மக்கள் மாரியம்மன் பண்டிகையின் பேரால் காட்டுமிராண்டித்தனமாக தப்புகளைக் கொட்டிக் கொண்டும் மலைவாச லம்பாடிகள் ஆடுவதுபோன்ற ஆட்டங்களையும் ஆடிக்கொண்டும் கீழ் மக்கள் நடப்பதுபோன்ற வேஷங் களைப் போட்டுக்கொண்டும், ஆபாசமான பேச்சுகளைப் பேசிக்கொண்டும், ஆயிரக்கணக்கான ரூபாய்களை பாழாக்கிக்கொண்டும் செய்துவரும் அக்கிரமம் இந்த நாட்டில் அறியாதார் யாரும் இல்லை.
இது நாளாக நாளாக அதிகமாகின்றதே தவிர மக்களுக்கு அறிவு வந்து, இந்த பழயகால நிலைமை சிறிதாவது மாறி இருக்கின்ற தென்று சொல்லு வதற்கே இல்லை.
முழுமுதற் கடவுளென்று சொல்லப்பட்ட விஷ்ணு, சிவன் என்கின்ற கடவுள்களின் “பாடல் பெற்ற ஸ்தல” உற்சவம் பூசை முதலியவைகள் எல்லாம் கூட இப்பொழுது பெரிதும் குறைந்து வருகின்றன. இந்த உற்சவ வரும்படிகளும் சரி பகுதிக்கு குறைந்தும் வருகின்றன.
ஒரே கடவுள் என்று சொல்லுகின்ற அல்லாசாமியின் உற்சவமும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. ஆனால் இந்த மாரி, கருப்பன், காத்த வராயன் என்று சொல்லப்பட்ட “கீழ்த்தர பரிவார தேவதைகள், என்று சொல்லப்படும் சாமிகளின் பக்தர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் இப்போது அளவுகிடையாது. இந்த “தேவதைகளை” வணங்குவதும் இவைகளுக்கு உற்சவம் செய்வதும் கீழ் மக்களாயிருப்பவர்களது செய்கை என்று அனேக சைவ வைணவ பண்டிதர்கள் எழுதி இருக்கின்றார்கள். அன்றியும் மாரி என்றால் என்ன அது எப்படிப்பட்ட தெய்வம் அதன் கதை என்ன என்பது யாருக்காவது தெரியுமா? அது அறிவுள்ள மக்களால் ஒப்புக் கொள்ளக் கூடியதா? என்று பார்த்தால் அது கடைசியில் சைபராகத்தான் முடியும்.
இம் மாதிரி அர்த்தமற்றதும் அனாகரீகமானதும் காட்டுமிராண்டித்தனமானதுமான காரியங்களை மதத்தின் பேரால், கடவுள்களின் பேரால் சற்றும் மான வெட்க மில்லாமல் செய்து கொண்டிருக்கின்ற மக்கள் நம்மை நாஸ்திகமென்றும், மத தூஷணை என்றும், கடவுள் தூஷணை என்றும் சொல்லுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இந்த லட்சணத்தில் இந்த மாரியாயி என்கின்ற சாமிகள் ஒரு ஊருக்கு இரண்டு மூன்று இருந்துகொண்டு ஏககாலத்தில் உற்சவம் செய்து சிறுபிள்ளைகளின் புத்தியை மூடமாக்கி அவர்களையும் காட்டுமிராண்டிகள் போல குதிக்கும்படி செய்வது மிகவும் அக்கிரமமான காரியமாகும். இதற்கு வியாபாரிகள் என்று சொல்லப்படுவோர்கள் கடைகடைக்கு 10-ம் 5-ம் கொடுத்து இதை வளர்ப்பது என்பது அதி மூடத்தனமும் அக்கிரமுமான காரியமாகும்,
மற்றும் இப்படிப்பட்ட காரியங்கள் பொது ஜனங்கள் சுகாதாரத்திற்கு எவ்வளவு கெடுதி என்றும் கட்சிப்பிரதி கட்சிகளால் பொதுஜன அமைதிக்கு எவ்வளவு பங்கம் என்றும் நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
உதாரணமாக ஈரோட்டில் 3 மாரியம்மன்கள் உண்டு. இவைகள் கட்சி யில்லாமல் நடந்த காலமே அருமை. தவிர ஒவ்வொரு கோவிலும் ஊருக்குள் வீடுகளுக்கு மத்தியில் இருக்கின்றது. உற்சவ காலத்தில் இரவு எல்லாம் தப்புக்கொட்டுவது அக்கம் பக்கத்திய ஜனங்களுக்கு தூக்கம் இல்லாமல் செய்துவிடுகிறது. இவற்றுள் ஒன்று குழந்தைகள் பெண்கள் ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் இருக்கிறது. இதற்குப் பெரிய மாரியம்மன் என்று பெயர். இந்த கோவிலில் தப்பட்டை அடிப்பதால் ஆஸ்பத்திரி வியாதியஸ்தர்களுக்கு அதிக தொல்லை உண்டு. ஆதலால் இந்த வருஷம் ஆஸ்பத்திரி நிர்வாகஸ்தர் சர்க்காருக்கு விண்ணப்பம் போட்டு இரவு பத்து மணிக்கு மேல் கோவிலில் தப்புக் கொட்டக்கூடாது என்ற உத்திரவை கோவில் அதிகாரிகளுக்கு சார்வு செய்திருப்பதாய்த் தெரிகின்றது. இந்தப் பெரிய மாரி இந்த உத்திரவு போட்ட வர்களையும் கேட்டவர்களையும் என்ன செய்யுமென்பது இனிமேல் பார்க்கக் கூடிய விஷயமானாலும் இந்த உத்திரவை நாம் இப்போது மனமார வரவேற்கின்றோம்.
