'மாமிசம் விற்கப்படும்' என்றFonseka and Rajapakse

விளம்பரப் பலகை போட்டு
வியாபாரத்தைத் தொடங்கியிருந்தான்

கை கால்கள் மட்டுமின்றி
தலை மூளை ஈரலோடு
நெஞ்செலும்பென
சமைத்து உண்டால்
சகல நோய்களும் தீருமென்றான்

சுவைக்கு மயங்கி இவர்கள்
வாடிக்கையாளர்களாகிப்போன போது
'மனித மாமிசம்' விற்கப்படுவதாய்
மாற்றியிருந்தான்

தவிர்க்க முடியாத உணவு
என்றிவர்கள் சொல்லத்தொடங்கியபோது
'தமிழன் மாமிசம்' என்று
மாற்றப்பட்டிருந்தது

எதையும் கவனிக்கும் மனமின்றி
வரிசையில் காத்துக் கிடக்கின்ற இவர்கள்
நாளை தன்னுடலையும்
தலைகீழாய்த் தொங்கவிடுமுன்னே
விற்பவனின் மாமிசத்திற்கு
விலைபேசுவார்களா?

- நாவிஷ் செந்தில்குமார்

 

Pin It