"சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்னும் வாக்கியம் சாமானியனா லும் பயன்படுத்தப்படும் ஒரு சட்ட அறிவை மையமாகக் கொண்டதொரு வாக்கியமாகும். இதையேத்தான் ஒரு வழக்கறிஞர் தன் வார்த்தைகளில் சட்ட உறுப்பு 14 எந்த நபருக்கும் சட்டத்தின் முன் சம உரிமையை வழங்குகிறது என்பார். இவ்வகையில் தனியொரு மனிதனனாலும் சமூகமானலும் அவரவர் தனக்கான அடிப்படை உரிமைகள் ஏதேனும் ஒரு வடிவத்தில் மறுக்கப்படுவ தாக உணரும்போது மேற்கண்ட சட்டப் பிரிவு மற்றும் அடிப்படை உரிமைகள் சட்டப் பிரிவுகளின் துணையோடு நீதிமன்றத்தின் கதவைத் தட்டி நியாயம் கேட்பதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது அவரவருக்கு. அப்போதாங்கு அமர்ந் திருக்கும் நீதிநாயகம் சட்டத் திட்டங்களைக் கணக்கில் கொண்டு தன்முன் தோன்றும் வழக்கை நேர்மையாகக் கையாளும் பட்சத்தில் தனிமனிதனின்/சமூ கத்தின் உரிமைகள் உறுதிசெய்யப்படுகிறது; பாதுகாக்கப்படுகிறது. ஆகவே ஒரு தனிமனிதனின் அல்லது சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதென் பது சிறப்பான சட்டத்தின் கையில் மட்டுமேயல்லாமல் அதனை நடைமுறைப் படுத்துவோர் கைகளிலும் இருக்கிறது என்பதையே "சட்டம் எவ்வளவு சிறப்பா னதாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவோர் மோசமானவர்களாக இருந்தால் அது பயனற்றுப்போகும்" என்றார் அம்பேத்கர்.சென்னை உயர் நீதி மன்றத்தில் ஏழு ஆண்டுகளுக்கும் குறைவாக நீதிபதியாக பணிபுரிந்து 96,0 00 வழக்குகளை முடித்து வைத்து ஓய்வுபெற்ற சாதனையாளர் நீதிநாய கம் கே.சந்துருவின் "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்" என்னும் நூலை வாசிப்பவர்முன் அம்பேத்கா¢ன் மேற்கண்ட கூற்றுக்கிணங்க சிறப்பான சட்டத் தை செயற்படுத்திய நேர்மையான நீதியரசராகவே தோன்றுவார் கே.சந்துரு.

கே.சந்துரு அவர்கள் நீதிபதியாக பணியாற்றிய காலங்களில் தலித் தனி நபர் சார்ந்த, தலித் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் பல வழக்குகளாக அவரது மேசை முன் தோன்றியுள்ளன. அவ்வழக்குகளை இயந்திரகதியாய் அணுகா மல் அவற்றின் தன்மைகள், பின்புலங்கள் அடிப்படையில் அணுகி நீதியை நிலைநாட்டும் விதமான தீர்ப்புகளை அருளியிருக்கிறார் நீதியரசர் .சந்துரு வழங்கிய தீர்ப்புகளுள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதப் பட்ட பதினைந்து தீர்ப்புகளைத் தொகுத்து "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப் புகள்" என்னும் நுலாக வெளியிட்டிருக்கிறது மணற்கேணி பதிப்பகம். இந்நூல் வெளிவந்த ஏழு மாதங்களுக்குள் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது என்ப துவும் இங்கு குறிப்பிடத்தகுந்தது.