போலீசுக்கு ஒரு வார்த்தை
கடைசியாக போலீசுக்கு ஒரு வார்த்தை. இந்த பண்டிகையை உத்தே சித்து வாலிபர்களில் பலர் பலவித ஆபாசமான வேஷம் போட்டு பொது ஜனங்களை பணம் கொடுக்கும்படி தொந்திரவு செய்வதும் குடித்து விட்டு கண்டபடி தப்புக்கொட்டிக்கொண்டு ஆபாசமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டு திரிவதுமான காரியங்களை போலீசார் கவனித்து நியூ சென்சுக்கு சார்ஜ் செய்வதன் மூலம் இக்காரியங்களைச் செய்தால் அதனாலும் வாலிபர் களுக்கு பல நன்மைகள் ஏற்படும் என்றும் இப்படிச் செய்வதையும் மனமார வரவேற்போம் என்றும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
தோழர் பெரியார், குடி அரசு - 02.04.1933
மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்
மனிதனுக்குள் கடவுளைப் புகுத்துவது மனிதனை முட்டாளாக்கும் டானிக் (வைட்டமின் சத்து) ஆகும். இதை இன்று பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள் கடவுள் பிரசாரம் செய்வதில் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
கடவுள் மனித நலத்துக்காகக் கண்டு பிடித்த சாதனம் அல்ல. மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தும் சாதனமேயாகும். சூரியனை, சந்திரனை நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுப்பிடிக்கவில்லை. அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்து கொண்டான். இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. காரண காரியங்கள் தேவையில்லை. மனிதன் என்றால் இவைகளை அறிந்தே ஆகவேண்டும். இவற்றின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.
ஆனால், கடவுள் அப்படி அல்ல; ஒருவன் சொல்லி அதுவும் சொல்லுவது மாத்திரமல்ல, நம்பும்படி செய்து, நம்பும்படி செய்வது மாத்திரமல்ல, நம்பும்படி கட்டாயப்படுத்தி மனித மூளைக்குள் புகுத்தியாக வேண்டும். இந்தக் கதி சர்வ சக்தியுள்ள "கடவுளுக்கு" ஏற்பட்டது பரிதாபம்! மகா பரிதாபம்!
கடவுள் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கிவிட்டது. அதாவது சிறு குழந்தை கையில் கிடைத்த நெருப்புப்பந்தம் வீட்டையே, ஊரையே எரித்து சாம்பலாக்கியது என்பது போல் கடவுள் எண்ணம் அறிவையே கொன்று விட்டது என்று சொல்லலாம். கடவுள் என்பது "பிடிக்குப்பிடி நமசிவாயம், (நமசிவாயம் என்றால், இங்கு ஓன்றும் இல்லை; சூனியம் என்றுதான் பொருள்)
அது "கடவுள்" என்றால் ஒரு "சக்தி," "சக்தி கூட அல்ல;" "ஒரு காரணம்" "காரணப் பொருள்கூட அல்ல" அப்படி நினைப்பது, நினைத்துக் கொள்வது மனிதனுக்கு ஒரு "சாந்தி" என்பதாக கா.சு.வும் ( ஆ.டு .பிள்ளை), திரு.வி.க.வும் சொன்ன விளக்கம் - இதை பழைய "குடிஅரசு" இதழில் காணலாம். ஆனாலும் இவர்கள் விக்கிரக பூசையும், பட (உருவ) பூசையும் செய்து வந்தார்கள். கடைசியாக மாற்றிக் கொண்டார்கள்.
