நகராத சுவரெங்கும்
நாளையே நகரக்கூடும்
நம்பிக்கையின்மைக்குள்
வருக வருக அழைப்பிதழ்கள்
காட்டி நிற்கின்றன
பளபளப்பின் ஆடம்பரங்கள்.
நகரும் வாகனங்களுக்கு
ஊர்ந்துவரும் கலை பயில
கையுயர்த்தி
கம்பீர நடை பயின்றபடி
மாலை தாங்க முடியாத
கழுத்திலும் தங்கம் நிறைத்து
சாலைகளின் ஓரங்களில்
வானுயரப் பதாகைகள்.
சிறுபரப்பு கிடைப்பினும்
அழகுக்கு இலக்கணம் எழுதி
ஆண்மை பெருக்கும்
அலைபேசி எண்களை
விசிறியபடி
அச்சிட்ட விளம்பரங்கள்.
நாய்களும் குழிகளும்
ஓய்வெடுக்கும் நெகிழிகளின் வலைப்பின்னலில்
வீசும் காற்றும் வெக்கையாகி
சாலைகளை சூறாவளியாக்கி
காணுமிடமெங்கும்
வாகன நெரிசல்கள்.
நகரத் தூய்மைக்கென
நாளும் அயராதுழைத்திடும்
திட்டங்களின் பட்டியலோடு
கடந்து போகிறது
ஒலிப்பெருக்கி அறிவிப்புகள்.

- இளையவன் சிவா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.