"என்னுடைய பணிக்காலத்தில் சாதி,சமயம், தீண்டாமை, வன்கொடுமை, மற்றும் தலித்துகளின் வாழ்வுரிமை பற்றிய பல வழக்குகளை விசாரிக்கும் வாய்ப்புக் கிட்டியபோதெல்லாம் என்னை அவற்றிற்குரிய தீர்ப்புகள் அளிக்கும் பாதையில் இட்டுச்சென்றது என்னுடைய முன்னாள் அனுபவங்களும், நான் படித்த தத்துவ நூல்களும்தான். அப்படிப்பட்ட வழக்குகளின் முழுத்தன்மை யைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு பொ¢தும் உதவியது பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கா¢ன் பேச்சுக்களும் எழுத்துக்களுமே" (பக்: 19) என்று மேலது நூலுக்கான முன்னுரையில் குறிப்பிடுகிறார் நீதியரசர். ஆதிக்க சாதியினர், சாதி இந்து ஆதரவு அதிகார மையங்கள்,காவல்துறை ஆகியவை தத்தமது சுயநலங்களைக் காத்துக் கொள்வதற்காக/ மேம்படுத்திக் கொள்வதற்காக தனித் தனியாகவும், சில நேரங்களில் கூட்டு சேர்ந்துகொண்டும் அப்பாவி தலித் மக்கள் மீது கட்டவிழ்த் துவிடும் தீண்டாமை அடிப்படையிலான வன்கொடு மைகளை மையமாகக் கொண்ட வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கியபோது சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கா¢ன் கூற்றுகள் பயன்படுத்தப்பட்டன; அக் கூற்றுகளை மேற்கோள் காட்டி தீர்ப்புகள் அருளப்பட்டன என்பதை நினைவு கூரும் முகமாக இந்நூலுக்கு "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பன்னெடுங்காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மேடைகள் உள் ளிட்டு பல்வேறு தலங்களில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும் தலித் மக்களுக்கு சமூக நீதியும், சட்ட பாதுகாப்பும் வழங்கும்படியான தீர்ப்புகள் அளிக்க நேர்ந் தபோது புரட்சியாளர் அம்பேத்கா¢ன் கூற்றுகளை மட்டுமேயல்லாது அவ்வவ் வழக்குகளின் தன்மைக்கேற்ப இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பன் னாட்டு போராளிகளின் அனுபவங்களையும்கூட கையாண்டிருக்கிறார் சந் துரு. அமொ¢க்க கறுப்பின பெண்மணி ரோசா பார்க்கிற்கு இனத்தைக் கார ணம் காட்டி பேருந்து இருக்கையைப் பயன்படுத்த ஒரு வெள்ளையன் மறுப்புத் தொ¢விக்கிறான், காவல் துறையும் நிறவெறிக்கு ஆதரவாக செயல்படவே அந்த அநீதிக்கு எதிராக ரோசாபார்க் கடுமையாகப் போராடி வெற்றி பெறுகிறார். திரு நெல்வேலி, சிவந்திப்பட்டி கிராமத்தில் தலித் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து பேருந்து புறப்படுவதால் முதலில் ஏறி தலித்துகள் உட்கார்ந்துகொள்ளவே சாதி இந்துக்கள் நின்றுகொண்டு பயணம் செய்யும்படி ஆகிறது என்பதை மனதில் கொண்ட ஆதிக்க சாதியினர் போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை ஆணையர் ஆதரவோடு பேருந்து புறப்படும் இடத்தை மாற்றிவிடுகின்றனர். இவ்வழக்கு பொது நல வழக்காக தம்முன் வந்தபோது இந்த நடைமுறையில் இருக்கும் நவீனத் தீண்டாமை வடிவத்தை உணர்ந்து தீர்ப்பளித்த நீதியரசர் இங்கு ரோசா பார்க்கின் 'மாண்ட்கமா¢ நடைப்பயணம்' என்னும் போராட்டத் தைக் குறிப்பிட்டு பேசுகிறார்.

