அறுத்து மாளாமல் எரவானத்தில்
சொருவப்பட்ட அறுவாள்
அர‌க்கப் பர‌க்க அலறியடித்து எழும்
அவள் கண்ணுக்குள் சொருகிக் கிடக்கும்
நேத்தைய பொழப்பே
வாழ்க்கையாய்ப்போன கிழவிக்கு
அடுப்பங்கரையில் படுத்துறங்கும்
பூனையை துரத்தும் தெம்புமற்று
கொசவானத்தில் சொருகிய
அரிவாளோடு எட்டி நடைபோடும்
வேகத்தில் பின்னுக்குத்தள்ளப்படும்
சேரியின் குடிசை
பொசாயப்பொழுதில் மூன்றாம் நாள்
ஆக்கி வைத்த கம்மங்கட்டியில்
நாளைக்கு ஒதுக்கி வைக்கும்
கிழவியின் லாவகம்
அவள் கரைத்துக் குடிக்கும் கூழோடு
கரைந்துபோகும் அவளது காலம்
இருட்டிக்கிடக்கும் ராத்திரியை உறங்க வைக்க
அவள் சொல்லும் கதை
ஒரு ஊருல ஒரு பண்ணையார்
அவன் வீட்டு அடுப்பில்
ஒரு கிழவியின் சாண்டு வடியும்
jaya prakash [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]
றுத்து மாளாமல் எரவானத்தில்
சொருவப்பட்ட அறுவாள்
அர‌க்கப் பர‌க்க அலறியடித்து எழும்
oldlady_00அவள் கண்ணுக்குள் சொருகிக் கிடக்கும்
நேத்தைய பொழப்பே
வாழ்க்கையாய்ப்போன கிழவிக்கு
அடுப்பங்கரையில் படுத்துறங்கும்
பூனையை துரத்தும் தெம்புமற்று
கொசவானத்தில் சொருகிய
அரிவாளோடு எட்டி நடைபோடும்
வேகத்தில் பின்னுக்குத்தள்ளப்படும்
சேரியின் குடிசை
பொசாயப்பொழுதில் மூன்றாம் நாள்
ஆக்கி வைத்த கம்மங்கட்டியில்
நாளைக்கு ஒதுக்கி வைக்கும்
கிழவியின் லாவகம்
அவள் கரைத்துக் குடிக்கும் கூழோடு
கரைந்துபோகும் அவளது காலம்
இருட்டிக்கிடக்கும் ராத்திரியை உறங்க வைக்க
அவள் சொல்லும் கதை
ஒரு ஊருல ஒரு பண்ணையார்
அவன் வீட்டு அடுப்பில்
ஒரு கிழவியின் சாண்டு வடியும்

-ஜெயபிரகாஷ் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.