புதிய முன்னோடி இதழ் பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. பரவலாக என்பதின் பொருள் மார்க்சியர்களிடமிருந்து மட்டுமல்ல பொதுவானவர்களிடமிருந்தும் பாராட்டுகளை பெற்றுள்ளது என்பதுதான். வடிவம் பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளது. சில ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை கவனத்தில் கொள்கிறோம். அடுத்த இதழுக்கான எதிர்பார்ப்பு எங்களை கவனத்தில் கொள்ள வைத்துள்ளது.

 தமிழகத்திலுள்ள குழுக்களும் அமைப்புகளும் சாதி-நிலவுடமை சிந்தனை மற்றும் நடைமுறைகளிடமிருந்து விடுபடாத நிலையே நிலவுகிறது. இதன்விளைவாக உறவுகளில் நிலவுடமைத் தன்மையே நிலவுகிறது. அதாவது முரண் என்றாலே உறவு சார்ந்ததாக கருதுவது, பகைமையோடும் வன்மத்தோடும் அணுகுவது என்ற சூழல் நிலவுகிறது. முரண் என்றால் சனநாயகம் என்ற முற்போக்கு சிந்தனை இங்கு பலமாக வேர்விடவில்லை. சமூகத்தின் பின்தங்கிய தன்மையைவிட புரட்சிகர முகாம் மேலோங்கவில்லை என்பது கவலையளிக்கிறது.

 சென்ற இதழில் “அய்க்கியம் பற்றி” கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதற்கு வினையாக ஆரோக்கியமற்று வன்மத்தின் வெளிப்பாட்டை எதிர்கொண்டோம். ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைக் காணமுடியவில்லை. ஆக்கப்பூர்வமான என்பதன் பொருள் சரி என்று ஏற்றுக் கொள்வது என்பது மட்டுமல்ல, மறுப்பது என்ற எதிர்வினையையும் தான் இங்கு குறிப்பிடுகிறேன். ஒரே ஆறுதலான விசியம் தோழர். அரங்க. குணசேகரன் எதிர்வினையாற்றியிருந்தார் என்பது தான்.

 மேலும், எதிரியை விமர்சிக்காமல், கூட இருப்பவர்களை விமர்சிக்கக் கூடாது; உள்ளுக்குள் பேச வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இது ஒரு ஏமாற்று வேலை என்றே கருதுகிறேன். ஒவ்வொரு அமைப்பின் நிலைப்பாடுகளும் அமைப்பிற்கு உள்ளே இல்லாமல் வெளியிலிருந்தே பரவலாக விமர்சிக்கப்படும். சரியோ தவறோ இதற்கான கருத்துப் போராட்டத்தை ஒவ்வொரு அமைப்பும் நடத்தும் பொழுதே அணிகள் கருத்து ரீதியாக பலப்படுவர். -ஆனால், இவ்விமர்சனங்களை நிராகரிப்பது அணிகளை ஏமாற்றும் செயலாகும். இதுமட்டுமல்லாமல், கருத்துப்போராட்டங்களே புரட்சிகர முகாமிற்குள் உள்ள மாற்று வர்க்க சிந்தனைகளை, முதலாளித்துவ கருத்தாக்கங்களை அம்பலப்படுத்தும். புரட்சிகர சக்திகள் ஓரணியில் திரள வழிகாட்டும்.

 மேலும், புதிய முன்னோடி மக்கள் திரளுக்கான இதழ் கிடையாது. இது அரசியல் முன்னோடிகளுக்கான இதழ். இதனால், இதன் நோக்கத்திற்கேற்ப அரசியல் கருத்துப் போராட்டங்களே முக்கியமான பங்கைப்பெறும். இதற்கு உதவிகரமாக உங்களது வரவேற்பை மட்டுமல்ல, விமர்சனங்களையும் நிதியையும் தாராளமாக தந்து உதவுங்கள்.

     தோழமையுடன்,

     ஆசிரியர்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.