பயணித்த பாதங்களின்
வெடிப்புகள்
வானம் பார்த்த
பூமியின் மீதங்கள்.

எப்பொழுதாவது
எட்டிப் பார்க்கும்
மேகத்திற்கு சிநேகிப்பதற்கு
செடிகள் இல்லை
முன் சென்ற
மனிதர்களின்
வறண்டுபோன
மனதால்.

தோல் துவாரங்களில்
எட்டிப் பார்க்காத
வியர்வை
கண்ணீர் வழிந்தா
கவனம் ஈர்க்கப் போகிறது
துளி நீர்த் தேடும்
துயரத்தில்.

அரிதெனச் சுரக்கும்
எச்சிலைக் கூட்டி
ஆகாரமாக்கிடும் பாடில்
பெரும் மழையொன்று எப்பொழுதாவது
பெய்யலாம் தான்
உத்திரவாதமற்று உலவும்
இந்த
எலும்புக் கூடுகளுக்கு
வானம்
பொய்ப்பதில்லையெனப் புகழ்பாட.

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.