இந்தியாவில் 18-வது நாடாளுமன்றத் தேர்தல் (மக்களவைத் தேர்தல்) ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் புதுச்சேரி உள்பட 2024 ஏப்ரல் 19 அன்று ஓரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களுக்கிடையே சீட்டுப் பேரம் நடத்தி கூட்டணி அமைத்து களம் இறங்கி விட்டன. அதே நேரத்தில் இந்த பணநாயகத் தேர்தலை விரும்பாதவர்கள் கொள்கை அடிப்படையியான கூட்டணியை அமைத்துள்ளன.

தமிழ்நாட்டில் அரசியல் களத்திலுள்ளவைகளை வகைப்படுத்தலாம். அவை (1) ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பனிய பாசிச பிஜேபி தலைமையிலான கூட்டணி (2) இந்தியக் கூட்டணி (3) பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி (4) தமிழக மக்கள் முன்னணி (5) தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு. (6) நாம் தமிழர் கட்சி என்பன. இவைகளுக்குள் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சாதிய அமைப்புகளை அடக்கிவிட இயலும்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. தலைமையிலான பாசிசக் கூட்டணி:-

1925-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் நாள் விசயதசமி அன்று சித்பவன் பார்ப்பனர்களால் ஆர்.எஸ்.எஸ். நாக்பூரில் தொடங்கப்பட்டது. தலைவர் தேர்வு செய்யப்படுவதில்லை. தற்போது தலைவராய் இருப்பவர் அடுத்தத் தலைவரை தேர்வு செய்வார். பொதுச் செயலாளர் மட்டுமே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுகிறார். துணைச் செயலாளர்கள் 20 பேர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ்.என்ற பார்ப்பனிய அமைப்பு இந்து ராஷ்டிரத்தில் இந்து சமக்கிருத மொழியைக் கொண்டு இந்து தர்மம் படைப்பதாக பீற்றிக் கொள்வதெல்லாம் பார்ப்பனர்களின் மேலாண்மையயைக் கொண்ட | படிநிலையிலுள்ள சாதிய சமுதாயத்தை படைப்பது அல்லது பாதுகாப்பது ஆகும். அதன் இந்து ராஷ்டிரம் என்பது இன்றைய இந்திய எல்லைகளுடன் வடக்கே திபெத் முதல் தெற்கே இலங்கை வரையிலும் மேற்கே ஆப்கானிஸ்தானத்திலிருந்து கிழக்கே பர்மா வரையிலும் எல்லைகளை விரிவுபடுத்தும் காலனி ஆதிக்க தன்மை கொண்டதாகும். இதுதான் அவர்களின் அகண்ட பாரதமாகும்.modi ramadoss opsஅவர்களது அகண்ட பாரதத்தில் முஸ்லீம்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு, கம்யூனிஸ்டுகளுக்கு இடம் இல்லை என்கின்றனர். ஆர்.எஸ்.எஸீன் அரசியல் பிரிவுகள் தான் பிஜேபி, இந்து முன்னணி, இந்து மக்கள் முன்னணி, குரங்கு முன்னணி(பஜ்ரங்தள்) போன்ற 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் அதிகாரபூர்வமாக ஆர்.எஸ்.எஸில் இணைக்கப் பட்டுள்ளன. இவற்றினை சங்பரிவாரக் கும்பல் என்கிறோம். ஆர்எஸ்எஸிடன் அதிகாரபூர்வமற்ற முறையில் ஆயிரத்துக்கும் மேலான அமைப்புகள் இணைந்து இயங்கிக் கொண்டுள்ளன. அவ்வமைப்புகள் உழைக்கும் மக்கள் மீதுதொடுக்கும் கேடுகளுக்கு ஏற்ப ஆர்எஸ்எஸிடன் இணைக்கப்படுகின்றன. எல்லா கட்சிகளிலும், அதிகார மட்டத்திலும் பல்வேறு சமுதாய அமைப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் இரகசியமாக ஊடுறுவியுள்ளனர். இவர்கள் எல்லா அமைப்புகளையும் பார்ப்பன நலனுக்கு ஏற்ப சிதைப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள்.

