எல்லோருக்குமான
ரகசியங்களில் ஒன்றாகவே இருக்கிறது
தனது பெயரோடு
தான் நேசிப்பவரின் பெயரை
முன் பின் சேர்த்துக் கொள்வதும்
அதனூடான குறியீடுகளை
கடவுச் சொல்லாக வைத்திருப்பதும்..
--------------------------------
உனதழைப்பிற்காக
காத்திருந்த பொழுதுகளில்
இரவு துணையிருந்தது..
நீயழைத்தவுடன்
அணைத்துக் கொள்ள
இரவு தன் கண்களை மூடியிருந்தது..
மெல்ல என் கண்கள் மூடுகையில்
சன்னல் கம்பிகளின் வழியே
வெளிச்சப்புள்ளிகள்
தூரத்தில் வருவது தெரிந்தது..
-------------------------------
உன் பாராட்டையோ
கேள்வியையோ
சுமந்து வரும்
உன் குறுஞ்செய்திகள்
மாற்றிவிடுகிறது
எனது முந்தைய மனநிலையை..
------------------------
விரும்பியோ
விரும்பாமலோ
எங்கேயேனும்
நிகழ்ந்தபடிதானிருக்கிறது
ஒரு காதல் பூப்பதும், உதிர்வதும்.

- இசை ப்ரியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

4 comments

4
நிஜப்பிரியன்
மிக சிறந்த கவிதை.
மெல்லிய உணர்வுகளை சிறப்பாக மொழிப்பெயர்த்து இருக்கிறீர்கள்.
தொடர்ந்து எழுத வாழத்துக்கள்..!
கவிப்பாண்டியன்
தங்களது கவிதைகளில் கன்னியின் இன்றைய காதலையோ அல்லது அன்பையோ பார்க்கவியலுகிறது. வெளிச்சப் புள்ளிகள் பெருக வாழ்த்துக்கள்!
isaipriya
nijapriyanukkum.. kavippandiyanukkum mikka nandri..
r.vivekanandhan
eharthamana vazhkkai mozipeyarthullathu uom kavithai

thinamum manitha ounarvugal velippada en vazhthukkal

vidiyal vivekanandhan.polur.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.