தமிழக மின் நெருக்கடியின் காரணங்கள்
தமிழக மின்வாரியத்தின் பொறுப்பற்ற தன்மை
மூடுதலை எதிர் நோக்கும் மின்வாரியம்
மெல்ல மெல்ல தனியார்மயத்தை நோக்கித் தள்ளப்படும் அபாயம்
பிரச்சினைகளுக்குத் தீர்வே கிடையாதா?
தீர்வுகளுக்கான சமூகத் தணிக்கையே இம் மாநாடு

இடம்: சண்முகா திருமண அரங்கம், புத்தூர் நாலு ரோடு, திருச்சி
நாள்: 25.08.2012 நேரம்:காலை 10 முதல் மாலை 4 வரை

நிகழ்ச்சி நிரல்

தலைமை: திரு கொளத்தூர் மணி, ஒருங்கிணைப்பாளர், கூடங்குளம் அணு உலைஎதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
வரவேற்புரை: வழக்கறிஞர் திருமதி டி.பானுமதி

முன்னிலை:
மீ.த.பாண்டியன்
கண. குறிஞ்சி
அரங்க. குணசேகரன்

நிகழ்ச்சி நெறியாளர் : அ.கமருதீன் வழக்கறிஞர்

முதல் அமர்வு: இந்திய மின்சாரத்துறைக் கொள்கைகளின் பரிணாமம்

நேரம் :காலை 10.30முதல்11.30 வரை
தலைமை: வழக்கறிஞர் திரு.மார்ட்டின்
சிறப்புரை: திரு தேவசகாயம் IAS, முன்னாள் சேர்மன், ஹரியானா மின்வாரியம்

இரண்டாம் அமர்வு: மின்வாரிய மேலாண்மையும் தமிழக மின்சார நெருக்கடியும்

நேரம்: காலை 11.45 முதல் மதியம் 1 மணி வரை
தலைமை: திரு கோ.திருநாவுக்கரசு
சிறப்புரை: திரு சா.காந்தி தலைவர், தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு

மதிய உணவு: மதியம் 1 முதல் 2 வரை

மூன்றாம் அமர்வு: நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு மாற்று மின்உற்பத்தி முறைகள் மற்றும் மின் மேலாண்மை

நேரம்: 2 முதல் 3 வரை
தலைமை: திரு.பொன்.சந்திரன்
சிறப்புரை: திரு.பிரகாஷ்

நான்காம் அமர்வு: அணுஉலை அரசியலும் மின்சாரமும்

நேரம்: மதியம் 3 முதல் 4 வரை
தலைமை: திரு செந்தில், சேவ் தமிழ்ஸ் இயக்கம்
சிறப்புரை: பேராசிரியர். திரு. சிவக்குமார்

நன்றியுரை:திரு சுரேஸ்

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்: வழக்கறிஞர்.கென்னடிஜோசப்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வட மாநிலங்களில் "இரண்டு நாட்கள் 12 மணி நேரத்திற்கும் மேல் மின் வெட்டு", "மின் விநியோகம் பாதிப்பு" என அலறித் துடித்தன செய்தித் தாள்களும், தொலைக்காட்சிகளும். ஏக இந்தியாவே பதறித் துடித்தது. ஆனால் இங்கு தமிழ்நாட்டிலோ இரண்டு மணி நேரம், எட்டு மணி நேரம், கிராமப் புறங்களில் 12 மணி நேரம் ஏன்? நாள் முழுவதும் தமிழ்நாடே இருளில் மூழ்கிய அவலம் இரண்டு ஆட்சிகளிலும் தொடர்ந்தது. இன்னும் நிலைமை சீரடையாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 ஒரு காலத்தில் மிகை மின் மாநிலமாக விளங்கிய தமிழகத்திற்கு என்ன கேடு? நம்மிடம் உள்ள நெய்வேலி உள்ளிட்ட மின்சார உற்பத்திகள் என்ன ஆயிற்று?