மனிதனுக்கு எதற்காக கடவுள் தேவைப்பட்டது என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதிலும், கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வ சக்தியில் நம்பிக்கை வைப்பதே இல்லை. எவனும் சம்பிரதாயத்திற்காக "கடவுள் செயல்" என்கிறானே தவிர, காரியத்தில் மனிதன் செயல் என்றும், இயற்கை என்றும், அகஸ்மாத், தற்சம்பவம், ஆக்சிடெண்ட் என்றும் தான் முடிவு செய்து கொண்டவனாகிறான். சர்வம் கடவுள் செயல் என்று சொல்லுகின்ற எவனும் சர்வத்திற்கும் தற்காப்பு செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது நாஸ்திகன் - கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.
மற்றும் சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள் மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத் தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை என்பதை சிந்திக்கவே மாட்டேன் என்கிறான். கிருஸ்து பாதிரி இந்தக் கேள்விக்குப் பதிலாக "கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்துவிட்டான்; அந்த அறிவைக் கொண்டு கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டியது மனிதன் கடமை" என்று சொல்லிவிட்டார்.
உன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்டவில்லை? என்று கேட்டதற்கு, "பாபஜன்மங்களுக்கு எட்டாது" என்று சொல்லிவிட்டார். அந்த பாபஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால் பாபஜன்மங்களை ஏன் படைத்தார்? கடவுள் பாபஜன்மங்களைப் படைக்கவில்லையானால், பாபஜன்மங் களைப் படைத்தது யார்? என்று கேட்டேன். "சாத்தான் படைத்தான்" என்றும், மற்றும் அவருக்கே புரியாத எதை எதையோ யோசித்துப் பேசினார்.
இஸ்லாத்தின் கதியும் இப்படித்தான். இந்துவின் கதியே மும்மூர்த்திகள் ஓங்காளி, மாரி, காத்தவராயன், மதுரை வீரன், கருப்பண்ணன், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமாதி, கல்லுகள், படங்கள், பட்சிகள், மிருகங்கள், மரங்கள், சாணி (மூட்டை உருவ), உருண்டைகள், செத்துப்போன மனிதர்கள் முதலிய எத்தனையோ பண்டங்கள் கடவுள்களாக வணங்கத்தக்கவைகளாகவும் இருந்து வருகின்றன. இவைகளை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஒரு சர்வ சக்தியுள்ள கடவுளுக்குத் தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்ள - தன் உருவத்தை விளக்க சக்தியில்லை என்பதைக் காட்டத்தான்.
பிறகு - முன்ஜென்மம் - பின் ஜென்மம், கருமம், விதி, நரகம், சொர்க்கம், வைகுண்டம், கைலாயம் இப்படி இன்னும் பல பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினது போல் உளறல் மேல் உளறல்கள்.
மனிதனுக்குப் பிறகு முதல் சாவுவரை எதத்னையோ துன்பமும், தொல்லையும், இருக்க இந்தக் கடவுள் கருமம் மோட்ச - நரகத் தொல்லைகள் ஒருபுறம் மனிதனைச் சித்திரவதை செய்கிறது. மனிதன் (ஜீவ கோடிகள்) பிறப்புக்கும், வாழ்க்கைக்கும், சாவுக்கும் இடையில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், கவலை, தொல்லை முதலிய காரியங்களுக்கு அவசியம் என்ன? காரணம் என்ன? என்பதை எவனாலும் இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லையே! இத்தனைக்கும் மனிதன் கழுதை, குதிரை, நாய், நரி, எருமை, யானை, புலி, சிங்கம், ஈ, எறும்பு முதலான எண்ணிறந்த ஜீவராசிகளைவிட அதிகமான அறிவு (பகுத்தறிவு) படைத்தவனாவான்.
