கீற்றில் தேட...

ஒவ்வொருமுறை எண்ணும் போதும்
ஒன்று குறைகிறது
ஒன்று கூடுகிறது
அப்படி ஒரு கணக்கில்தான்
தூவப்பட்டிருக்கின்றன
நட்சத்திரங்கள்

*
மலை உச்சியில் நின்ற போது
இத்தனை காலம்
என்னுள்
மறைந்திருந்த பறவைகள்
பறக்கத் தொடங்கின

*
எப்போது இது ஆரம்பித்தது
மலையை உற்று நோக்கத்
தொடங்கியதிலிருந்து
சரி ஆகுமா
ஏன் சரி ஆக வேண்டும்
இல்ல... நல்லா இருந்த மனுஷன்
இப்பவும் நல்லா தான் இருக்கார்
மரம் மலைகள் பேசுவதை
மொழி பெயர்க்கிறவர்
கிடைப்பது அரிது

- கவிஜி