கீற்றில் தேட...

முடிச்சுகளை அவிழ்க்கும்
சிக்கலில்
பின்னிய பொழுதில்
வேர் விட்டது இயலாமை.

திசைகளெங்குமான
நிராகரிப்பிற்கு
வாடிய பொழுதெல்லாம்
விளிம்பில் முளைத்த
செடியில் காணும்
கூட்டில் இருக்கிறது
குருவியொன்று
மனச் சொடுக்கெடுத்தவாறு.

முதல் வாரத்தைக் கடந்து
முனகியபடி கடக்கும்
நாட்காட்டிகளுக்கு
ஆமையின்
அணுக்க வேகமாகத்தான்
வாய்த்திருக்கிறது
வாழ்வியல் பெரும் பாடாக.

சிதைவுகளுடைய சேதார
சிக்கி முக்கிக் கணங்களுக்குள்
பூக்கிறது குறிஞ்சிப் பூக்கள்
கொஞ்ச முடியாவிட்டாலும்
கூடி இருப்பவர்கள் வியக்குமாறு.

- ரவி அல்லது