இந்தப் பகுத்தறிவின் பயனால்தான் மற்ற ஜீவப்பிராணிகளுக்கு இல்லாத தொல்லையை மனிதன் அனுபவிக்கிறான். காரணம் இந்தப் பாழாய்ப்போன கடவுளால் தான் அதிகத் தொல்லை என்பேன். "உள்ளத்தைப் பங்கிட்டு உண்பது," "உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது" என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு, வேலையோ, அவசியமோ இருக்காது. இப்போது கையில் வலுத்தவன் காரியமாகவும், அயோக்கியன் ஆதிக்கமாகவும் இருப்பதால், மனிதன் அறிவு இருந்தும் தொல்லைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறான் - அடிமையாக வாழ்கிறான்.
இனி ஒரு அய்ம்பது ஆண்டுக்குள் மனிதனுக்கு சராசரி வயது 100 – ஆகப் போகிறது. இது உறுதி. இப்பொழுதே பல நாடுகளில் சராசரி மனித வயது 67- முதல் 74- வரை இருந்து வருகிறது. நமது நாட்டில் 1950- ல் சராசரி வயது 32- ஆக இருந்தது. இன்று 50- ஆக ஆகிவிட்டது. இதற்குக் காரணம் 1940- ல் படித்த மக்கள் நம்நாட்டில் 100- க்கு 9- பேராக இருந்தவர்கள் காமராசர் முயற்சியால் 100- க்கு 50- பேராக ஆனதுதான். அதோடு கூடவே, "கடவுளும்," "கடவுள் செயலும்" வெகுதூரம் குறைந்து மறைந்து வருவதும் தான் என்று சொல்லுவேன்.
கடவுள் மறைய மறைய மனிதனுக்கு அறிவு வளரும். சுதந்திரம் அதிகமாகும். நமது பெண்களுக்குப் அந்த பாப ஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால் பூரண சுதந்திரம் இருக்குமானால் - வாழ்வில் சுயேச்சையும், சமத்துவமும் ஏற்படுதமானால், மனிதன் அறிவும், ஆயுளும் எல்லை இல்லாமல் வளர்ந்து கொண்டே போகும்.
முதலில் கடவுள் எண்ணம் மறையட்டும். இன்னும் நம்நாட்டு ஆட்சியாளர்களுக்கு (உண்மையான) தி.மு.க. காரருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர்கள் (தி.மு.க.காரர்) இனியும் இரண்டு லட்சம் மெம்பர்களைச் சேர்க்க வேண்டும். பிறகு இவர்களை அசைக்க எந்த மாஜிகளாலும் முடியாது. இது தான் கடவுள் இரகசியம்.
தோழர் பெரியார் விடுதலை 03.11.1970
சுகாதார வாழ்வு!
நமது மக்களின் சராசரி வயது 24; வெள்ளைக்காரரின் சராசரி வயது 45. இதற்குக் காரணம் என்ன? சுகாதாரத்தினால் என்ன பலனிருக்கின்றது என்பதே நமக்குத் தெரியாது. “எல்லாம் கடவுள் செயல்” என்கின்ற ஒரே ஒரு அறிவுதான் உண்டு. நமக்குக் ‘காலரா’வந்தால் ‘ஓங்காளியம்மன்’குற்றமென்று பொங்கல் வைக்கவும்; வேல் மிரவணை செய்யவும் தான் முயற்சி செய்வோம். வைசூரி வந்தால் மாரியம்மன் குற்றமென்று மாரியாயிக்கு தயிர் அபிஷேகமும், இளநீர் அபிஷேகமும் தான் செய்வோம். வயிற்றுவலி வந்தால் திருப்பதி பொன்றாமத்தையனுக்கு வேண்டுதல் செய்வோம். நரம்புச் சிலந்தி வந்தால் சிலந்திராயனுக்கு அபிஷேகம் செய்வோம். நம் சங்கதிதானிப்படி என்றால், குழந்தைகளுக்குக் காயலா வந்தால் ‘பாலாரிஷ்டம்’என்போம்; கிரக தோஷமென்போம்; செத்துவிட்டால் விதி மூண்டுவிட்டது என்போம். ஆகவே இந்த மாதிரி வழிகளில்தான் நமது புத்திகள் போகுமேயல்லாமல் ஏன் வியாதி வந்தது! ஆகாரத்திலாவது, பானத்திலாவது, காற்றிலாவது என்ன கெடுதி ஏற்பட்டது? சரீரத்தில் என்ன கோளாறு இருக்கின்றது? என்கின்ற விஷயங்களில் கவலை செலுத்தும்படியான அறிவோ, படிப்போ நமக்குக் கிடையாது.
