நிராதரவு

Rose
அவளும் அவனும்
பிரிந்துவிட்டனர்.
நிராதரவாக
ஓர் மூலையில்
அமர்ந்து அழுது கொண்டிருந்தனர்
அவர்களின்
கனவுக்குழந்தையும்
காதலும்..


0


Night shift


மத்தியானத்தில்
அறையில் படர்கிறது
மெல்லிய வெப்பம்.
நண்பர்கள் புடைசூழ
வாழ்ந்தவனை
நான்கு சுவர்களுக்குள்ளே
ஆதவன்
வீட்டுச்சிறையில்
வைத்திருந்தான்.
அந்த அறையே
சூனிய வெளியாக
தனிமையே துணையாக
அவன் படுத்திருக்க
பக்கத்தில் கிடந்த
நகுலனின் “கோட்ஸ்டாண்டு கவிதைகளை”
மின்விசிறி
மெல்லமாக பக்கங்களை திருப்பி
படித்துக்கொண்டிருந்தது.


0


உன்மத்த கவி


இது தான் உலகின் அழகிய பூந்தோட்டம்.
வெள்ளை,மஞ்சள்,சிகப்பு என
அத்தனை நிற ரோஜாக்களும் இங்கு உள்ளன.

ஷ்ஷ்..யாரும்
அதிர்ந்து நடக்கவோ,பேசவோ வேண்டாம்.

ரோஜாக்கள் காதல் செய்து கொண்டிருக்கின்றன
மற்றும் ஒரு உன்மத்த கவிஞன் எழுதிக்கொண்டிருக்கிறான்.

- அய்யப்பராஜ்

Comments

1 comment

1
punithan
natukoliyai veetu seriyel vaithalum yedaithan kurium broilerkoli aagathu. minviseri nagulanyai vasthu konderanthathu...arumyana vari. 3 kavithaum 3 suvai. thanimaiu, pirvu, nesam. kavingen vithiyasum kalathin panmugam.panmugakavi!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.