இதேபோலஅண்ணா மறு மலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊருக்குள் நூலகம் கட்டினால் தலித் பிரிவினரும் அந்நூலகத்தைப் பயன் படுத்துவதற்கு சாதி இந்துக்களின் ஊருக்குள் நுழைவர் என்பதை மனதிற் கொண்டு நூலகம் கட்டுவதற்கு எதிர்ப்புத் தொ¢விக்கும் ஆதிக்க சாதியினா¢ன் வழக்கிற்கு கலீல் ஜிப்ரானின் "வெள்ளைக் காகிதத்தின் கூற்று" என்னும் கவி தையைப் பயன்படுத்துபவர், தலித் மக்கள் மதம் மாறுவது பற்றிய வழக்கொன் றுக்கு கவிஞர் வாலியின் கவிதையையும், சுடுகாடு பிரச்சினையை ஒட்டிய வழக்கொன்றுக்கு திரைப்பட பாடல் ஒன்றையும் கூட பயன்படுத்தியிருக்கி றார். தீர்ப்புகள் எழுதும்போது இவற்றையும் கூட பயன்படுத்த முடியும் என் பதை இந்நூல் உணர்த்தும்போது வியப்பில் ஆழ்ந்துப்போகக் கூடும் வாசகர்.

பௌத்தம் தழுவிய தலித்துகளுக்கும் இடஒதுக்கீடு உரிமையை வழங்கக் கோரியது, சத்துணவு/அங்கன்வாடி பணிகளில் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை பின்பற்றுமாறு அறிவுறுத்தியது, பஞ்சமி நிலஉரி மை யை நிலைநாட்டியது, வழிபாட்டுரிமை, வாழ்வுரிமை, தீண்டாமை ஒழிப்பு என் பதுபோன்ற தலித் விடுதலை, தலித் அரசியல் அம்சங்கள் உள்ளடங்கிய வழக் குகள்மீது அளிக்கப்பட்ட பல்வேறு தீர்ப்புகளின் விவரங்கள் தீர்ப்பு நகல்களின் இணைப்புகளுடன் இந்நுலில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் இன்றைய பெரும் பிரச்சினையாக விளங்கும் சாதி மறுப்புத் திருமணங்கள், அவற்றின் நிமித்தம் நடந்தேறும் கௌரவக்கொலைகள் குறித்து உச்சநீதிமன்றம் " சாதி முறை என்பது நாட்டின் மீதான ஒரு சாபக்கேடாகும். இதனை எவ்வளவு சீக் கிரம் அழிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் நல்லது... இது நாட்டைக் கூறு போட்டுக்கொண்டிருக்கிறது. ஆதலின், சாதி கலப்புத் திருமணம் என்பது சாதி முறையை ஒழிக்க வழிவகுக்கும் என்பதால் அவை நாட்டு நலனுக்கானவை" (பக்:78) என்று கவலையோடு தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கும் கருத்துக்களையும் கூட பதிவாகக் கொண்டுள்ளது இந்நூல்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 17 தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட் டது, மற்றும் அதன் செயற்பாடு எந்த வகையில் இருந்தாலும் அது தடைசெய் யப்பட்டுள்ளது. தீண்டாமையின் காரணமாகத் தகுதியின்மையாக்கல் நடவ டிக்கை எதுவும் குற்றமாகும். அது சட்டபடி தணிப்பதற்குரியதாகும் என்று எச் சா¢க்கை விடுக்கிறது. ஆனாலும் இங்கு சாணிப்பால் புகட்டுவது, சாட்டையடி கொடுப்பது என்கிற அளவில் மட்டுமே தீண்டாமையின் தாக்கம் தணிந்துள் ளதே தவிர்த்து மற்றபிற வடிவங்களிலான தீண்டாமைக் கொடுமைகள் தொடர் கதையாய் இருப்பதுடன், தீண்டாமைப் பற்றிய விழிப்புணர்வு மட்டம் மேலோங் கியிருக்கும் தலங்களில் அது நவீன வடிவங்களை ஏற்றுள்ளது என்பதையும் தமது விமர்சனங்கள் வழியாக எடுத்துக் காட்டுகிறார் சந்துரு. இதற்கு சான்றாக ஆறுமுகத்தாய் என்ற தலித் பெண்மணியின் வழக்கின் தன்மையைப் புரிந்து கொண்டு தீர்ப்பளிக்கப்பட்டதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம் நாம். இவ்வழக் கில் அரசு உதவிப் பெறும் யாதவர் ஆரம்பப் பள்ளி நிர்வாகம் மாவட்ட ஆட்சி யர் நியமித்த தலித் பெண்மணியை சத்துணவு பணியாளராக ஏற்க மறுப்புத் தொ¢விக்கிறது. அப்பள்ளியின் தாளாளர் ஒரு தலித் பெண்மணியை சாதி இந்து பிள்ளைகள் சத்துணவு உண்ணும் மையத்தில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என்ற உள் நோக்கத்துடன் கடைப்பிடிக்கும் தீண்டாமையை அறிந்து ணர்ந்த நீதியரசர் அப்பெண்ணை உடனடியாக பணியில் சேர்த்துக்கொள்ளு மாறு உத்தரவு பிறப்பிக்கிறார். இவ்வழக்கிலும் சத்துணவு மையங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றுமாறு தீர்ப்பளித்த வழக்கிலும் இடஒதுக்கீட்டின் வரலாறு, மண்டல் வழக்கு உட்பட அது கடந்துவந்த பாதைகள் என்று பல்வேறு அம்சங் கள் நினைவூட்டப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

