திருஞானசம்பந்தர் காலையிலிருந்து சரியாக இல்லை அவருக்கு ஒரே பதட்டமாகவும் படபடப்பாகவும் இருந்தது இன்று வாதத்திற்கான நாள் என்பதால் சற்று பதட்டமாகவே காணப்பட்டார்.

“என்ன இது என்னால் போல இன்னால் இல்லை! கைகால்களில் இவ்வளவு நடுக்கங்கள்” என்று தன் கைகளைப் பிசைந்துகொண்டு நின்ற சீர்நெடுமாற அரசனின் விருந்தினர் மாளிகையில் அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தார்.

சமணர்கள் யாவரும் சம்பந்தரின் வருகையால் மட்டற்ற மகிழ்ச்சியில் திகழ்ந்தனர் ஒவ்வொரு சமணத் துறவிகளும் திருஞானசம்பந்தரின் அறையினுள் சென்று அவரிடம் நலம் விசாரித்து வந்தனர்.

“தங்கள் வருகையால் பாண்டிய நாடு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது”

“அடியார்களின் அடியாராகிய தங்களுக்கு பணி செய்வதில் எங்களுக்கும் பாக்கியம் வேண்டும்”

“தங்களின் சேவகம் இன் நாட்டுக்கு தேவை சமணர்கள் எனக்கு சேவைச் செய்வதை நான் ஒரு காலமும் அனுமதிக்க மாட்டேன். தங்களின் பணியும் தூய்மையான உள்ளமும், பிரகாசமான முகமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது சமணர்களே”

“அப்பர் தூக்கி சுமந்த தங்களை இந்த முனிவர்கள் சேவகம் செய்வதில் என்ன குறை கண்டீர்”

“பற்றற்ற நீங்கள் இந்த சேவகனை பற்றி கொள்வதின் நோக்கம் என்னவோ?”

“தங்களின் அருள்மொழி செவி கேட்டவுடன் தோடுடைய செவியன்யோனும் ஓடி வருவான் என்பதனை அறிந்தோம்”

“எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்வதே எங்கள் பணி அதையே தங்களுக்கும் செய்வதாய் தங்களிடம் பணிந்தோம்”

“சேவகம் செய்வதில் சமணர்கள் பணி போல இவ்வுலகில் நான் யாரும் கண்டிலார்”

“நாங்கள் அறமாவது பொருள் என்போம் நீங்கள் ‘அன்பே சிவம்' என்பிர்”

“நாம் சொல்லும் நன்னெறிகள் யாவும் ஓர் நெறிகளை இதில் பாகுபாடுகள் எதுமில்லை பார்ப்பவர்களின் கண்களிலும் கேட்பவர்களின் செவிகளையும் தவிர”

“சரியாகச் சொன்னீர் சமண முனீயே”

“நாளைய காலை அனல்வாதம் இடவேண்டும் என்று நெடுமாறனின் ஆணை அரசரின் சொல் மீறி இச்சபையில் செய்வது எண்ணென்று? நான் விழித்துக் கொண்டிருந்தேன் நல் வேலையாக தாங்களே என்னிடம் வந்தீர்கள். இதைப்பற்றி நான் தங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் சமண முனீகளே”

நாம் சிரமம் மேற்கொண்டு எழுதிய படைப்புகளை எரியும் தீயில் இடுவதை நான் ஒருகாலமும் அனுமதிக்க மாட்டேன். அரசர்கள் தங்களின் சுய விருப்பு வெறுப்பிற்காக பொன்னான இலக்கியங்களை மன்னாக நினைக்கிறார்கள்.”

“பாண்டிய நாட்டில் அரசரின் கட்டளையை மீறி ஒருக்கு கழுவேற்றம் தான் கிடைக்கும் சீர்காழி யாரே”

“இது என்ன அரசாங்கம் குடிகளின் விருப்பம் அறியாமல் குடிகொண்டிருக்கும் அரசாங்கம்”

“இனி வீண் பேச்சு அவசியம் இல்லை? நாளை சபையினில் சந்திப்போம் தாங்கள் எழுதி வைத்துள்ள ஏட்டினை மறக்காமல் எடுத்து வாருங்கள்”

சமண முனிவர்கள் சம்பந்தரிடம் உரையாடிவிட்டு அவர் ஓய்வுக்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு கூடாரத்தில் இருந்து புறப்பட்டனர்.

அன்று இரவு முழுவதும் கடுமையான மழை பொழிந்து கொண்டிருந்தது. சம்பந்தர் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அவர் தங்கியிருந்த கூடாரத்தின் அருகே இருந்த காய்ந்து போன பனைமரத்தின் ஒன்றில் திடீரென இடி ஒன்று விழுந்தது. அப்பனை மரம் பற்றி எரிய ஆரம்பித்தது. கூடாரத்தின் உள்ளே இருந்த சம்பந்தர் அத்தனை கண்டு அஞ்சி கூடாரத்தின் வெளியே ஓடி வந்தார். தன்னை யாரோ கொள்வதற்கு கூடாரத்தின் மீது தீ வைக்க திட்டமிட்டுள்ளதாக எண்ணியும் கொண்டார்.

