இப்பொழுதும்
இரைச்சலாகத்தான் இருக்கிறது.
அன்று அவர்கள் சொன்னது
இன்று இவர்கள் சொல்வதுமென
இடைவிடாத
எல்லாப் பிரயத்தனங்களுடனான
முஸ்தீபுகளில் இப்பொழுதும்.
சேமித்த வெறுப்புகளால்
கட்டமைக்கப்பட்ட நான்
நிதானமாக யோசித்த
வண்ணமிருக்கிறேன்.
நான் பலகீனமானவனென
அவர்களுக்குத் தெரிந்திருந்திருக்கிறது.
அவர்கள் மிகச்சரியாக
ஏதோவொரு அட்சரத்தை வீசி
என்னை வீழ்த்தத்தான் போகிறார்கள்
என்ற அச்சம்
என் அடியாழத்தில்
இருந்து கொண்டு தான் இருக்கிறது.
யாவிற்குமிடையில்
என்
ஒரு விரல் புரட்சியை
ஒழுங்காக செய்ய வேண்டும்
குறைந்தபட்ச
ஜனநாயக் கடமையில்
விடுமுறையென
தூங்கிவிடாமல்.

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.