அறியாத வயதில்

அம்மா அப்பம் என்றாள்

பாட்டி சொன்ன கதைகளில்

பந்தாக உருமாறிப் போயிருந்தது

தமிழ் ஆசான்

பெண்ணின் முகம் போல என்றார்.

எல்லாம் பொய் என்று புரிந்தது

என் முதிர்ச்சியில்..

- நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.

Pin It