ஆர்.எஸ்.எஸ். தொடங்குவதற்கு முன்பே இந்துத்துவா கொள்கையுடன் பார்ப்பனர்கள் பெருமளவில் காங்கிரசில் செயல்பட்டனர். காந்தியும் நேருவும் மக்கள் தலைவர்களாக முன் நிறுத்தப்பட்டனர். காந்தி இந்து மதவாதியாக இருந்தாலும் இந்துத்துவா கொள்கையும் இந்துநாடு என்ற கொள்கையும் கொண்டவர் அல்ல. ஆகையினால் காந்தி ஆர்எஸ்எஸ்-ன் பின்னணியில் படுகொலை செய்யப்பட்டார். காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து 1948-ல், 1975-1977 அவசர நிலைக் காலத்தில், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸின் அகண்ட பாரத நோக்கத்திற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. ஆர்எஸ்எஸ் என்ற பார்ப்பனிய வெறிபிடித்த அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்படும் பிஜேபி மோடிக் கும்பலானது பார்ப்பனியக் கொள்கைகளையும், நிலவுடமை பிற்போக்கு கொள்கைகளையும், உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு கார்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளையும் செயல்படுத்தி வந்துள்ளது. இக்கொள்கைகளுக்கு எதிராக போராடிய மகராஷ்டிராவில் நரேந்திரதபோல்கர், கோவிந்தன் சாரே, கல்புர்கி, கர்நாடகத்தில் கௌரிலங்கேசு ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களுலும் அவர்களது கொலை பட்டியலில் சிலர் உள்ளனர்.

அதானி, அம்பானி போன்ற குஜராத் முதலாளிக்காகவும், பன்னாட்டு கார்பரேட் முதலாளிக்காகவும் அதாவது இவர்களது சந்தை விரிவாக்கத்திற்காகவே அகண்ட பாரத கனவுகளுடன் மோடி அரசு செயல்படுகிறது. இந்தியாவில் 100 ஜனபத மண்டலத்தின் ஒரு பகுதியே காஷ்மீரை மூன்றாக பிரித்தது. தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்கும் திட்டத்துடன் செயல்படுவது. ஜனபதம் என்பது பார்ப்பனர்களை தலைமை இடத்தில் வைக்கும் சாதிய அமைப்பு முறையாகும். இப்படி செய்வதன் மூலம் தேசிய இனங்களை பிரித்து, அவர்களை மோத விட்டு இன அழிப்பு செய்வதாகும். இந்த நோக்கத்திற்காகவும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முழக்கங்களை முன்வைக்கின்றனர்.

மோடியின் மேக் இன் இந்தியாவை ஆராய்ந்தால் அதில் சீழ்நெடி வீசுகிறது. மோடியின் பத்தாண்டு கால ஆட்சி என்பது தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு உற்பத்தியாளர்கள், சில்லரை வியாபாரிகள் ஆகியோர் மீது கடும் சுமையை ஏற்றியுள்ளது. அதே நேரத்தில் அதானி, அம்பானி போன்ற கார்பரேட் முதலாளிகளின் கடன்களில் 25 இலட்சம் கோடியை இரத்து செய்ததுடன் அவர்களுக்கு ஆண்டுக்கு 10 இலட்சம்| கோடியை வரிச் சலுகையாக அறிவித்துள்ளது. ஊழலையே சட்டபூர்வமாக்கியவர்கள் பிஜேபி கும்பல் என்றால் மிகையில்லை. தேர்தல் பத்திரம், பிஎம்கேர் என அரசமைப்பு விதிகளை வளைத்து கோடி கோடியாய் கொள்ளையிட்டுள்ளது மோடிக் கும்பல். எல்லாவற்றையும் விட பல்வேறு தேசிய இனங்களின் வரலாற்றை திரித்து புரட்டும் வேலையில் இறங்கியுள்ளது.

