மனிதரத்தத்தை சேர்த்து பிசையப்பட்டு கிடக்கும்
இந்த மண் மீது
ரத்தக்கறை படிந்த வரலாற்றை
பூசிமெழுகிவிட்டு சாணத்தின் நாற்றத்தை
குழந்தைக்கு நிலாச்சோறு ஊட்டுகிறது
அதிகாலை கனவில் ஆழ்குழியில் கண்டெடுக்கப்பட்ட
அந்த புத்தர் சிலைமீது கூட ரத்தம் இன்னும் கசிகிறது
விரல்கள் தொட்டுதுடைக்கும் முன்பே
சிலையின் கழுத்தில் சுருக்குகயிறுகள்
எருமைகளின் முதுகில் கட்டி இழுத்ததில்
மௌனத்தை தூக்கி எறியும்  கோபக் குழந்தையாய்
மன அதிர்வுகள்

-ஜெயபிரகாஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
mithila
நல்ல கவிதை .இது போல நிறைய எழுதனும்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.