பழுதடைந்த நினைவுகளின்
குடைசாய்ந்த இரவொன்று
கும்மிருட்டுக் கல்லாகி
உறக்கத்தின் இளம் தளிர்கொடியில்
நச்சென விழுந்தபோது
அழைத்து... அழைக்கமுடியாது
அழைக்கும் முன்பான
விலக்கத்திற்குப்பின்
நேபாள கூர்க்காவின்
விசிலும் தரை தட்டும் ஒலியும்
நடுங்கும் இரவின்
கைத்தடியானது.
இரவுமட்டும் அவிழ்த்துவிடப்படும்
பெரும் பணக்காரர்களின்
நாய்கள் குரைத்தபோதெல்லாம்
பகலெல்லாம் கட்டப்பட்டிருந்த
சோகங்கள் கேட்கத் தொடங்கின
நள்ளிரவில்
கரைந்து பறக்கும்
சில காகங்களின் எதிர்பாரா தேடலில்
தலை சாய்த்துக்கொண்டன...
அதிருப்திகள் ஒவ்வொன்றும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.