எப்படி என்பதுதான்
இன்னும் பழகிவிட முடிவதில்லை..
இப்படித்தான்
என்றால்..
அப்படியில்லையே
அப்படி வேண்டாமே
அடிக்கடிச் சொல்லிக் கொள்கிறேன்
எனக்கு நானே!
எத்தனை முறை
ப்ராக்டீஸ் எடுத்துச் சென்றாலும்
ஒரு முறையும் சொல்லிவிடுவதாயில்லை!
அதே மாதிரியானதொரு
சொல்லாதச் சொல்லோடுதான்
நடை கொண்டிருக்கிறேன்
இம்முறையும்!
-ஆறுமுகம் முருகேசன்.. (