தங்களது சகல திருட்டுத் தனங்களை மூடி மறைக்கவும், அப்பாவி மக்களின் கவனங்களை திசை திருப்பி ஏமாற்றவும் மோடிக் கும்பலுக்கு “ஜெய் ஸ்ரீராம்” முழக்கம் தேவைப்படுகிறது. ஜெய் ஸ்ரீராம் முழக்கம் உழைக்கும் மக்களை சாதிய, மத அடிப்படையில் பிரித்து மோதவிட்டு இரத்தம் குடிக்கும் நோக்கம் கொண்டதாகும். மக்களின் இரத்தத்தை நிரந்தரமாக உறிஞ்சத்தான் அயோத்தியில் இராமருக்கு கோவில். எனவே அரசியல் ஆட்சி அதிகாரத்திலிருந்து இந்த பாசிச மோடிக் கும்பல் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும்.

இந்தியக் கூட்டணி :

பிஜேபி-ன் பாசிச மோடிக் கூட்டணியை வீழ்த்துவதற்காக இந்தியக் கூட்டணி அமைக்கப்பட்டது. இந்தியக் கூட்டணிக்கு அதன் தலைவர்களுக்கு பாசிசத்தை வீழ்த்துவதற்கான கொள்கையோ அதற்கான செயல்திட்டமோ இல்லை. அதே நேரத்தில் அக்கூட்டணியில் இடம் பெற்றவர்கள் பாசிச சட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றவர்களாக உள்ளனர். ஊபா என்ற அடக்குமுறைச் சட்டத்தை காங்கிரசு கொண்டு வந்தபோது திமுக, அதிமுக ஆகியன அதனை ஆதரித்தன. ஊபா சட்டத்தில் ஒடுக்குமுறை பிரிவுகளை பிஜேபி கொண்டு வந்தபோதும் திமுக,அதிமுக ஆகிய இரண்டும் ஆதரித்தன. மாநில அதிகாரங்களை பறிக்கும் என்.ஐ.எ. என்ற தேசிய புலனாய்வு முகமையை திமுகவும், அதிமுகவும் ஆதரித்தன. இந்த கருப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி நூற்றுக் கணக்கானோரை திமுக, அதிமுக இரு அரசுகளுமே கைது செய்தன. இவர்களது பாசிச எதிர்ப்பு என்பது வெறும் நாடகமே. பிஜேபி சாதிய மதவாத கட்சி என்றால் திமுக, அதிமுக மற்றும் இவர்களது கூட்டாளிகள் சாதிய வாதிகளே. தமிழநாட்டின் உரிமையை மத்திய அரசிடம் விட்டுக் கொடுத்ததில் திமுக, அதிமுக ஆகிய இரண்டுக்கும் பங்குண்டு. இவர்களை தமிழக மக்கள் இனம் காண வேண்டும்.

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி:

இந்த முன்னணியில் இடது சாரி கம்யூனிஸ்டுகளும், ஜனநாயக சக்திகளும் இடம் பெற்றுள்ளனர். இந்த முன்னணியில் சில அமைப்புகள் பாசிசத்தை வீழ்த்துவதற்கான குறிப்பான திட்டத்தைக் கொண்டுள்ளன. முன்னணியில் சரி, தவறுகளுக்கிடையிலான போராட்டம் நடந்து வருகிறது. இது பாசிசத்திற்கு எதிராக வளர்ந்து வரும் ஜனநாயக போக்காகும். 

தமிழக மக்கள் முன்னணி :

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி போல, இம்முன்னணியிலும் தேசிய இனங்களின் அரசுரிமையை ஏற்றுக் கொண்டோர் இடம்பெற்றுள்ளனர். இடது சாரிகளையும்,

ஜனநாயக சக்திகளையும் கொண்டுள்ள பாசிசத்திற்கு எதிராக வளர்ந்து வரும் ஜனநாயக போக்காகும்.

தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு :

காங்கிரசு, பிஜேபி, திமுக, அதிமுக ஆகியவற்றின் தமிழின விரோதத்திற்கு எதிராக அமைக்கப்பட்டதே இந்த கூட்டமைப்பு. மேலும் தமிழீழ போராட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக-வின் துரோகம் இதிலுள்ளோரை கொதிப்படைய வைத்துள்ளது. இவர்களிடயே ஜனநாயகத் தன்மை காணப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி :

2009-இல் தமிழீழ போரட்டம் காங்கிரசின் துணையாளும் திமுகவின் துரோகத்தாலும் ராஜபக்சே கும்பலால் இரத்தத்தில் முழ்கடிக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் 40,000 ஈழத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். இந்த உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டது நாம் தமிழர் கட்சி. இவர்கள் தமிழினம், தமிழர் விடுதலை ஆகியவற்றை பேசும் வாய் வீச்சாளர்களே. தமிழர்கள் ஆட்சிக்கு வந்தால் அதாவது சீமான் ஆட்சிக்கு வந்தால் தமிழினத்தின் எல்லா சிக்கலும் தீர்ந்துவிடும் என வாய் கூசாமல் பொய்யுரைக்கின்றனர். இவர்களும் மோடி பாசிசத்தை வீழ்த்துவதாக சூளுரைக்கின்றனர். இவர்களிடம் அதற்கான எந்தத் திட்டமும் இல்லை. மேலும் ஆட்சித் துறை (Government) பற்றியும், அதிகாரத்துறை (State) பற்றியும் சிறுபிள்ளைத் தனமாக பேசி வருகின்றனர். தமிழ்நாட்டின் சட்டமன்றம் அதிகாரம் பெற்றதுபோல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் அனைத்து சிக்கல்களையும் தீர்த்து விடுவதாக தம்பட்டம் அடிக்கின்றனர். இவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆக பிஜேபி கூட்டணி, இந்தியக் கூட்டணி, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி, தமிழக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, நாம் தமிழர் கட்சி போன்றவை அரசியல் வானில் வலம் வருகின்றன. அதில் பிஜேபி கூட்டணியை உடனடியாக தோற்கடிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்திய கூட்டணி பிஜேபிக்கு மாற்று அல்ல. தமிழ்நாட்டில் பிஜேபியின் பாசிசத்தை வீழ்த்தக் கூடிய ஆற்றல் தமிழக மக்களிடமே உள்ளது. பிஜேபி கூட்டணி அதற்கு எதிரான இந்தியக் கூட்டணி மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கின்றன. இந்நிலையில் பிஜேபிக்கு எதிராக மக்களை அணி திரட்டும் வேலையில் இடது சாரிகளும் ஜனநாயக சக்திகளும் குறிப்பான திட்டத்தில் ஒன்றிணைய வேண்டும்.

இந்தியக் கூட்டணியை ஆதரிப்பதற்காக ரஷ்யாவில் ஸ்டாலின், ஹிட்லர் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட அனாக்கிரமிப்பு ஒப்பந்தத்தையும், ஜப்பான் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, கோமிங் பாங் கட்சி ஆகியவற்றின் ஐக்கிய முன்னணியையும் எடுத்துக் காட்டுவது சந்தர்பவாதமாகும். அவைகள் போருக்கானது. இந்தியக் கூட்டணியோ கொள்ளையடிப்பதற்கானது.

விளக்க பொதுக்கூட்டம் :-

15.04.2024 திங்கள் கிழமை பாலை 5.00 மணி / பேருந்து நிலையம் அருகில், கந்தர்வகோட்டை

பங்கேற்கும் தோழமை அமைப்புகள் :- 

சுதந்திர வளர்ச்சிகான விவசாயிகள் சங்கம்,

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்,

மக்கள் அதிகாரம்,

தமிழக மக்கள் முன்னணி,

தமிழக மக்கள் புரட்சிக் கழகம்,

தமிழர் முன்னணி, சுபா.முத்துக்குமார் பாசறை,

தமிழர் அறம்.

  • ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. பாசிச மோடி கூட்டணியைத் தோற்கடிப்போம்! 
  • தமிழ்த் தேச இறையாண்மையை முன்னெடுப்போம்! 
  • இடது சாரிகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைப்போம்! 
  • பார்ப்பனியம், நிலவுடமை, முதலாலியம், ஏகாதிபத்தியம் எதிப்போம்! 
  • ஜனநாயகம் காப்போம்! 
  • புரட்சிகர திசை வழியை முன்னெடுப்போம்!

தமிழ்த்தேச இறையாண்மை

Pin It