மனம் கொத்த கற்றுக்கொண்டுவிட்டாய்
எழுத்தைவிடவும் உனக்கு
இயல்பாய் வருவது அதுதான் மல்லிகை மணம் பூசிய
மடிப்புக் கலையாத உடையிலிருந்து
துவங்குகிறாய்
மற்றவருக்கு நீ தரும் மரியாதையை
ஆழு உழுது மனசின் அடியாழத்தில்
உன் நட்பை விதைத்தவனை
விதண்டாவாதி என்கிறாய்
நல்லமழையில் நனைந்தோ
வீசும் காற்றில் கிழிந்தோ
சுயம் இழக்கக்கூடும் பகட்டாடைகள்
உணர்வாய்...
அவிழ்த்துப் போட்டவுடன்
எல்லா அம்மணமும்
அறுவருப்பானதே
-குரு.முருகன் (
கீற்றில் தேட...
உணர்வோட்டம்
- விவரங்கள்
- குரு.முருகன்
- பிரிவு: கவிதைகள்