நமது நாட்டு மக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை பக்கத்து வீட்டுக்கு முன்புறமாய்க் கொண்டுபோய்க் கொட்டுவதே வழக்கம்; பக்கத்து வீட்டுக்காரன் நமது வீட்டுக்கு முன்புறத்தில் கொண்டுவந்து கொட்டி விட்டுப் போவது வழக்கம். நமது குழந்தைகளுக்குப் பொது வீதிகளேதான் கக்கூசுகள். - தோழர் பெரியார், குடிஅரசு, 21.09.1930)
“இப்போது இந்த கோடைகாலப் பருவத்தில் தமிழ்நாட்டில் எங்கும் மாரியம்மன் பண்டிகை என்பதாக ஒரு பண்டிகை நடந்து வருகிறது. மாரியம்மன் கடவுள் - கிராம தேவதை என்று பெயர் இருந்தாலூம், அது ஆரியக் கதைப்படி, ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி, மாரி ஆகிவிட்டாள். இந்த மாரி இல்லாத கிராமமே தமிழ்நாட்டில் இல்லை. மாரி, கிராம தேவதையாதலால், பாமர மக்கள் எல்லோருக்கும் கடவுளாகிவிட்டாள்.” - தோழர் பெரியார், விடுதலை 25.3.1960
ஒரே கடவுள் என்று சொல்லுகின்ற அல்லாசாமியின் உற்சவமும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. ஆனால் இந்த மாரி, கருப்பன், காத்த வராயன் என்று சொல்லப்பட்ட 'கீழ்த்தர பரிவார தேவதைகள்' என்று சொல்லப்படும் சாமிகளின் பக்தர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் இப்போது அளவு கிடையாது. இந்த 'தேவதைகளை' வணங்குவதும் இவைகளுக்கு உற்சவம் செய்வதும் கீழ் மக்களாயிருப்பவர்களது செய்கை என்று அனேக சைவ வைணவ பண்டிதர்கள் எழுதி இருக்கின்றார்கள். அன்றியும் மாரி என்றால் என்ன அது எப்படிப்பட்ட தெய்வம் அதன் கதை என்ன என்பது யாருக்காவது தெரியுமா? அது அறிவுள்ள மக்களால் ஒப்புக் கொள்ளக் கூடியதா? என்று பார்த்தால் அது கடைசியில் சைபராகத்தான் முடியும்.
இம் மாதிரி அர்த்தமற்றதும் அனாகரீகமானதும் காட்டுமிராண்டித்தனமானதுமான காரியங்களை மதத்தின் பேரால், கடவுள்களின் பேரால் சற்றும் மான வெட்கமில்லாமல் செய்து கொண்டிருக்கின்ற மக்கள் நம்மை நாஸ்திகமென்றும், மத தூஷணை என்றும், கடவுள் தூஷணை என்றும் சொல்லுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இந்த லட்சணத்தில் இந்த மாரியாயி என்கின்ற சாமிகள் ஒரு ஊருக்கு இரண்டு மூன்று இருந்துகொண்டு ஏககாலத்தில் உற்சவம் செய்து சிறுபிள்ளைகளின் புத்தியை மூடமாக்கி அவர்களையும் காட்டுமிராண்டிகள் போல குதிக்கும்படி செய்வது மிகவும் அக்கிரமமான காரியமாகும். இதற்கு வியாபாரிகள் என்று சொல்லப்படுவோர்கள் கடைகடைக்கு 10-ம் 5-ம் கொடுத்து இதை வளர்ப்பது என்பது அதி மூடத்தனமும் அக்கிரமுமான காரியமாகும்.