 கடுமையான மின்கட்டண உயர்வு விவசாயத்துக்கான இலவச மின்சாரம் பாதிப்பு உள்நாட்டு சிறு, குறு தொழில்கள் பாதிப்பு என நாளுக்கு நாள் கொடுமைகள் உச்சத்திற்கு ஏறி வருவது ஒரு பக்கம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்குதடையற்ற மின்சாரம் சலுகை விலையில். மின்தடைக்கு இழப்பீடு என எண்ணற்ற சலுகைகள் மறுபக்கம். ஏன் இந்த பாரபட்சம்? நாமென்ன இரண்டாந்தர குடிமக்களா?

 2003 மின்சாரச் சட்டம் இயற்றப்பட்ட பின் மெல்ல மெல்ல தனியார் மயமாக்குவதற்கு கதவைத் திறந்து வசதி செய்து கொடுக்கின்றன மத்திய, மாநில அரசுகள். நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர் தனியார் மின் உற்பத்தியாளர்கள். யாருடைய நலனுக்கானவை இந்த மத்திய, மாநில அரசுகள்?

 மின்சாரத்தை தனியாரிடம் இருந்து வாங்குவது, வளரும் மின் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியைப் பெருக்க இயலாத நிலை, கடன் சுமையால் மின் வாரியம் மூடப்படும் சூழல் என்பதோடு புதிய மின் உற்பத்தி, கட்டண நிர்ணயம் ஆகியவை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு கையறு நிலையில் மாநில மின்சார வாரியம்.

 மின்சாரம் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது. உழவுக்கும் தொழிலுக்கும் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் என அன்றாடப் பயன்பாட்டுக்கானது. தடையின்றி தொடர்ந்து கிடைக்க வேண்டியது. நமது உரிமையானது. ஆனால் மிகக் கடுமையான இந்த மின் வெட்டை தவிர்த்திருக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள், மின் வெட்டிற்கான முழுமையான காரணங்களைப் பற்றிப் பேசுவதில்லை. எப்போது? எப்படி? மின் வெட்டு நீக்கப்படும்? சீராக்கப்படும்? எனத் தெளிவுபடுத்துவதில்லை.

 ஆனால் நாம் பேச வேண்டி உள்ளது. தெளிவுபடுத்த வேண்டி உள்ளது.

 ஏழரைக் கோடி மக்களைப் பாதிக்கும் இந்த மின் நெருக்கடி பற்றித் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து விவரங்களையும் திரட்டி உண்மைகளை அறிய வேண்டும். மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதோடு, மாற்று மின் தயாரிப்பிற்கான வழி முறைகளைக் கண்டறிய வேண்டும். கண்டறிந்து செயலாக்கச் செய்ய வேண்டும்.

 அனல் மின்சாரம், புனல் மின்சாரம் தாண்டி சூரிய ஒளி, காற்று, கடலலை, கால்நடை, பறவை, மனிதக் கழிவுகள் அன்றாடம் மலை போல் குவியும் நகரக் குப்பைகள், போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க பெரும் வாய்ப்புகள் உள்ளன. ஆளும் அரசுகள் இத்துறைகளுக்கு ஏன் போதிய கவனம் செலுத்த மறுக்கின்றன?

 இவ்வளவு ஆபத்தில்லாத, செலவு குறைந்த, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பல வாய்ப்புகள் இருக்க, ஆளும் மத்திய மாநில அரசுகளோ, பன்னாட்டு ஏகாதிபத்தியங்களின் ஆணைகளுக்கிணங்க, மக்களைக் கொன்றழிக்கும், வழி வழியாக அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் கடுமையான நோய்களைப் பரப்பும், அணு மின்சாரம்தான் மாற்று என்று முன் மொழிந்து தீவிரமாகச் செயல்படுத்தி வருவதன் உள் அரசியல் என்ன?

 ஆக அனைத்தையும் பற்றிப் பேச, விவாதிக்க வாருங்கள் நண்பர்களே! மாநாட்டுக்கு. பேசுவோம். விவாதிப்போம். மாற்றைக் கண்டடைவோம். செயல்படுத்துவோம். செயல்படுத்த வைப்போம்.

 - கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, பேச: 9443184051

Pin It