Victoryஉதடுகளின் பரிபாஷைகள் மௌனத்தின்
மொழியைச் சிறையிட்டு
பரீட்சார்த்தங்களோடு நிகழ்த்தும் போருக்குக்
குருதி துடைக்க நாவு நீட்டுகின்றன.

அகமகிழ்தலின் எல்லைக்கோட்டில்
உனக்கான மலர்ச்செண்டுகளுடன்
உன் வெற்றிக்காக இல்லாவிடினும்,
எரியும் காழ்ப்பின் புகைவாசம் மறைக்க
நான் நிற்கிறேன்.

தற்போதைய என் காலடித்தடம்
உன்னால் அடையாளங் காணப்படலாம்
ஆர்த்தெழும் வன்மம் மறைத்து
கையில் செண்டுடன் பிறிதொரு நாள்
நீ என் வெற்றிக்குப் பின்
இதே போன்றதொரு இடத்தில் நின்றிருக்கையில்.
அப்போது என் வெற்றியை விட உன்
புகைவாசம் குறித்து கவனமாயிருப்பேன் நான். 

மதன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.