மறுநாள் காலை அரசவை கூடியது அனைவரும் மன்னரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர். நன்றசீர்நெடுமாறன் அவையினுல் நுழைந்தார் அனைவரும் எழுந்து நின்று அரசருக்கு அரச வணக்கம் செய்தனர்.

“தொடங்கட்டும் அரசவை” என மன்னனே தன் கர்ஜனை குரலால் அன்று கர்ஜித்துவிட்டு இரண்டு புலமை ஆளுமைகளையும் அழைத்தார்.

“தன்னுயிர் நீப்பினும் பிறர் இன் உயிர் நீக்க சமணர்களே!”

“தோடுடைய செவியனை நேரில் கண்ட நாடுடைய வல்லோனே வீரசைவ திருஞானசம்மந்தர் அவர்களே”

“தாங்கள் எழுதி வைத்துள்ள ஏடுகளை தீயில் இடுங்கள். இந்த அக்னி தேவன் முடிவு செய்யட்டும் எது சிறந்தது என்று.”

திருஞானசம்பந்தர் வைத்திருந்த பைகளில் அதிகமான ஏடுகளை வைத்திருந்தார். அவர் அதில் எழுதிய ஏடுகளையும் எழுதாமல் புதிதாய் எழுதுவதற்காக வைத்திருந்த பச்சை ஏடுகளையும் ஒன்றாகவே வைத்திருந்தார்.

சமணர்களின் இளைய சீடர் ஒருவர் புதிதாக எழுதி வைக்கப்பட்டிருந்த ஏடுகளை கொண்டு வருவதற்கு பதிலாக முன்னதாகவே எழுதி வைத்திருந்த பழைய காய்ந்துபோன ஏடுகளை சபைக்கு கொண்டு வந்திருந்தார்.

சமய நூல்களை இருவரும் தீயில் இட தயாராக இருந்தார்கள். சமண முனிகள் இளம் சீடர் கொண்டு வந்த பழைய ஏடுகளை கவனிக்காமல் தீயில் இட்டனர் காய்ந்த ஏடுகளில் ஈரத்தன்மை இல்லாததால் அது வேகமாக எரிய ஆரம்பித்து விட்டது.

திருஞானசம்பந்தர் வைத்திருந்த பைகளில் கைகளை விட்டு அரசரை பார்த்துக்கொண்டே ஏடுகளை எடுக்கும் பொழுது அவர் எழுதிய ஏட்டை எடுப்பதற்கு பதிலாக புதிதாக எழுதுவதற்காக வைத்திருந்த பச்சை ஏடுகளை எடுத்து தீயில் இட்டார். அதில் ஈரத்தன்மை அதிகமாக இருந்ததால் அந்த ஏடுகள் தீயில் எரியாமல் அப்படியே கிடந்தன.

இதில் உள்ள அறிவியல் புரியாத அரசர் சமணர்கள் தோற்றதாக அறிவித்தார் சபையையும் கலைத்தார் மீண்டும் நாளை கூடச் சொன்னார்.

சமணர்கள் பலரும் தாங்கள் எழுதும் நூல்களில் எழுதுபவர்களின் பெயர்களையே சேர்த்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு பற்றற்வர்களாக அவர்கள் திகழ்வார்கள் ஏடுகள் தீயில் சாம்பலானதும் அவர்கள் அவைகளிலிருந்து மௌனமாக கலைந்து சென்றார்கள்.

சமணர்களின் தோல்வி திருநாவுக்கரசருக்கும் வருத்தம் அளிப்பதாக இருந்தது.

மறுநாள் காலையில் தத்தம் வசமிருக்கும் ஏடுகளை ஓடும் நீரில் விடுவது தான் அந்த போட்டி. நேற்று நடந்த பிழையையும் சம்பந்தர் உணர்ந்தார் தான் எரிந்தது பச்சை ஏடுகள் எனவும் காய்ந்த ஏடுகள் அப்படியே வைத்து இருந்ததையும் எண்ணி மனம் வருந்தினார். இன்று தன்னிடம் இருந்த அனைத்து காய்ந்த ஏடுகளையும் நீரில் விட்டு எரிவது என முடிவு செய்தார். இதில் எப்படியும் தன் ஏடுகள் நீரில் அடித்துச் சென்றுவிடும் என்றும் நம்பி இருந்தார்.

ஏடுகளைத் தண்ணியில் விடும் போட்டி நடக்கும் இடத்திற்கு திருஞானசம்பந்தர் சென்று கொண்டிருந்தார் அப்போது அவர் நடந்து சென்ற பாதையில் அவரின் தலைக்குமேலே கழுகு பாம்பு போன்ற வளைவான குச்சிகளை சுமந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சம்பந்தரின் தலையின் மீது சில குச்சிகளைக் கழுகு போட்டுவிட்டது..