சத்துணவு மைய வேலையைக் கோருவோர் மையம் அமைந்துள்ள இடத் திலிருந்து 1கி.மீ. தூரத்திலிருக்க வேண்டுமென்ற அரசாணையை ஆட்சே பித்து வழக்குத் தொடுத்த பி.வசந்தா என்ற தலித் பெண்மணியின் வழக் கொன்றும் சந்துருமுன் வருகிறது. "இவ்விதியியை நிறைவேற்றினால் ஊருக்கு வெளியே காலனியில் வசிக்கும் பட்டியல் சாதிகளைச் சேர்ந்த பெண்களூக்கு வேலைவாய்ப்புக் கிடைக்காது. ஏனென்றால் அநேக கிராமங்களில் பள்ளிக் கூடங்கள் ஊருக்குள்ளேயும் அதிலிருந்து காலனி 1 கி.மீ.தூரத்துக்கு வெளி யேதான் இருக்கும்" என்ற கருத்தைப் பதிவு செய்து மேற்படி அரசாணையைத் தளர்த்தி "தகுதித் தேர்வில் இருவர் சமமாக மதிப்பெண் பெற்றால், தேர்வுக் குழு,சத்துணவு/அங்கன்வாடி மையங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு வேண்டுமானால் முன்னுரிமை கொடுக்கலாமென்றும் தீர்ப்பளித்தேன்" (ப்க்: 64) என்று பதிவிட்டுள்ளார். சாதி ஆதிக்க மனோபாவத்துக்கு ஆட்பட்டுக் கிடக்கும் அரசும் தலித் பெண்களை சத்துணவு பணியாளர் வேலையிலிருந்து விலக்கி வைப்பதற்காகவே ஆணையொன்றை தயார் செய்திருப்பதை உணர்ந்து அதனை கட்டுடைத்து தீர்ப்பளித்துள்ளார் நீதிநாயகம்.

இதேபோல சத்துணவு மைய பணிகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததை எதிர்த்து போத்துமல்லி என்ற தலித் பெண் தொடுத்த வழக்கை கையாள்கிறார். அப்போது "தலித் சமையலர் சமைக்கும் உணவை உண்ணும் குழந்தைகள் எதிர்காலத்தில் அம்மக்கள் மீது கடைபிடிக்கும் தீண்டாமை பழக்கம் ஒழிய உதவும்"(பக்: 65) என்று கருத்துத் தொ¢வித்ததுடன் சத்துணவு மையங்களில் இடஒதுக்கீடு பின்பற்றுமாறு தீர்ப்பளிக்கிறார். இதன்படி 25,000 தலித் பெண் களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவ்வழக்கின் மீது சந்துரு மேற் கண்டவாறு கருத்து தொ¢வித்திருப்பது சாதியை/தீண்டாமையை ஒழித்துக் கட்டிவிட வேண்டுமென்பதில் அவருக்கிருக்கும் மெய்யான அக்கறையை வெளிப்படுத்துவதுடன் அரசாணைகளிலும் வழிகாட்டுதல்களிலும் கூட மறைந்துக் கிடக்கும் நவீன சாதிய, நவீனத் தீண்டாமை எண்ணங்களையும் அம்பலப்படுத்துவதாயும் அமைந்திருக்கிறது. இப்படியாக அரசு நிர்வாகம் ஆதிக்க சாதியினா¢ன் கைப்பாவையாக செயல்படுவதை உற்று நோக்கி தொ¢ந் துகொள்ளும்போது "இந்தியாவில் ஆதிக்க வ்குப்பு...பிறப்பின் மூலம் தங்க ளைச் சேர்ந்தவர்களல்லாதவர்கள் எவரையும் அது அனுமதிப்பதில்லை. அடி மட்ட வர்க்கங்கள் தங்கள் தரத்துக்கு உயர்ந்துவிடாதபடிக்கு து எல்லா வழி முறைகளையும் கையாள்கிறது" என்ற அம்பேத்கா¢ன் சொற்கள் தான் நினை வுக்கு வருகின்றன.

