கீற்றில் தேட...

இரவைப் போர்த்தி
நடந்தவைகளை
எப்படிக் கேட்டும்
சொல்லவில்லை
பகலிடம்
ஒளிந்த இரவு.

***

விடுதலையை விரும்பாத அன்றாடம்

ஒழுங்கின் பாசாங்கில்
வீழ்ந்துவிடும்
விட்டில்கள்
மினுக்க மறுக்கிறது
தாழாத் துயரமாக.

***

பிரகடனம்

என்னை ஒப்புக்கொடுத்தபின்
உனக்கானதாக மாற்றிடாத
கால விரயம்
எனக்குத்தான்
துயரமென்பதை
எப்பொழுது
அறியப் போகிறாய்
என் கைவயப்படாத
சுவாசத்திற்கிடையில்.

- ரவி அல்லது