தன் தலை மீது விழுந்த அந்த குச்சிகளையும் எடுத்துக்கொண்டு வேகமாக நதிக்கரைக்கு நடந்து சென்றார். அங்கே போட்டி நடப்பதற்கான பணிகள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது அரசரின் வருகைக்காகவும் குடிமக்களும், மந்திரிகளும் காத்துக்கொண்டிருந்தனர்.

திருஞானசம்பந்தர் தான் கொண்டு வந்த பைகளில் இருந்த ஓலைகள் கட் ஆவிழுந்து கொண்டிருப்பதை கண்டு தன்னிடம் இருந்த அந்த இரண்டு வளைவான குச்சிகளை மொத்த ஏடுகளையும் ஒன்றிணைத்து அந்த இரண்டு குச்சிகளுக்கு நடுவே ஓடுகளை ஒன்றாக வைத்து கட்டினார்.

சமண முனிவர்களும் நதிக்கரையின் அருகே வந்து தங்களின் ஏடுகளுடன் நின்று கொண்டிருந்தனர்.

சமண முனிவர்களில் ஒரு மூத்த வயோதிக முனிவர் ஒருவர் திருநாவுக்கரசர் கையில் இருந்த ஏடுகள் கட்டப்பட்டு இருந்த குச்சியை கவனித்தனர். அது கருட சஞ்சீவி எனப்படும் சஞ்சீவி வேர் தான் என்பதனை அறிந்தார்.

அந்த சஞ்சீவியின் மகத்துவம் என்னவென்றால் அதை நீரினில் வைத்தாள் நீர் பாயும் எதிர்த்திசையில் செல்லும் தன்மையுடையது. இதை அம் முனிவர் அறிந்திருந்தும் அவையோர்கலி்ன் முன்னே அமைதி காத்து மன்னரின் வருகைக்காக நின்றுகொண்டிருந்தார்.

மன்னர்தம் குதிரை வண்டியில் வந்திறங்கி போட்டியினை தொடங்க ஆணையிட்டான்.

சமணர்கள் முதலில் ஒவ்வொரு ஓலைச்சுவடிகள் ஆக நீரில் விட்டனர் அது ஒவ்வொன்றும் நீரின் திசையிலேயே அடித்துச் செல்லப்பட்டது இப்பொழுது திருநாவுக்கரசரை அழைத்து அவர்களின் ஓலைச்சுவடிகளை நீரில் விடச் சொன்னார்கள் திருநாவுக்கரசர் சஞ்சீவி குட்சியுடன் சேர்த்துக் கட்டிய ஓலைச் சுவடிகளை நீரில் விட்ட பொழுது சஞ்சீவி குச்சியின் மகத்துவம் காரணமாக ஓலைச்சுவடிகள் நீரின் எதிர்த்திசையில் நீந்தின இதை பார்த்த திருநாவுக்கரசர்ருக்கும் ஆச்சரியம், அனைவரும் வியப்புடன் பார்த்து கொண்டிருந்தனர்.

திருநாவுக்கரசர் வெற்றி பெற்றதாகவும் மன்னர் அறிவித்தார். இப்போட்டியில் நடந்த பிழையை அறிந்த சமணமுனிவர் பதில் எதுவும் பேசாமல் மன்னரின் ஆணைக்கிணங்க தண்டனைகளை ஏற்கவும் தயாராக இருந்தார்கள்.

நின்றசீர்நெடுமாறன் என்னும் அரசனுக்கும் மங்கையர்கரசி என்னும் அரசிக்கும் ஏற்பட்ட வாதத்தினால் இப்போட்டிகள் விளைந்தன. இருப்பினும் இதில் தண்டனை பெறக்கூடிய சமணமுனிவர்கள் எண்ணி திருநாவுக்கரசரும் வருந்திக் கொண்டிருந்தார். ஆகையால் சமணர்களுக்கு ஏதும் தண்டனை அளிக்காமல் அவர்களை விட்டு விடவும் மன்னரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

“எண்ணாயிரம் தோழர்களை புண்ணாக்க நினைப்பது நின்றசீர்நெடுமாறனின் வேலை அல்லவோ. ஆகையால் அவர்களை விட்டுவிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் அவர்களும் நம் தோழர்கள் அல்லவா”

சம்பந்தரின் வேண்டுகோளை ஏற்ற மன்னர் சமணர்களுக்கு தண்டனை ஏதும் வழங்காமல் அவர்களையும் சைவ மதத்தை தழுவ செய்தார்.

சைவத்தை ஏற்றுக் கொள்ளாத சமணர்களுக்கு அந்நாட்டின் வழக்கப்படி தண்டனைகளையும் அளித்தார்.

- மு.தனஞ்செழியன்

Pin It