கீற்றில் தேட...


உண்மையில்லை
எனத் தெரிந்தே
உனக்காக சில
பொய்கள் சொல்கிறேன்.

உன்னை மலர் என்று
ஒவ்வொரு நாளும்
பொய் சொல்கிறேன்.

நீ நிலா என்று
ஒரு பொய்யை
உயரத்தில் கொண்டுபோய்
உட்கார வைக்கிறேன்.

உன் கூந்தலை
மேகம் என்றும்
கண்களில் மீன்கள்
குடியிருப்பதாகவும்
கூடுதலாக சில
பொய்களைச்
சொல்கிறேன்.

உன்னோடு
இருக்கும்போது
எல்லாவற்றையும்
அழகாகப் பார்க்க
ஆசைப்படுகிறது மனது!

அதனால்தான்...
அழகழகாய்
பொய் சொல்லப்
பழகிக் கொள்கிறேன்.

அழகான பொய்கள்
உண்மையாகி
விடுகிறேன்.

கோவி. லெனின்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.