வானவெளியில்
சாடீன் சிறகுகளுடன்
Angelவெள்ளி கிரீடமுடன்
விழிகளை மூடியபடி
பறக்கிறேன்
திடுமெனக் கேட்ட ஒலியில்
விழிப்பு வந்துவிட
வீட்டில் கோரைப்பாயில்
பாதி படித்துவிட்டுப்போன
சின்ட்ரெல்லாவை
அணைத்துப்
படுத்திருக்கிறேன்
சாடீன் சிறகுகளுடன்
பறந்த நான் தேவதையா
தேவதைகள் பற்றிக் கனவு காணும்
மனுஷியா
நாளை பறக்க நேரிட்டால்
இரண்டில் ஒன்று
உறுதியாகிவிடும்!

ஷைலஜா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.