உன் வீட்டு முற்றத்தில் நிற்கும்
துளசிச் செடியில்
உதிர்ந்து விழும்
ஊதுபத்தி சுருளில்
சமையலறையின் புகைபடிந்த
கறைகளில்
சிறகடிக்கும்
எதிர்வீட்டுப் புறாக்களின்
இறகுகளில்
சுவாசம் உதிரும்
ஏகாந்தமான இடத்தில்
ஒரு துடிப்பிற்கும்
மறு துடிப்பிற்குமான
இரகசிய இடைவெளியில்
அடுத்த நிகழ்விற்கும்
அடுத்த நிகழ்விற்குமான
இடைவெளியில்
மேலும் இந்த கவிதைக்குள்
நீ
இருக்கும் இடத்தில்
நான் எப்போதும்
நின்று கொண்டேயிருக்கிறேன்
அன்பே
- தங்கேஸ்