வளர்ந்து விட்டதாய்
இருமாந்து கொள்கின்றன
ஏடுகள்...
கண்டுபிடிப்புகளின் மூலம்
கண்விழிப்பதாய் கூறுகின்றன...
இத்தனை காலம்
பற்பல சுழற்சிகளை
நசுக்கியாகிவிட்டது...
அவற்றின் பிரேதங்களின் மேல்
நர்த்தனமாடியாகிவிட்டது...
இன்னும் வளர்ச்சி
சலிக்கவில்லை அவைகளுக்கு...
செல்லும் திசையெங்கும்
இருளை ஒளியூட்டுகின்றன...
அமைதி வெளியெங்கும்
மயானமாக்குகின்றன...
சூன்யத்தைக் மொழியாக்கி
வளர்க்கின்றன...
உலகை வெல்லப்போவதாய்
எக்காளமிட்டு
அழிவை உமிழ்கின்றன
எந்நேரமும்...
- ராம்ப்ரசாத் சென்னை (