சாதி அழிந்தொழிந்த சமுதாய மாற்றம் கோரும் பகுத்தறிவுவாத சிந்தனை யாளராக சந்துருவை நம்முன் நிறுத்துகின்றன அவர் கையாண்ட வழக்குகள் ஒவ்வொன்றும். இதை நிரூபிக்கும் பொருட்டு அமைந்திருக்கிறது ஒரு வழக்கு. அதாவது, தலித் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் விதமாக அம்மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கவும், சுடுகாடு/ சாலை வசதிகள் செய்து தரவும் நிலம் கையகப்படுத்தும் அரசின் முடிவுக்கு எதிரான வழக் கொன்றில் தோன்றுகிறார் அட்வகேட் ஜெனரல் ஒருவர். அப்போது " இவ்வழக் குகளில் நீங்கள் ஆஜராவது வேதனை அளிக்கிறது. தலித்துகள் மீதான கொடு மைகள் பற்றி அட்வகேட் ஜெனரலாக 10 ஆண்டுகள் இருந்த உங்களுக்குக் கூட புரியவில்லையா? இனி நிலத்தை கையகப்படுத்தும் சட்டம் மட்டும் போதாது. உங்களது இதயத்தில் தான் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட வேண் டும்"(பக்:126) என்று கூறிவிட்டு அவரது தரப்பு வழக்கை தள்ளுபடி செய்கி றார்.

"தலித்துகள் மீது கொடுமைகள் என்பதெல்லாம் அந்தக் காலம். இப் பொழுது மாறிவிட்ட சூழ்நிலையில் அவை மறைந்துவிட்டன" (பக்:126) என்று அந்த மூத்த வழக்கறிஞர் சொல்லக்கேட்டு அதிர்ந்துபோன நீதிநாயகம் சந்துரு மனம் ஆறாமல் அன்று மாலையே நுங்கம்பாக்கத்திலுள்ள "லேண்ட் மார்க்" புத்தகக் கடைக்கு சென்று பத்திரிகையாளர் எஸ். விஸ்வநாதன் எழுதிய "Dalits in Dravadian Land" என்னும் நூலை வாங்கி ஒரு குறிப்பும் எழுதி அனுப்பி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து..."அன்று இரவே அம்மூத்த வழக் கறிஞர் தொலைபேசியில் என்னை அழைத்தார். அவர் என்னிடம் தான் நீதி மன்றத்தில் கூறியவற்றிற்கு வருத்தம் தொ¢விப்பதாகவும், தமிழ்நாட்டில் இப் படிப்பட்ட நிகழ்வுகள் இன்றும் நடப்பது பற்றி அப்புத்தகம் வெளிச்சம் போட் டுக் காட்டியதாகக் கூறினார்"(பக்: 129) என்று கூறும் சந்துரு அவ்வழக்கறி ஞர் மனமாற்றம் அடைந்ததையும் இந்நுல் மூலம் உணர்த்துகிறார்.

