இன்னும் எத்தனை நட்சத்திரவானுக்குப் 
பின், அவளது சேகரித்த முத்தங்கள் மீளுமோ. 

ஓராயாச எதிர்நோக்கலில் 
குருவாளின் சொச்ச குருதியும் 
கனவறை பருக, 
கடல் குடிக்கும் உப்பாயுறைகிறது மீன்.  

உடைந்த நிலா
ஆசைபௌர்ணமிக்கென வளர்வதாய் 
மிகுலெகுவாய் விரல்நீட்டும் வானத்தில் 
நிஜ நிழல்கள் இதுவரை எங்குமில்லை 
என்பது எத்தனை பேருக்குத் தெரியவருமோ.

வயதினை வயதே குடித்தலென்பது 
நீர்தேங்கி யழுகிய வேரிலொட்டிய 
மண் எனலாம், சற்று குரலைக் குறைத்து.  

அர்த்தமற்ற தனிமைக்கு இளமை இரையாகிறது  
மரமில்லா ஒடிந்த கிளையென. 

இரவோடு இரவாக 
புகைமாண்ட அழுக்கு அறையில் 
துவம்சமாகிறதொரு ஒற்றைக் காமமும் 
உயிர் உருகும் காதலும் . 

- ஆறுமுகம் முருகேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.