man_185இசைக்கும்
இரைச்சலுக்குமான
மிகமெல்லிய வெளியில்,
விட்டுக்கொடுத்தலுக்கும்
விட்டு விலகுவதற்குமான
உடன்படிக்கைகள் கையெழுத்தாகின்றன

நேசங்களின்
பொன்முட்டைகள் அறுபட்டு,
இறைந்து ஊர்கிறது
காற்றெங்கும் புரிதலின் தோல்வி

இயலாமையில் இலைகள்,
காய்ந்து சருகாகி
தெருவெங்கும் சுற்றி நடப்பதுபோல்
உபயோகமில்லாத நினைவுகளோடு
வெறுமனே நகர்கிறேன்

வினவுதலில்லாத பதில்களிடம்
தோற்றுப்போகும் வினாக்களிடமிருந்து
புரிதலை எப்பொழுதுமே
ஒற்றைப்படுத்த,
காலம் தயாராகவே!!

- ஆறுமுகம் முருகேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.