கே.சந்துருவின் இவ்வகை செயல்கள் தலித்துகள் பற்றி தலித்தல்லாதவர்கள் கொண்டிருக்கும் தவறான மதிப்பீடுகளை, கருத்துக்களை மாற்றிக் கொள்ளு மாறு அழைப்பு விடுக்கின்றன. தலித்துகள் பற்றிய தலித் அல்லாதவர்களின் தப்பான எண்ணங்களை மாற்றியமைக்க நினைக்கும் அவரது முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவே தென்படுகிறது அட்வகேட் ஜெனரல் மனம் மாறிய செயற்பாடு.

நீதியரசர் சந்துருவின் மனிதத் தன்மை நிமித்தமான இந்தத் தலித் ஆதரவு நிலபாட்டினைக் கண்டு சாதி இந்துக்கள் எரிச்சலடைவர்/கசப்புணர்வு கொள் வர் நிச்சயமாக.அத்தகைய மனிதர்கள் இப்படியான ஆளுமையாய் அவரை சமைத்தது எது என்றும் சிந்திக்க வேண்டும். அவரது மேம்பட்ட இந்திய சமு தாய/ சமய வரலாற்றறிவு, தீண்டாமையின் தோற்றம் மற்றும் அதன் வளர்ச்சிக் குறித்த புரிதல், தனிமனித/ சமூக வாழ்வியலுக்கான அடிப்படை உரிமைகளை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு, எதிர் வரும் காலத்தை சாதி-சமய பேதங்களற்ற சமத்துவ சமுதாயமாக நிறுவ வேண்டும் என்ற உயா¢ய நோக்கம் ஆகியவையே நீதியரசர் சந்துருவை இவ்வகையில் சமைத் திருக்கின்றன. ஒருவர் தலித்தோ தலித் அல்லாதவரோ யாராயிருப்பினும் அவர் சமுதாயத்தில் எந்த ரூபத்தில் ஒடுக்கப்படுபவராய் இருப்பினும் அவ ருக்கு ஆதரவாளராய் சந்துருவை எழுந்து நிற்கத் தூண்டுவது அவருக்குள் இயங்கும் பல்துறை அறிவேயாகும்.

"அடிமைத்தனம்" என்னும் கவிதையொன்றில் கலீல் ஜிப்ரான் அடிமைத்தனம் என்பதின் குணத்தைக் கீழ்வருமாறு பாடுகிறார்:

"உண்மையில்,
தலைமுறை தலைமுறையாக
பின் வரும் தலைமுறைக்கு வழங்கப்பட்டு வரும்
மனநோய் அது"

என்னும் ஜிப்ரானின் இக்கவிதை வா¢கள் இந்திய சாதி முறைக்கும் பொருந்தி வருவதை வரலாற்று அறிவு பலத்துடன் அணுக முடியாதவர்களால் சந்துருவின் "அம்பேத்கர் ஒளி யில் எனது தீர்ப்புகள்" என்னும் நூல் வாசிக்கப்பட்டதும் தலித் ஆதரவு நிலை பாடு கொண்டிருக்கும் நூலாகும் இது என்றே தப்பர்த்தம் கொள்ளாப்படும். கறுப்பின மக்களின் இனவெறிக்கு எதிரான போராட்டங்களை நியாயப்படுத் திப் பேசும் இவர்கள் அடிமைத்தனத்தை விடவும் கொடுமையானது தீண் டாமை என்று அம்பேத்கரால் நிரூபிக்கப்பட்ட நிலையிலும் தலித் மக்களை தொடக்கூடாதவர்களென்று புறக்கணிக்கும் இந்து மதத்தின் பழமைவாத கருத்தியலுக்கு ஆதரவாளர்களாகவே இருப்பதுதான் பெரும் நகைமுரண். இப்படியான ஆசாமிகளையும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் கனியன் பூங்குன்றனாரை புகழ்ந்துப் பேசிக்கொண்டே தலித்துகளை அந் நியர்களாக நடத்தும் தலித் அல்லாதவர்களையும் மனதிற் கொண்டு படைக் கப்பட்ட, அவர்களது மனநிலைகளில் மாற்றங்களைக் கோரும் நூலாகும் இது.

Pin It