கண்ணீர் சிந்துவதை நிறுத்து...
அது காட்சிகளைத் தெளிவுறக் காட்டாது..
காட்சிக்கும் கானலுக்கும் வித்தியாசம் காட்டாது..
நயம்பட பேசி நெருங்குபவர்களின்
வஞ்சகத்தை அடையாளம் காட்டாது..
அருகில் அழுகிற கண்களைக் காண இயலாது..
கண்ணீர் சிந்துவதை நிறுத்து..
அதற்கு துயரத்தின் வலிமையைக் கூட்டும்
சூட்சுமமே தெரியும்..
அந்த வியூகத்திலிருந்து வெளியேறும்
வித்தை தெரியாது..
கண்ணீரை விட செயலே பேச வேண்டும்
செயலே கண்ணீரை துடைக்கும் ஆயுதம்
ஆயுதம் ஏந்து..
உனக்கெதிராக நிற்கும்
அனைத்து தீமைகளுக்கும்
முடிவு கட்ட..

Comments

1 comment

1
Somasundaram.
Well wnitted Poem.Vaazthukkal.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.