இதுவரை
கனவில் வராதவர் யார்
மறதிகளின் சந்தம் மறைந்து
நினைவுகளின் வட்டம்
சுழல்கிறது
தாவித் திரியும்
காட்சித் துண்டுகளை
கனவாக்கி கலையாக்கும்
தூக்க வடிவம்
ஒரு மிகு புனைவில் தொங்கும்
தொங்கு பாலம் என்கிறேன்
வருகிற மாதிரி
சென்று விடும் நகர்வுகளை
நம்புவதா வேண்டாமா
விழிப்பு நிலையா
ஆழ் தூக்கத்தில் வீழ்ந்த நிலையா
புரண்டு பார்க்கச் செய்யும்
அனிச்சை
ஆளுயுர பூனை
அலுங்காமல்
திரும்பிப் படுக்கிறது
அவஸ்தை ஆசையாய் சூழ
இதுவரைக்கும் கண்களில்
பதியாதவரை
கனவில் காணும் போது
என்னவென்று சொல்வது
வந்த கனவை
வரவில்லை என்று நம்புவது போல
இதுவரை கனவில் வராதவரை
நினைக்கக் கூடுமோ
கண்களின் வார்த்தைகள்
உற்ற முகம் மறக்கிறேன்
உடல் எங்கோ பறக்கிறது....!

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.