தமிழில் பொறியியல் கல்வி யாருக்கு? -எண்ணத்துப்பூச்சி -
அண்மையில் தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்த செய்தி ஆச்சரியத்துடன் அதிர்ச்சியையும் அளித்தது. ஆனால் இது நிறைவேறினால்... தமிழகம் மட்டுமல்ல, தமிழினமே மகிழ்ச்சி அடையும்.
ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா எனப் பார்த்தால் கேள்விக்குறியே மிஞ்சுகிறது. தமிழன் தமிழில் பேசினாலே ஏளனமாக பார்க்கக் கூடிய ஒரு அசிங்கமான கால கட்டத்தில் உள்ளோம். உதாரணம் தொலைக்காட்சி.. அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளும் "தமிங்கிலம்"என்ற புது மொழியில் தான் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
அரசுக்கும் உண்மையான அக்கறை இல்லை... இன்னும் நிர்வாகத்திலும், நீதிமன்ற அலுவல்களிலும் தமிழ் அச்சேறவேயில்லை. இத்தனை வருட காலத்தில் தி.மு.க அரசு நினைத்திருந்தால், தமிழை ஆட்சி மொழியாக ஆக்கியிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அக்கறை இல்லாமல் போனது, தமிழனின் சாபக்கேடு. ஆரம்பக்கல்வி தமிழில் மட்டும் தான் என திடமான ஒரு சட்டத்தை கூட நடைமுறைப்படுத்த வழியில்லை. அதனால் தான் தமிழில் படிப்பவனை கேவலமாகப் பார்க்கும் நிலை. இது நடப்பது இந்த தமிழ்நாட்டில் தான்.
உலகமெங்கும் தாய்மொழிக் கல்வி தான் உயர்ந்தது என்பது அறிவுப்பூர்வமாக நிரூபணம் ஆன நிலையில் கூட நாம் தமிழர்கள் தாழ்வு மனப்பான்மையிலில் இருந்து வெளிவரமுடியாமல் உள்ளோம். குறிப்பாக ஜப்பான், ஜேர்மனி, ஃபிரெஞ்சு மக்கள் தம் தாய்மொழி கல்வி தான் பயில்கின்றனர். பொறியியல் மட்டுமல்ல..மருத்துவக் கல்வியும், ஏன் ஆராய்ச்சி கூட தாய் மொழியில் தான். ஆனால் தமிழில் அறிவியல் சொற்கள் வளமாக இருந்தும் பயன்படுத்த நாம் முயலுவதில்லை. இந்த நிலையில் ‘கல்வி' என்பது தமிழகத்தில் முழுமையான வியாபாரமாக்கப்பட்ட நிலையில் தமிழில் பொறியியல் என்பது கேள்விக்குறியானதுதான்.
அறிவியல் தமிழை வளர்க்க நிறைய அறிஞர்கள் பாடுபடுகிறார்கள், ஆனால் அரசு அவர்களுக்கு ஊக்கம் தருவதில்லை. முதலில் தமிழில் படிப்பது என்பது கேவலம் என்பதை நாம் ஒழிக்க வேண்டும். இதற்கு இளைஞர்கள் குழு, அமைப்பு பாடுபட வேண்டும். மக்களின் முழுமையான ஆதரவு இல்லையெனில் அரசு சட்டம் வீணாகத்தான் போகும். குறிப்பாக வரும் ஆண்டில் சோதனை அடிப்படையில் பல பொறியியல் (எஞ்சினியரிங்) கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லையெனில் அரசை குறை கூற முடியாது. மேலும் உயர்கல்வி அமைச்சர் கூறியது போன்று ஒவ்வொரு வருடமும் ஆங்கிலம் பேசவும், எழுதவும் ஒரு அடிப்படை தகுதி உறுதிப்படுத்த வேண்டும். அப்போது தான் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை இன்றி, இந்த போட்டி உலகத்தில் வெற்றி பெற முடியும்.
சில அறிவு ஜீவிகள் கூறுவார்கள், தமிழில் படித்தால் வேலை எங்கு பெறுவது என்று?. இது ஒரு வேண்டா வாதம்... தமிழில் படித்தவர்கள் இன்று உலகமெங்கும் வேலை செய்யவில்லையா? கல்லூரியை விட்டு வெளியேறும்போது போதுமான ஆங்கில பேச்சுத்திறனுடன் வந்தால் போதும். நாம் ஆங்கிலத்துக்கோ எந்த மொழிக்கோ எதிரிகள் அல்லவே.
இதுதொடர்ந்தால் அறிவியல் தமிழ் ஆரோக்கியமாகும். தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும்.
எண்ணத்துப்பூச்சி

- எண்ணத்துப்பூச்சி