மற்றும் இப்படிப்பட்ட காரியங்கள் பொது ஜனங்கள் சுகாதாரத்திற்கு எவ்வளவு கெடுதி என்றும் கட்சி, பிரதிக் கட்சிகளால் பொதுஜன அமைதிக்கு எவ்வளவு பங்கம் என்றும் நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.:” தோழர் பெரியார், குடி அரசு 02.04.1933
சிங்கப்பூரில் பெரியார்
பொதுவாக பூரண மது விலக்கு முடியாதென்றும் சிறப்பாக நூற்றுக்குத் தொண்ணூறு மக்களாகிய பாமர மக்களுக்குள் சிறிதுகூட முடியாதென்றும் இந்துக்களுடைய கடவுள்களில் பாமர மக்கள் கடவுள்களாகிய முருகன், காட்டேரி, கருப்பன், வீரன், முனியாண்டி, காளி, பராசக்தி முதலாகிய கடவுள்களும் மற்றும் பல பார்ப்பன கடவுள்களும் யாகம் சாந்தி முதலிய வைதீகச் சடங்குகளுக்கு வழிபடும் இந்துக்களில் மதுவை கட்டாய வஸ்துவாக கொண்டிருக்கின்றது என்றும் அனேகம்பேருக்கு மதுபானம் மதசம்பிரதாயத்திலும் மரியாதை சம்பிரதாயத் திலும் கட்டாய வஸ்துவாக கருதப்பட்டு வருகின்றது என்றும் அதனாலேயே தான் மதுவிலக்குக்குமிதக்குடி (டெம்பரன்ஸ்) என்றும் பேர் ஏற்பட்டதென்றும் இதில் நம்பிக்கை உள்ள சமூகத்திற்கு மதுவிலக்கு என்பது சுலபசாத்தியமல்ல என்பதே தமது அபிப்பிராயம்.
மலாய் நாட்டில் உள்ள தோட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு கள்ளுக்கடையும் கள்ளுள் வைத்து நைவேத்தியம் செய்ய ஒவ்வொரு சாமி கோவிலும் இந்து மக்கள் சம்மதத்தின் பேரிலேயே கட்டப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டதாகவும் அக்கோவில் களை யெல்லாம் இடித்து அச்சாமிகளை யெல்லாம் ஒழித்தாலொழிய மதுவிலக்கைப் பற்றி பேசுவது யோக்கியமாகாது. இப்படியே அனேகமான ஒழுக்கமற்ற காரியங்கள் மதத்தின் பேராலும் சாமியின் பேராலும் மக்களுள் புகுத்தப்பட்டிருக்கிறது. அதனாலேயே தான் நமது ஒழுக்கமும் முன்னேற்றமும் தடைப்பட்டு வருகின்றது. ஆதலால் அதை ஒழிக்கவேண்டுமென்றால் முதலில் அதற்கு அஸ்திவாரத்தைக்கண்டுபிடித்து அது ஏதுவானாலும் அதை இடித்தெறிய தயாராக வேண்டும்.
தோழர் பெரியார், குடி அரசு - 02.02.1930
கல்வியைக் கடவுளாக மதித்து அதற்காக கோடிக்கணக்காய்ப் பணம் செலவு செய்து வரும் நாட்டில் ஆண்களில் 100-க்கு 10 பேர் கூட பெண்களில் 1000-க்கு 10 பேர் கூட படித்தவர்கள் இல்லையானால் உண்மையிலேயே கல்வி என்பதாக ஒரு கடவுள் இருந்து நமது பூஜையை ஏற்றுக் கொண்டு வருகின்றது என்று நம்புகின்றீர்களா? காளி, கருப்பன், வீரன் என்று வீரத்தன்மைக்குக் கூடக் கடவுள்களைச் சிருஷ்டித்து அதை வணங்கி வரும் மக்கள் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டவுடன் காய்ச்சல் வருவதானால் ஒரு வீரக்கடவுள் இருந்து பூஜைகளை ஏற்கின்றது என்று நம்புகின்றீர்களா?
வியாதிகளையெல்லாம் தெய்வமாகக் கும்பிட்டு, அவற்றிற்கு கோவில், பூஜை, உற்சவம் செய்து வந்தும் நமது நாட்டில் வியாதிகளும் சாவுக் கணக்குகளும் மற்ற நாட்டாரை எல்லாம்விட ரெட்டிப்பாய் இருந்து வருகின்றது. இந்த வியாதி தெய்வங்கள் என்பவைகள் உண்மையிலேயே நமது பூஜை, உத்சவம், செலவு ஆகியவைகளை ஏற்றுக் கொண்டது உண்மை யானால் இப்படி நடக்குமா? என்று கேட்கின்றோம்.
மற்றும் இதுபோலவே, தொட்டதற்கெல்லாம் கடவுளை ஏற்படுத்தி அதற்குப் பூஜை, உத்சவம் செய்வதில் நமது புத்தியும், பணமும் நேரமும், ஊக்கமும் பாழாகின்றதேயல்லாமல் காரியத்தில் ஏதாவது கடுகளவு பயனுண்டா? என்று கேட்கின்றேன். - தோழர் பெரியார், குடி அரசு 24.03.1929