அலைபேசியில் அழைத்துஅதட்டு
நேரில் பார்க்கும்போது
முகம் திருப்பிக்கொள்
என் அழகினை
விமர்சனம் செய்
என்னைவிட என் தோழி
அழகென்று சொல்
எனக்குப்பிடிக்காத
திரைப்பாடலை
உரக்கப்பாடு
பரவாயில்லை
ஆனால் ஆனால்
இதுதான் நமது
கடைசி சந்திப்பு
என்றுமட்டும்
சொல்லிவிடாதே..
- ஷைலஜா (