கண்ணீர்க் கதை

என்னை வளர்த்தெடுத்த
ஆதிச் சொல்லே
என்னைக் கொலை செய்ய துணிந்த
கண்ணீர்க் கதையினை
எங்கே போய் சொல்ல?
எப்படிச் சொல்ல?
சொல்லி என்ன செய்ய?
எதற்குத் தான் சொல்ல?

மீண்டும் ஒருநாள்
மன்னிப்பின் சிறகுவிரித்து வரக் கூடும்..
அந்த ஆதிச் சொல்..
அதனால் இப்போதே தயாராகிறேன்..
கண்ணீர்க் கதையை எனக்குள்ளேயே புதைக்க..

===========

நீ உணர மறுத்த காதல்

உன்னையே தேடிக் கொண்டிருந்த
எனக்கு வாய்த்துவிட்டது
என்னைத் தேடும் ஒருவனின் தேடல்..

நீ எதிர்பார்த்திருந்த
நிபந்தனைகள் எதையும்
என்னிடம் விதிக்கவில்லை அவன்..

நான் உன்னிடம் வாரியளித்த
அன்பைவிடவும்
மேலதிகமாய் என்னில் பொழிகிறான்..

என் வழித்தடங்களை
ஒருபோதும் தெரிந்துகொள்ள விரும்பியதில்லை அவன்..
ஆனால் அவற்றால் ஏதேனும் ஆபத்து நேருமென
நானாகவே மேலோட்டமாய் சொல்லி வைத்தேன்..

உன்னால் ஏற்பட்ட காயத்திற்கும்
சேர்த்தே மருந்து குழைக்கிறான்..
உன்னையும் சேர்த்தே நேசிக்கிறான்
நீ என்னால் நேசிக்கப்பட்டதால்..

இப்போது காயங்களாறி
நடமாடத்துவங்கியிருக்கிறேன்.
இனிவரும் மழையிரவுகளில்
அவனுக்காய் அடைகாப்பதற்கு என்னிடம்
அதே கதகதப்போடு மிஞ்சியிருக்கிறது
நீ உணர மறுத்த காதல்..

Comments

7 comments

7
மழைக் காதலன்
அற்புதம் தோழி... வாழ்த்துகள்... என் வலைப் பூவில் சேர்த்திருக்கிறேன்..
krish
எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு
krish
i can very proud of you
routhiran
வெளுக்கும் காவிகள்

காவியை அணிந்தோ ரெல்லாம்
கடவுளின் வடிவ மென்று
கோவிலிற் கொண்டு வைக்கும்
கோமாளித் தனத்தினாலே
பாவிகள் கூட்ட ந் தன்னைப்
பாரினில் வளர்த்து விட்டு
கூவியே அழுத மக்காள்
குற்றத்தை உணர்வீ ராக!

விஞ்ஞானம் வளர் ந்த தெண்ணி
வியக்கின்ற அதே நே ரத்தில்
அஞ்ஞானம் வளர் ந்த தெண்ணி
அழாமலும் இருத்தற் கில்லை
இஞ்ஞான்றும் திரு ந்தா விட்டால்
இடும்பைக்கு அளவே யில்லை
எஞ்ஞான்றும் உழல வேண்டும்
என்பதில் ஐய மில்லை

பொய்யினைப் புரட்டை யெல்லாம்
புத்தியில் ஆரா யாமல்
ஐயமே சிறிது மின்றி
அடியுடன் ஏற்பீர்; ஆனால்
வையகத் தொடக்கம் தொட்டு
இற்றை நாள் மட்டும் இங்கே
மெய்யினை மட்டும் ஏனோ
உரசிய பின்னே ஏற்பீர்!

காசியைத் தொடுவோ ரெல்லாம்
கைலாயம் தொடுவ தில்லை
கோஷங்கள் இடுவோ ரெல்லாம்
கொள்கையின் செல்வ ரில்லை
மோசத்தை அடை ந்த பின்னும்
மதிவர வில்லை யென்றால்
நாசத்தைத் தடுப்ப வர்யார்
நாயகா சபரி நாதா!

-------ரௌத்திரன்
seetha
நீ உணர மறுத்த காதல்............
என்ன சொல்ல காதலின் அழகை,
காதலை அழகுபடுத்த காதலை தவிர வேறு எதனால் முடியும்,
காதலின் காதல் அழகு,
நீ உணர மறுத்த காதல்.... இன்னும் அழகு.

உணறுகிறேன் காதலை, நீ உணர மறுத்த காதலால்....


தங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
LuciaHashi
மனதை தொட்டு சென்றது ...........
shabitha M.P
dear friend
i m very proud of you... title itself fantastic... please write more...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.