வற்றாத சொற்பெருக்கும்
வளையாத கலைச்செருக்கும்
முற்றாது கொண்டவளே!
முத்தமிழே! உத்தமியே!
கற்றாரும் மற்(று)ஆரும்
காமுற்ற களஞ்சியமே!
சற்றேனும் சரிவற்ற
சரித்திரத்தின் சாட்சியமே!


எம்மழையும் தாராத
ஈரமிகு தீம்புனலே!
செம்மையொடு கோலோச்சும்
திருத்தமிழர்ப் பாமடலே!
எம்“மொழி”யும் வாழ்த்தவரும்
“எம்”மொழியே! செந்தமிழாம்
“செம்மொழியே”! உனக்கென்றன்
சிரம்தாழ்ந்த நல்வணக்கம்!!

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.