் அதிகமஃபக இன்னும் வெரு என்ன சாபிடனும் தெரின்சிகலமா.
Seenu
Ungal marutthuva kurippu Valimaiyanadhu aanaal Elimaiyanadhu.

Mikka Nandri.

Vaazgha Valamudan. Thodarattum Ungal Pani.
madasamy
thanks lot. good information
Vaheetha Banu
மிகவும் பயனுள்ள தகவல். இன்று உள்ள விலைவாசி உயர்வில் இந்த கருந்திராட்சை மூலம் ஹீமோகுளோபின் அதிகரிக்க தந்திருக்கும் விஷயம் பயனுள்ளது. நன்றி..
m.chinnadas
மிகவும் அருமையான தகவல் நன்ட்ரி, நன்ரி.
saran
thanks i will try,after 9 days i will reply u
Guest
நல்ல கருத்து

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.