நீ எதற்கும் சிரமப் படுவதில்லை என்றாலும்
எதற்கோ சிரமப்பட்டு கொண்டுதானிருக்கிறாய்
உன்னை யாரும் தொந்தரவு செய்யமுடியாதென்றாலும்
யாரோ தொந்தரவு செய்துகொண்டுதானிருக்கிறார்கள்
உன்னை யாரும் எமாற்றமுடியாதென்றாலும்
நீ தினமும் எமாந்து கொண்டுதானிருக்கிறாய்
எங்கும் வரவிரும்பாத உன்னைத்தேடி
எல்லாம் வந்துவிடுகின்றன.
எதிர்பார்ப்புகள் தீர்ந்த உறவில்
வாழவிருப்பமென சூழ்ந்துநிற்கும்
எதிர்பார்ப்புகளிடம் புலம்புகிறாய்
ஒன்றுமற்ற ஒன்று
கவ்விப் பறக்காதா என காத்திருகிறாய்
கவ்விப் பறந்து அத்துவானத்தில் வைத்து
குதறி குடல் இழுக்கையில்
பதறி திரும்பி விடுகிறாய்
ஒன்று செய்ய விரும்பாத உன்னை
எதோ செய்து தொலைக்கும்படியான
நெஞ்சின் நிர்பந்தம் சபித்தபடி...
உட்கார்ந்து ஊஞ்சாடுகிறாய்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.