எலும்புகளின் முரண் குறியீட்டிற்குப்பின்
ஒளிந்திருக்கும் அந்த மண்டையோடுதான்
அரசுக்கட்டிலை இத்தனை நாள் குந்தி தேய்க்கிறது
முன்பொருகாலத்தில் அது
மொழி உணர்ச்சியை கிளப்பிய பிண்டம்
சொந்தமெல்லாம் நீலநீருக்கு அப்பால் செத்துமடிய
வாய்க்கட்டுப்போடாத இன்னும் செத்துமடியா பொணம் அது
மனித ரத்தத்தை உறிஞ்சும் அபாயக்குறியீடு
அடுத்த தலைமுறை பீப்பேண்டு தொடைக்கும் கல்
கடந்து வந்த பாதையை நாறடிச்சு தலைமைப் பண்பில்லாத
தலையில்லா முண்டம் அது
குந்தி தேய்த்து குசுவிட்டது போதாதென்று
எலிக்குஞ்சியை முன்னுக்கிழுக்கும் கடும்முயற்சியில்
பசுமை நிறைந்த மண்ணில்
மலட்டு விதையைத் தூவிய நெஞ்சழுத்தம்
மந்திரவாதியிடம் சிக்கிய மண்டையோடு போல்
பாதுகாப்புப் படைகளுடன் சொரணையற்று கிடக்கும் உனக்கு
தெரியப்போவதில்லை ரத்தத்தின் வாடையும்
பிணங்களின் கவிச்சையும்
உன் போலித்தன்மையில் மயங்கி கிடக்கும்
இந்த மொழிச்சமூகமும்

-ஜெயபிரகாஷ்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
veera
very good

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.